தூய்மை பற்றிய கட்டுரை

Thooimai Katturai In Tamil

இந்த பதிவில் “தூய்மை பற்றிய கட்டுரை” பதிவை காணலாம்.

தூய்மை கேட்டினால் நாட்டில் அனைவருக்கும் பாதிப்புக்கள் அதிகமாகும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது.

தூய்மை பற்றிய கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. தூய்மையும் வாழ்வும்
  3. தூய்மையின் சிறப்பு
  4. மனத்தூய்மை
  5. தூய்மை இல்லாமையின் விளைவு
  6. கொரோனாவும் தூய்மையும்
  7. முடிவுரை

முன்னுரை

மகாத்மா காந்தியின் பிறந்த தினமான 2 அக்டோபர் 2014 அன்று தூய்மை இந்தியா திட்டமானது நாடெங்கிலும் மிகுந்த ஆர்வத்துடன் துவங்கப்பட்டது. 62000 கோடி செலவில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட ஒரு பாரிய திட்டமாகும்.

இன்றளவும் இந்தியாவில் அதிகரித்து வரும் தூய்மை கேட்டினால் உண்டாகும் பாதிப்புக்களை தடுக்க வேண்டும் என்ற நோக்கிலே தான் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது. தூய்மை என்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் மிகவும் அவசியமானதொன்றாகும்.

இதனை கடைப்பிடிக்காமையினால் தான் பல பாதிப்புக்களை நாம் எதிர்கொள்ள நேரிடுகிறது. இக்கட்டுரையில் தூய்மை என்பதன் சிறப்புக்களும் அவசியம் போன்றனவும் நோக்கப்படுகிறது.

தூய்மையும் வாழ்வும்

ஒரு தூய்மையான நதியின் அழகு எவ்வாறிருக்கும்? அது போல வாழ்வில் தூய்மை இருந்தால் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் தானாக உருவாகும்.

இரைச்சலும் வாகன புழுதியும் சாக்கடை நாற்றமும் நிறைந்த இடங்களில் நாம் வாழ முற்படுகின்றோமா? அல்லது அமைதி நிறைந்த தூய்மையான சூழலில் வாழ விரும்புவோமா?

அனைவரும் தூய்மையான சூழலை தான் விரும்புவோம். தூய்மையான வாழ்வு என்பது ஒரு அழகியல் இதனை மனிதன் கடைப்பிக்கும் போது வாழ்வு மேலும் அழகாகின்றது.

தூய்மையின் சிறப்பு

தூய்மை உள்ள இடத்தில் தான் தெய்வீகம் இருக்கும். இறைவனை காண செல்லும் ஆலயங்கள் மிக தூய்மையாக காட்சி தரும். ஆதலால் தான் மன அமைதி தேடி மக்கள் ஆலயங்களுக்கு செல்கிறார்கள்.

தூய்மையான பள்ளிகள் தான் மாணவர்களுக்கு தெளிவான அறிவை வழங்குகிறது. இயல்பு வாழ்க்கையில் அகத்தாலும் புறத்தாலும் தூய்மையை கடைப்பிடிப்பவர்கள் சமூகத்தில் தனி சிறப்பு வாய்ந்தவர்களாக காணப்படுவர். தூய்மையை பேணி வாழ்வில் உயர நாம் முயலவேண்டும்.

மனத்தூய்மை

வெளியில் சுத்தம் இருப்பதனை போலவே மனிதர்கள் மனதளவிலும் தூய்மையை கடைப்பிடிக்க வேண்டும். உண்மை நேர்மை மனிதநேயம் போன்ற குண இயல்புகள் ஒரு மனிதனின் மனத்தூய்மையை வெளிப்படுத்தும்.

மனதில் தூய்மை உடையவர்கள் ஆட்சியாளர்களாக வந்தால் இந்த தேசம் வளர்ச்சியும் தூய்மையும் அடையும்.

மற்றவர்களிடத்தில் தூய்மையை எதிர்பார்க்கும் நாம் முதலில் மனத்தூய்மை உடையவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதர்களும் மாறுகின்ற போது நாடு தானாக மாறி விடும்.

தூய்மை இல்லாதவற்றின் விளைவு

மனிதர்கள் தூய்மையை கடைப்பிடிக்காது மேற்கொள்கின்ற ஒவ்வொரு நடவடிக்கைகளும் நாட்டை அழுக்காக மாற்றி விடும்.

தூய்மையான ஆறுகளில் கழிவுகளை கொட்டுவதனால் அதன் அழகு கெட்டுபோகும். குடிநீரும் மாசடையும் தமிழ் நாட்டில் கூவம் ஆறு முன்பொரு காலத்தில் அழகான நதியாக இருந்தது இன்று இவ்வாறான நிலைக்கு மாறியுள்ளது.

தூய்மை இல்லாமைக்கு இது மிகச்சிறந்த எடுத்து காட்டாக சொல்ல முடியும். தூய்மை இல்லாமை சூழலின் அழகை கெடுப்தோடு நோய்களையும் மனிதர்களுக்கு உருவாக்கும்.

முடிவுரை

இந்தியாவில் தூய்மை கேடு நாளுக்கு நாள் அதிகரித்து செல்வதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. தூய்மை கேட்டினால் நாட்டில் அனைவருக்கும் பாதிப்புக்கள் அதிகமாகும் சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. இதில் நாட்டு மக்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது.

சிறந்த முறையில் கழிவுகளை முகாமை செய்தல், சுயதூய்மையினை பேணுதல் மூலமாக தூய்மையான சமூகத்தை உருவாக்க எம்மால் முடிந்த ஆதரவை அனைவரும் வழங்க வேண்டும்.

You May Also Like :

பிளாஸ்டிக் மறுசுழற்சி கட்டுரை

பள்ளியில் தூய்மை கட்டுரை

தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை