கடுக்காய் பொடியின் பயன்கள்

Kadukkai Powder Uses In Tamil

இந்த பதிவில் ஆயிரம் அற்புதங்களை தரும் “கடுக்காய் பொடியின் பயன்கள்” பார்க்கலாம்.

“கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்”

“காலையில் இஞ்சி, கடும் பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் ஒரு மண்டலம் உண்டால் கோல் ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும் கோலை வீசி குலாவி நடப்பானே”

இது போன்ற கடுக்காய் பற்றிய பழமொழிகள் சித்தர்களால் சொல்லப்பட்டவை.

கடுக்காய் என்பது சாதாரண பொருள் அல்ல அது அமிர்தத்திற்கு சமம் என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.

கடுக்காயின் மேல் புறத்தோல் மட்டுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. அதன் விதைகள் சிறிது நச்சுத்தன்மை கொண்டவையாக இருப்பதனால் விதைகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

Kadukkai Powder Uses In Tamil

கடுக்காய் பொடியின் பயன்கள்

  • கண் பார்வை கோளாறுகள்
  • நாவறட்சி
  • மஞ்சள் காமாலை
  • தொழுநோய்
  • சுவை இன்மை
  • வாய்ப்புண், தொண்டைப்புண்
  • பித்த நோய்கள்
  • தேமல் மற்றும் தோல் நோய்கள்
  • உடல் உஷ்ணம்
  • சிறுநீர் குழாய்களில் உண்டாகும் கல் அடைப்பு
  • சர்க்கரை நோய்
  • உடல் பலவீனம்
  • மூட்டு வலி
  • உடல் பருமன்
  • இரத்த கோளாறுகள்
  • சிறுநீர் எரிச்சல்
  • வாதம்
  • ஆண்மை குறைவு

போன்ற பல வியாதிகளுக்கு அருமருந்தாய் இந்த கடுக்காய் பொடி விளங்குகின்றது.

உடல், மனம், ஆத்மா போன்ற எல்லாவற்றையும் தூய்மையாக்கும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு.

கடுக்காய் உண்பதால் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து கழிவுகளும் நீங்கி, மலச்சிக்கல், கபம் போன்றவை குணமாகி நீண்ட ஆயுளும் நமக்கு கிடைக்கும்.

உடல் செல்களை புதுப்பித்து உடல்களை வலுவாக்கி இளமை தோற்றத்தை கொடுக்கும்.

சக்கரை நோய் மற்றும் இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும் தன்மை கடுக்காய்க்கு உண்டு.

கடுக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து விதமான நச்சுக்களும் வெளியேறும்.

ஆறாத காயங்கள் உள்ளவர்கள் காயங்கள் மீது கடுக்காய் பொடியை பயன்படுத்தினால் கிருமி தொற்றுக்கள் நீங்கி காயங்கள் வேகமாக ஆறும்.

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.

பொதுவாக இரவு உணவுகளுக்கு பின்னர் அரை தேக்கரண்டி அளவு கடுக்காய் பொடி சாப்பிட்டு வந்தால் பெரும்பாலான நோய்கள் நம்மை நெருங்காமல் உடல் பலத்துடன் இருக்க முடியும்.

இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதினருக்கு பேன் மற்றும் பொடுகு போன்ற தொல்லைகள் இருந்தால் தேவையான அளவு தேங்காய் எண்ணையுடன் கடுக்காய் பொடியை சேர்த்து காய்ச்சி தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் பேன் பொடுகு போன்ற தொல்லைகள் நீங்கும்.

பற்களின் ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவு மற்றும் வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கடுக்காய் பொடியினை வெது வெதுப்பான நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தாலே போதுமானது இது சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றது.

ஆண்மை அதிகரிக்க கடுக்காய் பொடி சிறந்த மருந்தாகும்.

கடுக்காய் பொடி உண்ணும் முறை

கடுக்காய் பொடியினை சாதாரண நீரில் அல்லது வெது வெதுப்பான நீரில் கலந்து அருந்தலாம்.

அல்லது கடுக்காய் பொடியினை வாயில் போட்டு தண்ணீர் அருந்துவதன் மூலமும் எடுத்துக் கொள்ளலாம்.

வாதம், பித்தம், வாயுக்கோளாறு

வாதம், பித்தம், வாயுக்கோளாறு போன்ற குறைபாடுகள் உள்ளவர்கள் 10 கிராம் கடுக்காய் பொடியுடன் அதே அளவு சுக்கு திப்பிலி தோல்களை கலந்து காலை மாலை என தினமும் இரண்டு வேளைகள் அரை தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் இவை அனைத்தும் குணமாகும்.

நீரழிவு நோய்

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை தேக்கரண்டி கடுக்காய் பொடியை வாயில் போட்டு சிறிது நீர் பருகி வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

உடல் எடை குறைய கடுக்காய்

200 மில்லி தண்ணீருடன் கடுக்காய் பொடி 1 தேக்கரண்டி பெருஞ்சீரகம் 1 தேக்கரண்டி சேர்த்து கொதிக்க வைத்து தினமும் காலை மாலை குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

கடுக்காய் பொடி தீமைகள்

கடுக்காய் விதை நச்சுத்தன்மை கொண்டவை. கடுக்காய் தோல் மட்டுமே மருத்துவ குணங்கள் கொண்டவை. எனவே கடுக்காய் பொடி தயாரிக்கும் போது கடுக்காயின் மேல் தோலினை மட்டுமே பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நீங்கள் கடுக்காய் பொடி வாங்கும் போது அது கடுக்காய் விதைகளை தவிர்த்து கடுக்காய் தோலில் மட்டுமே செய்யப்பட்ட கடுக்காய் பொடி என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

கடுக்காய் பொடி தயாரிப்பது எப்படி

கடுக்காயினை உடைத்து நச்சுத்தன்மை கொண்ட அதன் விதையை நீக்கி விட்டு அதன் தோல் பகுதியை மட்டும் எடுக்க வேண்டும்.

கடுக்காய் சுத்தி செய்யும் முறை

இட்டலி சட்டியில் இட்டிலி போடும் இடத்தில் கடுக்காயின் தோல் பகுதியையும் தண்ணீர் ஊற்றும் இடத்தில் பாலினையும் ஊற்றி இருபது நிமிடம் வேக வைக்க வேண்டும்.

இவ்வாறு சுத்தப்படுத்தப்பட்ட கடுக்காயினை வெயிலில் நன்கு காய வைத்து பின்னர் அரைத்து பொடியாக்க வேண்டும்.

இவ்வாறு முறைப்படி சுத்தம் செய்யப்பட்ட கடுக்காயில் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இருக்காது.

You May Also Like:

கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க என்ன சாப்பிடலாம்