இந்த பதிவில் உள்ள “விடுகதைகள் தமிழில் வேண்டும்” உங்கள் அறிவை சிந்திக்க வைப்பதுடன் கூர்மையாக்கவும் உதவும்.
- விடுகதைகள் தமிழில் வேண்டும்
- விடுகதைகள் தமிழில்
- Vidukathai With Answer
Table of Contents
விடுகதைகள் தமிழில் வேண்டும்
கேள்விகள் ( 1 – 10 )
1. வினா இல்லாத ஒரு விடை அது என்ன விடை?
2. உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன?
3. கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண் கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்?
4. தாழ்ப்பாள் இல்லாத கதவு தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன?
5. பேசாத வரை நான் இருப்பேன் பேசினால் நான் உடைந்துவிடுவேன் நான் யார்?
6. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது நான் யார்?
7. முழு உலகமும் சுற்றி வரும் ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?
8. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன் ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன் நான் யார்?
9. கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை வாங்கியவனும் உபயோகிக்கவில்லை உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன?
10. ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது அக் குற்றம் என்ன?
விடைகள் ( 1 – 10 )
1. பணிவிடை | 6. தென்றல் |
2. தீக்குச்சி | 7. முத்திரை |
3. காலிங்பெல் | 8. நெருப்பு |
4. கண் இமை | 9. சவப்பெட்டி |
5. அமைதி | 10. தற்கொலை |
கேள்விகள் ( 11 – 20 )
11. முட்டையிடும் குஞ்சு பொரிக்காது கூட்டில் குடியிருக்கும் கூடு கட்டத் தெரியாது குரலில் இனிமையுண்டு சங்கீதம் தெரியாது அது என்ன?
12. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான் பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
13. மேலிலும் துவாரம் கீழிழும் துவாரம் வலதிலும் துவாரம் இடதிலும் துவாரம் உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன் நான் யார்?
14. சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள் அது என்ன?
15. செய்தி வரும் பின்னே மணியோசை வரும் முன்னே அது என்ன?
16. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன் நீரைக் கண்டு பதைபதைக்கிறான் அது என்ன?
17. கலர்ப்பூ கொண்டைக்காரி காலையில் எழுப்பிவிடுவாள் அது என்ன?
18. கந்தல் துணி கட்டியவன் முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான் அது என்ன?
19. கடலிலே கலந்து கரையிலே பிரிந்து தெருவிலே திரியும் பூ எது?
20. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு வெள்ளைக் காகம் நிற்குது அது என்ன?
விடைகள் ( 11 – 20 )
11. குயில் | 16. நெருப்பு |
12. சோளம் | 17. சேவல் |
13. பஞ்சு | 18. சோளக்கதிர் |
14. மின்விசிறி | 19. உப்பு |
15. தொலைபேசி | 20. உளுந்து |
கேள்விகள் ( 21 – 30 )
21. காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை அது என்ன?
22. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது அது என்ன?
23. உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்?
24. எண்ணெய் வேண்டா விளக்கு எடுப்பான் கை விளக்கு அது என்ன?
25. வித்தில்லாமல் விளையும் வெட்டாமல் சாயும் அது என்ன?
26. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு அது என்ன?
27. மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?
28. அந்திவரும் நேரம் அவளும் வரும் நேரும் அது என்ன?
29. மண்ணுக்குள் இருக்கும் மங்கைக்கு அழகு தரும் அது என்ன?
30. இரவும் பகலும் ஓய்வு இல்லை படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
விடைகள் ( 21 – 30 )
21. ஈ | 26. இடியாப்பம் |
22. ஈசல் | 27. தீபம் |
23. எறும்பு | 28. நிலா |
24. மெழுகுவர்த்தி | 29. மஞ்சள் |
25. வாழை | 30. இதயம் |
Vidukathai With Answer
கேள்விகள் ( 31 – 40 )
31. உடம்பெல்லாம் சிவப்பு அதன் குடுமி பச்சை அது என்ன?
32. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
33. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
34. மழை காலத்தில் பிடிப்பான் அவன் யார்?
35. காய்க்கும் பூக்கும் கலகலக்கும் காகம் இருக்கக் கொப்பில்லை அது என்ன?
36. கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்ன?
37. ராசா ராணி உண்டு நாடு அல்ல இலைகள் பல உண்டு தாவரம் இல்லை! அது என்ன?
38. கடலில் கலக்காத நீர் யாரும் குடிக்காத நீர் அது என்ன?
39. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் அது என்ன?
40. விடுமுறை இல்லாத கடை எது?
விடைகள் ( 31 – 40 )
31. தக்காளி | 36. வேம்பு |
32. கடல் | 37. காட்ச் |
33. கண் | 38. கண்ணீர் |
34. காளான் | 39. வாய் |
35. நெல்லு | 40. சாக்கடை |
கேள்விகள் ( 41 – 50 )
41. சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் அது என்ன?
42. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார் அவர் யார்?
43. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன?
44. வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்?
45. அடிக்காமல் திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?
46. வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?
47. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன?
48. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன?
49. முறையின்றித் தொட்டால் ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்?
50. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன?
விடைகள் ( 41 – 50 )
41. தீக்குச்சி | 46. நெருப்பு |
42. பாம்பு | 47. முதுகு |
43. கண் இமை | 48. சிலந்தி வலை |
44. ஆறு அல்லது அருவி | 49. மின்சாரம் |
45. வெங்காயம் | 50. சிலந்தி வலை |
கேள்விகள் ( 51 – 57 )
51. நடக்கவும் மாட்டேன் நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார் ?
52. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து அது என்ன?
53. உடல் கொண்டு குத்திடுவான் உதிரிகளை ஒன்றிணைப்பான் அது என்ன?
54. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது அது என்ன?
55. என்னைப் பார்க்க முடியும் ஆனால் எனக்கு எடை கிடையாது என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன் நான் யார்?
56. நான்தான் சகலமும் என்னைப் பார்க்க முடியாது பிடிக்கவும் முடியாது எனக்கு வாயில்லை ஆனால் நான் ஓசை எழுப்புவேன் நான் யார் ?
57. பேசுவான் நடக்கமாட்டான் பாடுவான் ஆடமாட்டான் அவன் யார் ?
விடைகள் ( 51 – 57 )
51. மணிக்கூடு | 55. துவாரம் |
52. தேன் | 56. காற்று |
53. ஊசி | 57. வானொலிப் பெட்டி |
54. மத்து |