Vidukathaigal In Tamil With Answer

விடுகதைகள் மற்றும் விடைகள்

அறிவை கூர்மைப்படுத்த விடுகதைகள் சிறந்த வழியாகும். இந்த பதிவில் சிறந்த தமிழ் விடுகதைகளை (Vidukathaigal In Tamil With Answer) காணலாம்.

  • விடுகதைகள் மற்றும் விடைகள்
  • விடுகதைகள்
  • Vidukathaigal In Tamil With Answer

Vidukathaigal In Tamil With Answer

விடுகதைகள் மற்றும் விடைகள்

கேள்விகள் (1-10)

1.தலை இல்லாதவன் தலையை சுமப்பவன் அவன் யார் ?

2. காலடியில் சுருண்டிருப்பாள் கணீர் என்று குரலிசைப்பாள் அவள் யார் ?

3. அடி மலர்ந்து நுனி மலராத பூ அது என்ன ?

4. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை அது என்ன ?

5. அத்தையில்லா அத்தை என்ன அத்தை ?

6. அத்தானில்லா அத்தான் என்ன அத்தான் ?

7. அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும்  அது என்ன?

8. அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது  அது என்ன?

9. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?

10. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?

விடைகள் (1-10)

1. தலையணை6. மொடக்கத்தான்
2. மெட்டி7. இளநீர்
3. வாழைப்பூ8. புடலங்காய்
4. தலை வகிடு9. நிழல்
5. சித்தரத்தை10. சீப்பு

கேள்விகள் (11-20)

11. வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வாசல் இல்லை அது என்ன?

12. ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன?

13. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?

14. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?

15. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது அது என்ன?

16. தட்டச் சீறும் அது என்ன?

17. நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன?

18. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?

19. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?

20. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?

விடைகள் (11-20)

11. முட்டை16. தீக்குச்சி
12. உள்ளங்கையும் விரல்களும்17. தையல் ஊசியும் நூலும்
13. வாழைப்பழம்18. நிழல்
14. செத்தல் மிளகாய்19. நத்தை
15. சங்கு20. வழுக்கை

கேள்விகள் (21-30)

21. தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?

22. காற்றைக் குடித்து காற்றில் பறப்பான் அவன் யார்?

23. அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?

24. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?

25. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான் அவன் யார்?

26. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?

27. வாலால் நீர் குடிக்கும் வயால் பூச்சொரியும் அது என்ன?

28. காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான் அவன் யார்?

29. ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும் அது என்ன?

30. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?

விடைகள் (21-30)

21. பென்சில்26. தலைமுடி
22. பலூன்27. விளக்கு
23. அம்மி குளவி28. புல்லாங்குழல்
24. பூசனிக்கொடி29. ரத்தம்
25. கரும்பு30. கத்தரிக்கோல்

கேள்விகள் (31-40)

31. ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?

32. ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?

33. மூன்றெழுத்துப் பெயராகும் முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?

34. தொட்டால் மணக்கும் சுவைத்தால் புளிக்கும் அது என்ன?

35. சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் – அது என்ன?

36. கோவிலைச் சுற்றி கறுப்பு கோவிலுக்குள்ளே வெளுப்பு – அது என்ன?

37. கோழிக் குஞ்சு பொரிப்பது எப்படி? தாழி நெய்யை எடுப்பது எப்படி?

38. காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம் கடுந்தவம் செய்கிறான் அவன் யார்?

39. காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர் அது என்ன?

40. காலில்லாதவன் வளைவான் நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்?

விடைகள் (31-40)

31. துடைப்பம் (தும்புத்தடி)36. சோற்றுப்பானை
32. ஊதுபத்தி37. முட்டையிட்டு
33. பஞ்சு38. கொக்கு
34. எழுமிச்சம்பழம் (தேசிக்காய்)39. தவளை
35. வாழைப்பழம்40. பாம்பு

You May Also Like

விடுகதைகள் மற்றும் விடைகள்

விடுகதைகள் தமிழில் வேண்டும்