சொற்றொடர் என்றால் என்ன

sorthodar in tamil

மொழியானது ஆரம்ப காலத்தில் ஒலி, சைகை என்பவற்றை  அடிப்படையாகக் கொண்டே  முன்னோர்களால் உருவாக்கப்பட்டது.

அதன் பின்னர் படிப்படியாக வளர்ச்சி கண்டு எழுத்துக்கள் தோற்றம் பெற்று, பின்னர் அவற்றில் இருந்து மேலும் வளர்ச்சி கண்டு சொற்கள், சொற்றொடர் என்பன தோற்றம் பெற்றன.

சொற்றொடர் என்றால் என்ன

இரண்டு, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொற்கள் ஒன்றிணைந்து ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டு அமைவது சொற்றொடர் எனப்படும்.

சொற்றொடர் உதாரணம்:

  • கந்தன் பாடம் படித்தான்.
  • மாலா விளையாடினாள்.
  • அம்மா காலை உணவு சமைத்தார்.

தமிழில் வினை இல்லாமலும் சொற்றொடர்கள் அமையும். அவற்றுக்கான உதாரணங்கள் சில கீழே தரப்பட்டுள்ளது.

உதாரணம்:

  • என்னுடைய புத்தகம்.
  • நமது முதலாளி.
  • வெள்ளை நிற பூனை.

சொற்றொடர் அமைப்பு

சொற்றொடர் ஒன்றிலே காணப்பட வேண்டிய முக்கியமான விடயங்கள் பல காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை நோக்குவோம்.

எழுவாய்

எழுவாய் என்பது ஒரு வசனத்தில் செயலை காட்டும் சொல் மீது “யார், எது, எவை அல்லது யாவர்” என வினவும்போது கிடைக்கும் பதில் எழுவாயாகும்.

எழுவாய் எடுத்துக்காட்டு:

“சிவா கிரிக்கெட் விளையாடினான்.” இந்த வசனத்தில் யார் கிரிக்கெட் விளையாடினான்? என்ற வினாவை எழுப்புகின்ற போது, விடையாக கண்ணன் என்பது கிடைக்கின்றது. எனவே இவ்வசனத்தில் ‘கண்ணன்‘ என்ற சொல் எழுவாயாக காணப்படுகிறது.

“பறவைகள் மரத்தில் இருந்து பறந்தன.” என்ற வசனத்தில், எவை பறந்தன? என்ற வினாவை எழுப்புகின்ற போது, விடையாக “பறவைகள்” என்பது கிடைக்கின்றது இதிலிருந்து இவ்வாக்கியத்தில் பறவை என்ற சொல் எழுவாயாக காணப்படுகிறது.

செயப்படுபொருள்

செயப்படுபொருள் என்பது ஒரு வசனத்தில் “யாரை, எதை அல்லது எவற்றை “என்ற வினாக்களை வினவுகின்ற போது அதற்கு பதிலாக கிடைப்பவை செயற்படுபொருள் எனப்படும். ஒரு எழுவாய்க்கு அருகில் செயப்படுபொருள் எப்போதும் வருகிறது.

செயப்படுபொருள் எடுத்துக்காட்டு:

“அம்மா பாத்திரங்களை கழுவினார்.” என்ற வசனத்தில் அம்மா எதை கழுவினார்? என்ற வினாவை நாம் வினவுகின்ற போது நமக்கு விடையாக “பாத்திரத்தை” என்பது கிடைக்கின்றது. எனவே இந்த வசனத்தில் “பாத்திரத்தை” என்பது செயப்படுபொருளாக கையாளப்பட்டுள்ளது.

“அப்பா மேசைகளை செய்தார்.” என்ற வசனத்தில் அப்பா எவற்றை செய்தார்? என்ற வினாவை நாம் வினவுகின்ற போது, நமக்கு விடையாக “மேசைகளை” என்பது கிடைக்கின்றது. எனவே இந்த வசனத்தில் “மேசைகளை” என்பது செயப்படுபொருளாக கையாளப்பட்டுள்ளது

பயனிலை

ஒரு வசனத்தின் கருத்து முடிவு பெறும் இடம் பயனிலை எனப்படும். அதாவது ஒரு வினைச்சொல்லானது முற்றுப்பெறும் இடமாகும்.

பயனிலை எடுத்துக்காட்டு:

“இளமதி பாட்டு பாடினாள்.” என்ற வசனத்தில் “பாட்டு” எனும் வினையானது, முற்றுப்பெறும் இடமாக “பாடினாள்”என்பது அமைகிறது. எனவே இவ்வசனத்தில் “பாடினாள்” என்பது பயனிலையாக காணப்படுகிறது.

“பானுமதி நடனம் ஆடினாள்.” என்ற வசனத்தில் “நடனம்” எனும் வினையானது, முற்றுப்பெறும் இடமாக “ஆடினாள்”என்பது அமைகிறது. எனவே இவ்வசனத்தில் “ஆடினாள்” என்பது பயனிலையாக காணப்படுகிறது.

Read more: வேற்றுமை உருபு என்றால் என்ன

எதுகை என்றால் என்ன