விடுகதைகளும் விடைகளும்

Tamil Riddles With Answers

விடுகதைகளும் விடைகளும் (Tamil Riddles With Answers) : விடுகதைகள் என்றாலே அதை கேட்பதற்கும் சரி பதில் சொல்வதற்கும் சரி ஆர்வம் அதிகரிக்கும்.

கிராமங்களில் விடுகதைகளை நொடி என்றும் சொல்லுவார்கள்.

விடுகதைகளும் விடைகளும்

1. ஒரு தட்டில் 12 இட்லி 3 கரண்டி அது என்ன?

விடை: கடிகாரம்

2. பார்ப்பதற்கு ஐந்து கால் எண்ணுவதற்கு நான்கு கால் அது என்ன?

விடை: யானை

3. ஓய்வில்லாமல் சுற்றி வரும் அண்ணன் தம்பிகள் நின்று விட்டால் நமக்கு நேரம் சரியில்லை?

விடை: கடிகாரம்

4. எல்லோருக்கும் கால் தடம் உண்டு.. இந்த குள்ளனுக்கு மட்டும் அது கிடையாது அந்த குள்ளன் யார்?

விடை: எறும்பு

5. அண்ணன் தம்பி பன்னிருவரில் ஒருவன் மட்டும் குறை பிரசவம் அது என்ன?

விடை: மாசி மாதம் (பெப்ரவரி மாதம்)

6. வெண்மையாக இருப்பேன் பால் அல்ல.. விசேட நாட்களில் வீடுகளை பளிச்சிட வைப்பேன் நான் யார்?

விடை: சுண்ணாம்பு

7. பாளை போல பூ பூக்கும் பார்ப்போருக்கு விருப்பூட்டும் தலையிலே சூடாத பூ அது என்ன பூ?

விடை: வாழைப்பூ

8. யானை படுக்க நிழல் உண்டு. கடுகு மடிப்பதற்கு கூட இலை இல்லை அது என்ன மரம்?

விடை: சவுக்கு மரம்

9. சிறகில்லாத பறவை தேசமெங்கும் பறக்கும் பறவை அது என்ன பறவை?

விடை: கடிதம்

10. கிண்ணம் நிறைய தண்ணீர் இருக்கு குருவி குடிக்க வழியில்லை அது என்ன?

விடை: இளநீர்

11. தண்ணீரில் நீந்தி வரும் தரையிலே தாண்டி வரும் அது என்ன?

விடை: தவளை

12. ஓடையில் ஓடாத நீர் ஒருவரும் குடிக்காத நீர் அது என்ன?

விடை: கண்ணீர்

13. கந்தல் உடைக்காரி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?

விடை: சோளப்பொத்தி

14. கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டுவீடு.. ஓட்டு வீட்டுக்குள்ள வெள்ளை மாளிகை.. வெள்ளை மாளிகைக்கு நடுவில் குளம் அது என்ன?

விடை: தேங்காய்

15. நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன?

விடை: நாய்

Tamil Riddles With Answers

16. காலில் தண்ணீர் குடிப்பான் தலையில் முட்டையிடுவான் அவன் யார்?

விடை: தென்னை

17. ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல்படி அது என்ன?

விடை: மூக்கு

18. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?

விடை: மெழுகுவர்த்தி

19. வெள்ளை ராஜாவுக்கு கருப்பு உடை அது என்ன?

விடை: உழுந்து

20. எத்தனை தடவை சுற்றினாலும் தலை சுற்றாது அவனுக்கு அது என்ன?

விடை: மின்விசிறி

21. காற்றைக் குடித்து காற்றில் பறப்பான் அவன் யார்?

விடை: பலூன்

22. பேசுவது கேட்கும் பேசுபவர் தெரியாது அது என்ன?

விடை: வானொலிப்பெட்டி

23. நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையை சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்?

விடை: பென்சில்

24. முத்துக் கோட்டையிலே மகாராணி சிறைப்பட்டு இருக்கிறாள் அவள் யார்?

விடை: நாக்கு

25. பட்டுப்பை நிறைய தங்க காசு அது என்ன?

விடை: செத்தல் மிளகாய்

26. ஓடையிலே கருப்பு மீன் துள்ளி விளையாடுது அது என்ன?

விடை: கண்

27. பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?

விடை: கிளி

28. வழுவழு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார் அவர் யார்?

விடை: பாம்பு

29. இந்த கடைக்கு வார விடுமுறை என்பது கிடையவே கிடையாது அது எந்தக் கடை?

விடை: சாக்கடை

30. வீட்டுக்கு காவல் காத்து இவன் வெளியே போக மாட்டான்.. இவன் நண்பன் அடிக்கடி வெளியே சுற்றி வருவான் அது என்ன?

விடை: பூட்டு, சாவி

31. தொட்டு பார்க்கத்தான் முடியும்.. எட்டிக்கூட பார்க்க முடியாது அது என்ன?

விடை: முதுகு

32. அந்தரத்தில் தொங்குது சொம்பும் தண்ணீரும் அது என்ன?

விடை: இளநீர்

33. பையில் இது இருந்தால் வேறு எதுவும் பையில் இருக்காது அது என்ன?

விடை: கிழிசல்

34. உச்சி கொப்பில் சாட்டை தொங்குது அது என்ன?

விடை: முருங்கை காய்

35. ஒற்றை காதுக்காரன் ஓடி ஓடி வேலி அடைக்கிறான் அது என்ன?

விடை: ஊசி

36. பார்த்தல் கல் சூடுபட்டால் நீர் அது என்ன?

விடை: பனிக்கட்டி

37. பிடி இல்லாத குடையை தொட முடியவில்லை அது என்ன?

விடை: வானம்

You May Also Like:

Vidukathaigal In Tamil With Answer

விடுகதைகள் தமிழில் வேண்டும்