உலகில் அதிகமான மக்களால் சாப்பிடப்படும் “மாட்டு இறைச்சி பயன்கள்” பற்றி பார்க்கலாம்.
நாம் சாப்பிடும் உணவுகள் தான் நம் உடல் நலத்தினை தீர்மானிக்கின்றன. ஆரோக்கியமான உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
Table of Contents
மாட்டு இறைச்சி சாப்பிடலாமா
பொதுவாக அனைவருக்கும் இருக்கும் சந்தேகம் மாட்டு இறைச்சி நல்லதா? கெட்டதா?
மாட்டு இறைச்சி உடலுக்கு ஆரோக்கியமான ஊட்ட சத்துக்கள் நிறைந்த உணவாகும்.
ஆனால் மாட்டு இறைச்சியில் கொழுப்பு அதிகளவு நிறைந்திருப்பதால் அதிகளவு மாட்டு இறைச்சி சாப்பிடும் போது கொலஸ்ட்ரோல் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மற்ற இறைச்சிகளை போல மாட்டு இறைச்சியினையும் அளவோடு சாப்பிட்டு வந்தால் உடலுக்கு எந்த விதமான கெடுதலும் உண்டாகாது.
மாட்டு இறைச்சி பயன்கள்
மாட்டு இறைச்சியில் அனைத்து விதமான சக்திகளும் அடர்த்தியாக நிறைந்திருக்கின்றது. மாட்டிறைச்சி அதிகளவு கலோரிகளை கொண்டுள்ளது.
இந்த சிவப்பு இறைச்சியான மாட்டு இறைச்சியில் விட்டமின், இரும்பு, மினரல், சிங், புரதம், கொழுப்பு என பல சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
முக்கியமாக மாட்டு இறைச்சியில் இரும்பு சத்து நிறைந்திருப்பதால் இரத்த சோகை நோய் வராமல் பாதுகாக்கின்றது.
மாட்டு இறைச்சியில் நிறைந்துள்ள வைட்டமின் B12 இரத்த சிவப்பு அணுக்கள் அதிகம் உருவாகவும் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை பலப்படுத்தவும் உதவுகின்றது.
மாட்டு இறைச்சி அதிகம் சாப்பிடுபவர்களுக்கு வயதாகும் போது ஏற்படும் தசை இழப்பு, தோல் சுருக்கம் என்பன ஏற்படுவது தாமதமாகும்.
அதிகம் உடல் வேலை செய்பவர்கள் மாட்டு இறைச்சி சாப்பிட்டு வந்தால் உடல் களைப்படைவது குறைவாக இருக்கும்.
மாட்டு இறைச்சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றது. மேலும் இதயத்தை பலமாக்கவும் மாட்டு இறைச்சி சிறந்த உணவாகும்.
மாட்டு இறைச்சியில் கிடைக்கும் புரதம் தசைகளை வலுவடைய செய்யவும் கார்மோன்கள் அதிகமாக சுரப்பதற்கு உதவுகின்றது.