புனித வெள்ளி என்றால் என்ன

good friday in tamil

புனித வெள்ளி அறிமுகம்

புனித வெள்ளியானது (Good Friday) பெரிய வெள்ளி, ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது.

இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறுகின்ற இவ்விழாவின் போது கிறிஸ்தவ கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

இவ்விழாவானது உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்களால் பரவலாக அனுஷ்டிக்கப்படுகின்றது.

இது கிறிஸ்தவர்களின் முக்கிய நாட்களில் ஒன்றாக கருதப்படுகின்றது. கிறிஸ்தவ மக்கள் நாள் முழுவதும் நோன்பினையும், தவத்தையும் புனித வெள்ளியன்று அன்று கடைப்பிடிப்பர்.

புனித வெள்ளி என்றால் என்ன

புனித வெள்ளி என்றால் என்ன

புனித வெள்ளி என்பது இயேசுகிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவு கூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும்.

கிறிஸ்தவ வழிபாட்டு விழாவின் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறுக் கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.

பெரியவெள்ளியன்று கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்ற மற்றுமொரு முக்கிய நிகழ்வு சிலுவைப்பாதையாகும்.

புனித வெள்ளி வரலாறு

மனிதர்கள் தாங்கள் செய்த குற்றங்கள் மற்றும் பாவங்களை மன்னிக்கும்படி கடவுளிடம் முறையிட்டு அதற்காக ஆடு மாடுகளைப் பலி கொடுப்பது உலகம் முழுவதும் பலரால் கடைப்பிடிக்கக் கூடிய நம்பிக்கையாக இருந்தது.

இதே நம்பிக்கையைக் கொண்டிருந்த யூத மதத்தில் பிறந்தவர் தான் இயேசு கிறிஸ்து. பிரிவினைவாதமும், பிற்போக்குவாதமும் புறையோடிக் கிடந்த யூத மதத்தில் கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்ற கடுமையான சட்ட திட்டங்களுக்கும் பஞ்சமில்லை.

யூதர்களைத் தவிர மற்ற இனத்தவர்கள் அனைவரும் கீழானவர்கள் என்ற தீண்டாமையைக் கற்பித்த யூத மதம் காயங்களுக்கும், நோய்களுக்கும் பாவங்களே காரணம் என்று போதித்தது.

ஆனால் எதிரிக்கும் அன்பு செய், ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்ற இயேசுவின் அன்பான அணுகுமுறையும், அனைவரும் சமம் என்று அவர் போதித்த ஒற்றுமையும் யூதர்களை கொதித்தெழ செய்தது.

பெரும் நோய்களால் பாடுபட்டவர்களினையும், கண் தெரியாதவர்களையும், நடக்கவே முடியாதவர்களையும் குணப்படுத்தினார்.

ஏசுபிரான் யூதர்களின் வணிக மயமாகிவிட்ட ஆலயங்களுக்கு எதிராகவும், வஞ்சிக்க பட்டவர்களுக்கு ஆதரவாகவும் செயற்பட்டு வந்தார்.

வருமானம் கேட்டு ஆண்டாண்டு காலமாக அனுபவித்து வந்த சொகுசு வாழ்க்கை நொடிப்பொழுதில் கரையும் மண் சுவராய் மாறிவிடுமோ என்ற அச்சம் கொண்டனர் யூதமதத் தலைவர்கள்.

அரசுகளுக்கு ஆலோசனை கூறும் இடத்தில் இருந்த யூத மதத் தலைவர்கள் கர்த்தராகிய இயேசுவின் மீது பலவிதமான பொய்ப் புகார்களை அடுக்கத் தொடங்கினர்.

அவரை கைது செய்ய முடிவு செய்த யூத மதத் தலைவர்கள் இயேசுவின் 12 சீடர்களில் ஒருவரான யூதாசுக்கு முப்பது வெள்ளிக் காசு கொடுத்து அவரின் இருப்பிடத்தை காட்டச் சொல்லி அழைத்துச் சென்றனர்.

கொற்சமெனித் தோட்டத்தில் காவலருடன் சென்ற யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்தார். யூதாஸால் காட்டிக் கொடுக்கப்பட்ட இயேசு பிலாத்து மன்னன் முன் நிறுத்தப்பட்ட போதும் அவர் மீது குற்றம் கண்டுபிடிக்கப்படவில்லை.

யூத மதத் தலைவர்களின் எதிர்ப்புக்கு ஆளாக வேண்டாம் என நினைத்த மன்னன் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவே மரணதண்டனை விதித்தார்.

அதன்படி முள் கிரீடம் அணிவிக்கப்பட்டு சிலுவையைச் சுமக்கச் செய்து கல்வாரி மலையில் உச்சியில் சிலுவையில் அறையப்பட்டார்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட துன்ப நிகழ்வை நினைவுகூரும் வகையிலும் அதற்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது புனித வெள்ளி.

You May Also Like :
குருத்தோலை ஞாயிறு என்றால் என்ன
கைத்தொழில் கட்டுரை