கிணறு வேறு பெயர்கள்

கிணறு வேறு சொல்

கிணறு வேறு பெயர்கள்

மனிதர்கள் நீரைப் பல வழிகளில் இருந்து பெற்றுக் கொள்கின்றனர். அவ்வாறு நீரைப் பெற பயன்படும் ஒன்றே கிணறு ஆகும்.

கிணறு என்பது நிலத்தின் கீழ் நீர்ப்படுகைகளில் சேமிக்கப்பட்டிருக்கும் நிலத்தடி நீரை எடுப்பதற்கு வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒரு குழி ஆகும்.

அகழ்தல், தண்டு செலுத்தல், துளையிடல் போன்ற பல முறைகளைக் கையாண்டு கிணறுகள் வெட்டப்படுகின்றன. நிலத்தடி நீரின் மட்டத்தைப் பொறுத்து கிணற்றின் ஆழம் வேறுபடும்.

கிணறுகள் பொதுவாக வட்டமான குறுக்கு வெட்டுமுகம் கொண்டவையாக இருக்கும். கிணற்றில் காணப்படும் நீரை வெளியே எடுப்பதற்கு பல வழிமுறைகள் பயன்படுத்துகின்றன.

அவ்வகையில் நீரை வெளியே எடுப்பதற்கு குழாய், வாலிகள், கம்பி மற்றும் துலா போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

முன்பு விவசாயத்திற்காக நீர் இறைக்க விலங்கு வலுவை பயன்படுத்தி நீர் எடுக்கப்பட்டது. ஆனால் தற்காலத்தில் மின்சார வலுவை பயன்படுத்தி நீர் இறைக்கப்படுகின்றது.

கிணறு வேறு பெயர்கள்

  1. கேணி
  2. அசும்பு
  3. உறவி
  4. ஊற்று
  5. குழி
  6. கூவல்
  7. பூவல்
  8. துரவு

கிணற்றின் வகைகள்

அகழ் கிணறு

அண்மைக் காலம் வரை செயற்கையாக வெட்டப்படும் கிணறுகள் அதிகமாக அகழ் கிணறுகளாகவே இருந்தன. இத்தகைய கிணறுகள் மனிதர்கள் மண்வெட்டி, கடப்பாரை போன்ற கருவிகளுடன் உள்ளே இறங்கி அகழ்வதற்கு ஏற்ற வகையில் போதிய விட்டம் கொண்டவையாக இருந்தன.

இவ்வாறான கிணறுகள் இன்றுவரை மனித பயன்பாட்டிற்கு இலகுவான கிணறுகளாக காணப்படுகின்றன. பாறைகள் காணப்படும் இடத்தில் இக்கிணறுகள் அமைப்பது கடினமாகும்.

ஆனால் எல்லா சூழ்நிலையிலும் பயன்பாட்டிற்கு இலகுவான கிணறு அகழ் கிணறாகும்.

அடிதுளை கிணறு

இக்கிணறுகள் இறுக்கமில்லாத மண்ணுள்ள இடங்களுக்கு ஏற்றவை. இம்முறையில், கூரான முனை பொருத்தப்பட்டதும், பக்கங்களில் துளைகளைக் கொண்டதுமான ஒரு குழாய் தேவையான ஆழத்துக்கு அடித்து இறக்கப்படும். பின்பு அதில் இருந்து நீர் பெற்றுக்கொள்ளப்படும்.

குழாய் கிணறு

குழாய்க் கிணறு என்பது சிறிய விட்டம் கொண்ட ஆழமான ஒரு வகைக் கிணறு ஆகும். இது நிலத்தடி நீரைப் பெற்றுப் பயன்படுத்துவதற்கு உதவும் ஒரு செலவு குறைந்த முறையாகும்.

பாரம்பரிய கிணறுகள் போல இவற்றின் நீர்மட்டத்தைக் காண முடியாது. நிலத்தில் ஆழமாகத் துளையிட்டு இரும்பு அல்லது நெகிழி(Plastic) குழாய் புகுத்தி இக்கிணறு உருவாக்கப்படுகிறது.

நிலத்தடி நீர் அதிகளவில் உள்ள இடங்களில் தான் குழாய் கிணறுகள் பயன்படுத்தப்பட்டு நீர் எடுக்கப்படுகின்றது. ஆழமான நிலத்தடி நீரைப் பெற சிறந்த முறை இம்முறையாகும்.

Read more: உதடு கருமை நீங்க

முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்