மண் வளம் காப்போம் கட்டுரை

mannvalam kappom katturai in tamil

எம் காலடியின் கீழ் இருப்பதால் மண்ணை துச்சமாக எண்ணக்கூடாது உயிர்களின் ஊற்றுக்கண்ணாக மண்ணே திகழ்கின்றது. அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆரம்ப புள்ளியும் இறுதி புள்ளியுமாக மண்ணே திகழ்கின்றது.

இன்று மண் வளம் மனிதனின் பல்வேறு நடவடிக்கைகளால் பாதிக்கப்படுகின்றன. இவற்றை தடுத்து மண் வளத்தை பாதுகாக்க வேண்டியது நம் அனைவரதும் கடமையாகும்.

மண் வளம் காப்போம் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • மண்
  • மண் வளம் பாதிப்படையக் காரணங்கள்
  • மண்வள தினம்
  • மண் வளத்தைப் பாதுகாக்கும் வழிகள்
  • முடிவுரை

முன்னுரை

மனிதன் புல்லாகிப், பூண்டாகி, புழுவாகி, குரங்காகி அதிலிருந்து உருவாகினான் எனக் கூறப்படுகின்றது. எனவே மனிதனது ஆரம்பப் புள்ளி மண்ணாக உள்ளது.

அதுமட்டுமல்லாது இறந்த ஓர் உடலை மண்ணோடு மண்ணாகி மக்கச் செய்கின்ற வேலையை செய்வது இந்த மண்ணே ஆகும். எனவேதான் மனிதன் இறுதி புள்ளியாகவும் உள்ளது எனலாம்.

மனிதனுக்கு மட்டுமில்ல அது உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் மண்ணே ஆரம்ப புள்ளியாகவும் இறுதி புள்ளியாகவும் விளங்குகின்றது.

மனிதனைப் போலவே மண்ணும் சுவாசிக்கின்றது. பல உணவுகளை எடுத்துக் கொள்கின்றது. பல நுண்ணுயிர்களையும், பயிர்களையும் வளரச் செய்கின்றது. இக்கட்டுரையில் மண்வளம் காப்பது பற்றி நோக்குவோம்.

மண்

மண் என்பது பல உயிரிகளின் தொகுதியாகும். ஒரு கைப்பிடி மண்ணில் இந்த உலகில் உள்ள மக்கள் தொகையை விட பல மடங்கு நுண்ணுயிர்கள் உயிர் வாழ்கின்றன.

இத்தகைய மண்னானது உயிரோட்டமாக இருப்பது மட்டுமின்றி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பயிர்களை முளைக்கச் செய்து இந்த உலகையே பசுமையாக வைத்திருக்க உதவுகின்றது. இத்தகைய மண்ணின் வளத்தை பாதுகாப்பது என்பது மக்களின் கடமையாகும்.

மண் வளம் பாதிப்படையக் காரணங்கள்

தேவையற்ற இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் போன்றனவற்றை அதிகப்படியான அளவில் மண்ணில் தெளிக்கும் போது மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் இறந்து போய் மண் தனது தன்மையை இழந்து விடுகின்றது. இன்று பருவநிலை மாற்றம் போல் மண்வளப் பிரச்சனையும் அதிகரித்து உள்ளது.

மக்கள் தொகை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்லும்போது அதற்கேற்ப விவசாய நிலங்களும் கணிசமான அளவு குறைவடைந்தே செல்கின்றது. காரணம் கிராமத்தில் உள்ள விவசாயிகள் நகரத்தை நோக்கி தொழில் சம்பந்தமாக நகர்கின்றனர்.

இதனால் கிராமிய விவசாய நிலங்கள் குறைவடைந்து வருகின்றன. மேலும் செயற்கை உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்ணின் உடைய பயன்பாடுகள் குறைவடைந்து தரிசு நிலங்களாக மாறி வருகின.

மண்வள தினம்

நாளுக்கு நாள் விவசாய நிலங்கள் கணிசமான அளவு குறைவடைந்து போவதால் இருக்கின்ற வளங்களை சேதாரமின்றி பாதுகாக்க வேண்டும்.

அதே சமயம் மண்வளம் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும் என்பதனை நோக்காகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டமைப்பான (FAO) Food and Agriculture Organization எனும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 5ஆம் தேதியை உலக மண்வள தினமாக 2002 முதல் கொண்டாடி வருகின்றது.

மண் வளத்தைப் பாதுகாக்கும் வழிகள்

அதிகப்படியான மரங்களை நாட்டி மண்ணரிப்பை தடுப்பதன் மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும், அதேபோல் விவசாயிகள் இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிப்பதுடன் ரசாயன உரங்களையும், பூச்சிக்கொல்லிகளையும் கணிசமான அளவு குறைக்க வேண்டும்.

தொழிற்சாலை கழிவுகளை முறையாக அகற்றி அதனை மன்னுடன் கலக்காமல் பாதுகாக்க வேண்டும்.

முடிவுரை

அடுத்த 50 ஆண்டுகளில் உலக மக்கள் தொகை பல மடங்காக பெருகப் போகின்றது. எனவே உலக மக்கள் தொகைக்கு எரிபொருள், உணவு தேவை இரண்டு மடங்காக உயரப் போகின்றது. அதேபோல் நீரின் தேவை 150 சதவீத அளவு கூடுதலாக உள்ளது. இதற்கு நாம் இப்போதிலிருந்தே மண்வளத்தை பாதுகாக்க வேண்டும்.

Read More: இயற்கை வேளாண்மை கட்டுரை

மண்ணரிப்பு என்றால் என்ன