Vidukathaigal: சிறுவர் விடுகதைகள்

Siruvar Vidukathaigal In Tamil

Vidukathaigal: சிறுவர் விடுகதைகள் (Siruvar Vidukathaigal In Tamil) : விடுகதைகள் என்பது விடையை மறைத்து வைத்துக்கொண்டு சிந்தனையை தூண்டுவதை நோக்கமாக கொண்டு கேட்கப்படும்.

நமது குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சிந்திக்கும் ஆற்றலை தூண்டுவதன் மூலம் அவர்களின் அறிவு கூர்மையை வளர்க்க முடியும்.

Vidukathaigal: சிறுவர் விடுகதைகள்

1. டாக்டர் வந்தார் ஊசி போட்டார் காசு வாங்காமல் போனார் அவர் யார்?

விடை: நுளம்பு

2. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?

விடை: பூசணிக்கொடி

3. மனிதன் போடாத பந்தலிலே மலர்ந்து கிடக்கின்றன பூக்கள் அது என்ன?

விடை: நட்சத்திரம்

4. முகம் பார்த்து வளரும் முடிவில்லாமல் தொடரும் அது என்ன?

விடை: சொந்தம்

5. திரி இல்லாத விளக்கு உலகம் எல்லாம் தெரியும் விளக்கு அது என்ன?

விடை: சூரியன்

6. கடலில் கலக்காத நீர்.. யாராலும் குடிக்கவும் முடியாத நீர் அது என்ன நீர்?

விடை: கண்ணீர்

7. தொடாமல் அழுவான் தொட்டால் பேசுவான் அவன் யார்?

விடை: தொலைபேசி

8. பெட்டியை திறந்தால் பூட்ட முடியாது அது என்ன?

விடை: தேங்காய்

9. படபடக்கும் பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?

விடை: பட்டாசு

10. உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன?

விடை: பாய்

11. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன?

விடை: சிலந்தி வலை

12. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான் அவன் யார்?

விடை: அலாரம்

13. உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம் அது என்ன?

விடை: தராசு

14. பூவோடு பிறந்து நாவோடு கலந்து விருந்தாவன் மருந்தாவன் அவன் யார்?

விடை: தேன்

15. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணி இல்லை அது என்ன?

விடை: சிலந்தி

16. உடம்பெல்லாம் சிவப்பு அதன் குடுமி பச்சை அது என்ன?

விடை: தக்காளி

17. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும் தான் யார்?

விடை: நுங்கு

18. செய்தி வரும் பின்னே.. மணியோசை வரும் முன்னே அது என்ன?

விடை: தொலைபேசி

19. பார்க்கத்தான் கருப்பு.. ஆனால் உள்ளமோ சிவப்பு நமக்குத் தருவதோ சுறுசுறுப்பு அது என்ன?

விடை: தேயிலை

20. பல் துலக்காதவனுக்கு உடம்பு எல்லாம் பற்கள் அது என்ன?

விடை: சீப்பு

Siruvar Vidukathaigal In Tamil

21. கடலிலே கலந்து கரையிலே பிரிந்து தெருவிலே திரியும் பூ எது?

விடை: உப்பு

22. காதை திருகினால் பாடுவான் அவன் யார்?

விடை: ரேடியோ

23. நாள் முழுவதும் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கு உடல் மேல் கவசம் அது என்ன?

விடை: நத்தை

24. நீளவால் குதிரையின் வால் ஓடஓட குறையும் அது என்ன?

விடை: தையல் ஊசியும் நூலும்

25. இவன் ஒரு பேப்பர் தான் ஆனால் மதிப்போடு இருப்பான் அது என்ன?

விடை: பணம்

26. கசக்கி பிழிந்தாலும் கடைசி வரை இனிப்பான் அவன் யார்?

விடை: கரும்பு

27. ஓயாமல் இரையும் இயந்திரம் இல்லை.. உருண்டோடி வரும் பந்தும் இல்லை அது என்ன?

விடை: கடல்

28. மரத்தின் மேலே தொங்கும் மலை பாம்பு இல்லை அது என்ன?

விடை: விழுது

29. உணவை எடுப்பான் ஆனால் உணவை உண்ணமாட்டான் அவன் யார்?

விடை: அகப்பை

30. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி அவள் யார்?

விடை: முட்டை

31. ஆலமரம் தூங்க.. அவனியெல்லாம் தூங்க.. பெருங்கடல் தூங்க.. ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?

விடை: மூச்சு

32. ஓர் அரண்மனையில் 32 காவலர்கள் அது என்ன?

விடை: பற்கள்

33. வீட்டில் வளரும் என்னை திருடனுக்கு பிடிக்காது.. நான் யார்?

விடை: நாய்

34. காலையில் வந்த விருந்தாளியை இரவில் காணவில்லை அது யார்?

விடை: சூரியன்

35. பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன?

விடை: வெண்டிக்காய்

36. பிடுங்கலாம் ஆனால் நடமுடியாது அது என்ன?

விடை: தலைமுடி

37. எங்க அக்கா சிவப்பு குளித்தால் கருப்பு அது என்ன?

விடை: அடுப்புக்கரி

38. வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன?

விடை: சிரிப்பு

39. இடி இடிக்கும் மின்னல் மின்னும் மழை பெய்யாது அது என்ன?

விடை: பட்டாசு

40. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?

விடை: நிழல்

You May Also Like:

விடுகதைகள் வினா விடைகள்

விடுகதைகளும் விடைகளும்