தொண்டை புற்றுநோய் அறிகுறிகள்

thondai putrunoi arikurigal in tamil

உலக மக்களை அதிகம் பாதிக்கக்கூடிய மற்றும், மக்கள் பெரிதும் பயப்படக்கூடிய ஒரு நோயாக புற்றுநோய் உள்ளது. இது உடலில் எந்த பகுதியிலும் வரலாம். அதே போல் ஆண் பெண் இருபாலருக்கும் வரலாம். இருப்பினும் தொண்டைப் புற்று நோய் பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகம் ஏற்படுகின்றது.

தொண்டைப் புற்றுநோய் என்பது தலை மற்றும், கழுத்துப் பகுதியில் ஏற்படக்கூடிய புற்று நோய்களில் ஒன்றாகும். தொண்டைப் பகுதியிலுள்ள அதிகளவான செல்கள் கட்டுப்பாடு இல்லாத அளவிற்கு அதாவது அதிகமாக வளர்ச்சி அடைவதால் தொண்டைப் புற்றுநோய் ஏற்படுகின்றது.

தொண்டைப் புற்றுநோயானது தொண்டையில் பாதிக்கப்படும் இடங்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர்களினால் அழைக்கப்படுகின்றது.

தொண்டைப் புற்றுநோய் ஏற்படக் காரணங்கள்

புகையிலை உபயோகம், அதிகளவு மதுபாவனை போன்றவற்றால் புற்றுநோய் உருவாகின்றது. மேலும் வயது, பாலினம் மற்றும், மரபணுப் பாதிப்புகள், இரப்பைக் குடல் அலர்ஜி நோய், விட்டமின் ஏ குறைபாடு, பல் சுகாதாரமின்மை போன்றவற்றாலும் ஏற்படுகின்றது தவறான உணவு பழக்கவழக்கங்கள் கூட தொண்டைப் புற்றுநோயை உருவாக்கலாம்.

தொண்டை புற்றுநோய் அறிகுறிகள்

தொண்டை புற்றுநோயின் அறிகுறிகளானது புற்றுநோய் உள்ள இடத்தையும், அது தற்போது எந்த நிலையில் உள்ளது என்பதில் உள்ளது.

மேலும், தொண்டை புற்றுநோயினது அறிகுறியானது சாதாரண தொண்டை புற்றுநோய் அறிகுறிகளுடன் நம்மை குழப்பக் கூடியது. எனினும் தொண்டை புற்றுநோயின் அறிகுறியானது நீண்ட நாள் அறிகுறியாக இருக்கும்.

குரல் மாற்றம் அதாவது பேச்சுத் தெளிவின்மை அல்லது, பேசும் போது சிரமம் ஏற்படும்.

இருமல் அதாவது நீண்ட நாள் இருமல் இருக்கும்.

தொண்டை வலி, தொண்டையில் கட்டி, தொண்டைப்புண் மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் தொண்டைப் புண் ஆறாமல் இருக்கும்.

எந்தவிதமான புற்றுநோய் ஏற்பட்டாலும் திடீர் எடை குறைவு ஏற்படும்.

கண்கள், தாடை மற்றும், தொண்டையில் ஏற்படும் வீக்கம்.

திடீரென்று ஏற்படக்கூடிய காது வலி மற்றும் காதுகளில் சத்தம் கேட்பது.

மூச்சு விடுவதில் சிரமம் காணப்படும் இது எவ்வித மாத்திரை மருந்துகளுக்கும் குணமாகாமல் இருக்கும். தொடர்ந்து மூச்சு விடுதல் சிரம பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.

மார்பு வலி இது தொண்டைப் புற்று நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இந்த வலி மார்பு அல்லது முதுகில் இருக்கலாம்.

சளியில் ரத்தம், வாந்தி, எலும்பு வலி, சோர்வு மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிற அறிகுறிகளும் தொண்டைப் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக உள்ளன.

தொண்டைப் புற்றுநோய்க்கான சிகிச்சைகள்

ஹீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, இலக்கு சிகிச்சை, அறுவை சிகிச்சை, தலையீடு சிகிச்சை, மல்டிமோடலிடி சிகிச்சைகள் மற்றும், மறுவாழ்வு சிகிச்சை போன்ற பல வகைச் சிகிச்சைகள் இதற்கு உண்டு.

தொண்டைப் புற்று நோயைத் தடுப்பதற்கான வழிகள்

புகைத்தல் மற்றும் மதுப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

தொண்டைப் புற்றுநோய்க்கான அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கும் மேலாக அனுபவித்து வந்தால் உடனே மருத்துவரை நாட வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகளை உண்பதுடன், சிறந்த உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும்.

முறையான உடற்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும்.

Read More: அடி வயிறு வலி காரணம்

சர்க்கரை அளவு அதிகமானால் அறிகுறிகள்