காலம் பொன் போன்றது கட்டுரை

Kaalam Pon Pondrathu Katturai Tamil

இந்த பதிவில் “காலம் பொன் போன்றது கட்டுரை” பதிவை காணலாம்.

வாழ்க்கை ஒரு முறைதான் அது மீண்டும் எமக்கு கிடைத்து விடாது. எனவே காலத்தை சரியாக நாம் பயன்படுத்தி கொள்ள சித்தமாய் இருக்க வேண்டும்.

காலம் பொன் போன்றது கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. காலமும் கடமையும்
  3. காலத்தின் அருமை
  4. நேரத்தை சரியாக பயன்படுத்தல்
  5. நேரத்தை விரயமாக்குவதன் விளைவு
  6. இன்றைய வாழ்வும் நேர விரயமும்
  7. முடிவுரை

முன்னுரை

“காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது” என்கிறார் பேரறிஞர் அண்ணா மக்களின் வாழ்வுக்காலம் குறைவானது. இளமைப்பருவத்தில் ஓய்வு முதுமை என அதிகளவான காலம் குறைவடைந்துவிடுகிறது.

அவற்றில் நாம் பயன்படுத்துகின்ற காலம் மிகவும் சொற்ப அளவாகவே உள்ளது. எஞ்சுகின்ற மிகுதி காலம் தான் நாம் வாழ்கின்ற காலமாகும்.

வாழும் காலத்தில் நாம் அதனை பயனுடையதாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இக்கட்டுரையில் காலத்தின் அவசியம் பற்றி நோக்கலாம்.

காலமும் கடமையும்

காலம் ஒரு போதும் யாருக்காகவும் நிற்காது. இதனால் தான் எமது முன்னோர்கள் “இளமையில் கல்” என்று சொல்வார்கள். காலம் கடந்த பின் கல்வி கற்பதனால் பயனில்லை என்பது பொருள்.

பருவத்தே பயிர் செய்ய வேண்டும் ஆகவே தான் சரியான விளைவை பெற்றுக்கொள்ள முடியும். அதுபோல வாழ்வில் அந்த அந்த சந்தர்ப்பங்களில் நாம் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்ய வேண்டும்.

இதனையே “காற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்று சொல்வார்கள் காலம் கடந்த பின்னர் வருந்துவதால் எந்த பயனும் கிடைக்கப்போவதில்லை.

காலத்தின் அருமை

ஒரு வயலில் விதைக்க வேண்டிய காலம் தவறி நெல்லை விதைப்பதனால் எம்மால் அறுவடையை பெற்று கொள்ள முடியாது. அது போல இளமையில் வறுமையில் வாடி விட்டு முதுமையில் செல்வமும் செழிப்பும் கிடைப்பதுவும் பயனற்றது.

இது பசியில் வாடும் போது கிடைக்காத உணவு இறந்த பின்னர் கிடைப்பதை போன்றது. எதுவாக இருந்தாலும் அந்த காலத்தில் கிடைப்பதனால் தான் அதற்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஒருவருக்கும் வெள்ளி பதக்கம் வென்றவருக்கும் ஒரு சில செக்கன்கள் தான் நேர வித்தியாசம் நேரம் மிகவும் பெறுமதியானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

நேரத்தை சரியாக பயன்படுத்தல்

எமக்கு இந்த வாழ்க்கையையும் இவ்வளவு பெறுமதியான நேரத்தையும் கொடுத்த இறைவன் அதை நாம் எவ்வாறு பயன்படுத்தினோம் என்று கேட்டால் அதற்கு சரியாக பதில் அளிக்க கூடியவர்களாக நாம் இருக்க வேண்டும்.

ஒரு 24 மணி நேரம் கொண்ட நாளில் காலையில் எழுந்ததில் இருந்து எமது காலை கடமைகளை செய்தல், பின்பு உடற்பயிற்சி செய்தல், காலை உணவு உண்ணுதல், எமது வேலைகளை செய்தல், பின்பு வேலை முடிந்த பின்னர் மாலையில் விளையாடுதல்

மற்றும் உடற்பயிற்சி, பின்பு குடும்பம் மற்றும் நண்பர்களுடன் பேசுவதற்காக நேரம் ஒதுக்குதல், பின்பு இரவில் சிறிது படிக்க நேரம் ஒதுக்குதல்,

பின்பு சரியான நேரத்துக்கு தூங்குதல் என வாழ்க்கையில் நேரத்தை சரியாக திட்டமிட்டு பயன்படுத்தி கொள்ள வேண்டும். நேரத்தை சரியாக முகாமை செய்தல் ஒரு சிறந்த பழக்கமாகும்.

நேரத்தை விரயமாக்குவதன் விளைவு

நேரத்தை சரியாக பயன்படுத்தாமல் அதனை விரயமாக்குவதனாலும் சோம்பல் நிறைந்த வாழ்வு வாழ்பவர்களால் வாழ்வில் எதனையும் சாதிக்க முடியாது. இதனால் பொது வாழ்வில் மன அழுத்தமும் தேவையற்ற கவலைகளும் உருவாகும்.

வீண்கவலைகள் அவர்களிடம் தாழ்வு மனப்பாண்மையினை உருவாக்கும். இவ்வகையான மனநிலைகளை உடையவர்களால் வெளி உலகத்தையும் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களையும் அனுபவிக்க முடியாமல் போய்விடும்.

இன்றைய வாழ்வும் நேர விரயமும்

இன்றைய வாழ்வு அதிகம் தொழில்நுட்ப சாதனங்களின் வளர்ச்சியாலும் சமூக வலைத்தளங்களினாலும் முடங்கி போயுள்ளது.

மாணவர்களும் சரி வேலை பார்ப்பவர்களும் சரி அதிகளவான நேரத்தை சமூக வலைத்தளங்களில் களிப்பதனால் அவர்களது பொன்னான நேரத்தை வீண்விரயமாக்கி கொண்டிருக்கின்றனர். அழகான இந்த உலகத்தை பார்க்க தவறுகின்றனர். பயனுள்ள புத்தகங்களை வாசிக்க தவறுகின்றனர்.

இவ்வாறு வாழ்வின் அர்த்தமுள்ள விடயங்களுக்காக நேரம் ஒதுக்காமல் சமூக வலைத்தளங்களில் தமது நேரத்தை வீணாக்கி கொண்டிருப்பது கவலை தருவதாக இருக்கின்றது.

முடிவுரை

இந்த வாழ்க்கை மிகவும் குறுகியது வாழும் காலமும் இளமை காலமும் மிகவும் குறுகிய காலமாகவே உள்ளது. எனவே இந்த காலத்தில் நாம் எம்மால் முடிந்த வரையும் கிடைக்கின்ற நேரத்தை பயனுடையதாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நிறைய விடயங்களை கற்று கொள்ள வேண்டும். நல்ல அனுபவங்களை பெற்றுவிட வேண்டும். ஏனென்னறால் வாழ்க்கை ஒரு முறைதான் அது மீண்டும் எமக்கு கிடைத்து விடாது. எனவே காலத்தை சரியாக நாம் பயன்படுத்தி கொள்ள சித்தமாய் இருக்க வேண்டும்.

You May Also Like :

தூய்மை இந்தியா மாணவர்களின் பங்கு கட்டுரை

சமூக வலைத்தளங்கள் பற்றிய கட்டுரை

காவல்துறை உங்கள் நண்பன் கட்டுரை