நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன சாப்பிடலாம்

இந்த பதிவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.

நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது நோய்கள் எளிதில் நமது உடலில் தொற்றிக்கொள்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையான முறையில் அதிகரிப்பது தான் சிறந்தது.

இதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

  • சிறந்த உடற்பயிற்சி
  • நோய் எதிர்ப்பு சக்தி மிக்க உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன சாப்பிடலாம்.

1.பேரிச்சம்பழம்

உடலிற்கு தேவையான இரும்பு சத்து இதில் அதிகளவாக நிறைந்துள்ளது. இதை தேனில் ஊறவைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் வேகமாக அதிகரிக்கும்.

2. எலுமிச்சை

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மிக முக்கியமானது. வைட்டமின்-சி. எலுமிச்சையில் வைட்டமின்-சி அதிகம் நிறைந்துள்ளது.

3. பூண்டு

பூண்டு உடலுக்கு கெடுதல் செய்யும் பாக்ட்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களுக்கு எதிராக போராடும். மேலும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பூண்டின் பங்கு முக்கியமானது.

4. மஞ்சள்

இது இயற்கையாக கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் இரத்தத்தை சுத்திகரிக்கவும் உதவுகின்றது.

5. முட்டை

முட்டையில் வைட்டமின்-டி அதிகமாக நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதில் அதிகளவு புரதங்கள் நிறைந்திருப்பதால் திசுக்களை சீரமைக்கவும் உடலுறுப்புகள் வளரவும் உதவும்.

எலும்புகளை பலமாக்கவும் முட்டை உதவும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை உணவில் சேர்க்கவேண்டிய முக்கியமான உணவு முட்டை.

முட்டையை அவித்து சப்பிவிடுவது சிறந்த பலனை தரும்.

6. தேங்காய்

தேங்காய் எண்ணையும் தேங்காயும் அதிக ஆரோக்கியமான நன்மைகளை கொண்டவை. இதை அளவாக எடுத்துக்கொள்ளுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்.

7. வெங்காயம்

இது பக்ரியாக்கள் நச்சுக்கள் உடலில் சேராமல் தடுக்கின்றது. அத்துடன் புற்றுநோய்க்கு எதிராகவும் செயல்படுகின்றது. வெங்காயத்தை அதிகளவு உணவில் சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

8. பெரிய நெல்லிக்காய்

பெரிய நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஒக்ஸிட் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் அளவை அதிகரித்து உடலை தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாப்பு தரும்.

அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள் தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நல்ல பலனை அடையலாம்.

9. கொய்யாப்பழம்

கொய்யாப்பழத்தை ஏழைகளின் ஆப்பிள் என்று கூறுவார்கள். ஆப்பிளை விட அதிகமான சக்துக்கள் கொய்யாப்பழத்தில் நிறைந்துள்ளன.

இதில் புரதம், நார்சத்து, கால்சியம், வைட்டமின்-சி மற்றும் இரும்பு சத்து என பல நிறைந்துள்ளன.

கொய்யாப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலிமை பெரும்.

10. பாதம்

இரத்தத்தில் வெள்ளை அணுக்களின் அளவை அதிகரிக்க பாதம் முக்கிய பங்கு வகிக்கின்றது. பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடும் பொழுது சிறந்த பலனை பெற முடியும்.

இந்த பதில் உள்ள 10 உணவுகளை உங்கள் உணவில் சேர்ப்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தால் தான் வாழ்வில் வெற்றி காண முடியும்.