பள்ளியில் தூய்மை கட்டுரை

Palli Thooimai Katturai In Tamil

பள்ளியில் தூய்மை கட்டுரை

இந்த பதிவில் “பள்ளியில் தூய்மை கட்டுரை” பதிவை காணலாம்.

பள்ளிகள் தூய்மையாக இருக்க வேண்டும் இதனூடாக தான் எதிர்காலத்தில் இந்தியா தூய்மையாக மாறும்.

பள்ளியில் தூய்மை கட்டுரை

குறிப்பு சட்டகம்

  1. முன்னுரை
  2. பள்ளிநாட்கள்
  3. பள்ளிகளின் அமைப்பு
  4. கொரோனா கற்றுதந்த தூய்மை
  5. தூய்மையும் கல்வியும்
  6. தூய சிந்தனைகள்
  7. முடிவுரை

முன்னுரை

எமது வாழ்நாளில் மறக்கமுடியாத பல அனுபவங்களையும் பல நினைவுகளையும் பாடங்களையும் கற்று தந்த புனிதமான இடம் பள்ளிக்கூடம் தான்.

பாடசாலைகள் தான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடமாக இருக்கிறது. வாழ்க்கைக்கு அவசியமான கல்வியையும் நல்ல பழக்கவழக்கங்களையும் கற்றுக்கொள்கின்ற இடம்.

நல்ல நண்பர்கள், மகிழ்ச்சியான விளையாட்டு என கவலைகள் இல்லாத உலகம் இந்த புனிதமான இடம் தூய்மையாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.

இக்கட்டுரையில் தூய்மை பள்ளி எவ்வாறு இருக்கும் என்பது பற்றி நோக்கப்படுகிறது.

பள்ளி நாட்கள்

இன்றளவும் நாம் வாழ்வில் மிகவும் தவறவிட்ட வாழ்வாக நினைப்பது பாடசாலை வாழ்க்கை என்பதே பலரின் பதிலாக இருக்கும்.

இது தான் ஒரு மனிதனின் வாழ்வின் ஆரம்பமாக இருக்கிறது. கள்ளம் கபடமற்ற குழந்தைகள் கல்வி கற்பதற்காக ஆர்வத்துடன் வருகின்ற இடம்.

எமது அறிவு கண்களை திறக்கும் நல்ல ஆசிரியர்கள் கிடைக்கின்ற இடம். கண்டிப்பும் அக்கறையும் நிறைந்த ஆசிரியர்களால் திறமைகளும் நல்ல ஒழுக்கமும் வளர்க்கப்படுகின்ற பசுமையான இடம் என்பதால் பள்ளி நாட்களை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

பள்ளி அமைப்பு

ஒரு பள்ளி அமைதியான சூழலில் அமைந்திருக்க வேண்டும். இயற்கை அழகோடு சேர்ந்த சூழலாக அமைந்திருப்பது மாணவர்களின் கற்றலுக்கும் மகிழ்ச்சிக்கும் ஏதுவாய் அமையும்.

அத்தோடு பசுமையான தூய்மையான சுற்றுச்சூழலை கொண்டதாக இருக்க வேண்டும், நல்ல குடிநீர் வசதி, காற்றோட்டம் உள்ள வகுப்பறைகள், விளையாடுவதற்கான உபகரணங்கள், மைதானங்கள் என்பனவும் காணப்பட வேண்டும்.

அப்போது தான் கல்வியிலும் இணைபாடவிதான செயற்பாடுகளிலும் மாணவர்களால் விரும்பி ஈடுபட முடியும்.

கொரோனா கற்று தந்த தூய்மை

உலகமெங்கும் பரவி மக்களை பலிகொள்ளும் கொரோனா நோய் தொற்று எமக்கு நிறைய பாடங்களை கற்றுத் தந்திருக்கின்றது. இந்த நோய்தொற்றால் பள்ளிகள் பலகாலம் மூடப்பட்டன.

இனி வரும் காலங்களிலாவது பாடசாலை சூழலை மிகவும் தூய்மையாக பேணுவத்துடன் மற்றும் எமது சுய தூய்மை செயல்களை பேணி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

தூய்மையும் கல்வியும்

தூய்மை இருக்கின்ற இடத்தில் தான் கல்வி தெய்வம் ஆகிய “கலைமகள்” குடிகொள்வாள் என்பது அனைவரும் அறிவர் ஆதலால் கல்வி கூடங்கள் எப்போதும் தூய்மையாக இருக்க வேண்டும்.

அப்போது தான் மாணவர்கள் மனதில் நல்ல எண்ணங்கள் உருவாகும். திறன்கள் வளரும் மகிழ்ச்சியாக கல்வி கற்க முடியும்.

தமது வகுப்பறையினையும் பாடசாலையினையும் சுத்தமாக வைத்து கொள்வது மாணவர்களின் தலையாய கடனாகும்.

தூய்மையான பள்ளிகள் மிகவும் சிறந்த மாணவர்களை இந்த சமூகத்துக்கு தரும் அந்த மாணவர்கள் எதிர்காலத்தில் தமது நாட்டையும் வீட்டையும் தூய்மையாக வைத்திருப்பார்கள்.

தூய சிந்தனைகள்

கல்வி கூடங்கள் எப்போதும் மாணவர்களிடத்தே கல்வியை விடவும் ஒழுக்கத்தை அதிகம் போதிக்கின்றன. மாணவர்களின் மனதில் தூய்மையான சிந்தனைகள் எப்போதும் இருக்க வேண்டும்.

வாய்மை, நேர்மை, விட்டுகொடுத்தல், சகோதரத்துவம், ஒற்றுமை. விடாமுயற்சி போன்ற உயரிய சிந்தனைகள் அவர்களிடத்தே விதைக்கப்பட வேண்டும்.

“இளமையில் கல்வி சிலையில் எழுத்து” என்று கூறுவார்கள் சிறுவயதில் அவர்கள் மனதில் விதைக்கப்படுகின்ற தூய சிந்தனைகள் அவர்களை வாழ்வனைத்தும் வழிநடாத்தும்.

முடிவுரை

இந்த சமூகம் என்ற விடயத்தை பிரதிபலிப்பவை பள்ளிகள் தான் இங்கு கல்வி கற்று வெளியேறுகின்ற மாணவர்கள் தான் நாளைய சமுதாயத்தை உருவாக்க இருக்கிறார்கள்.

பாடசாலையில் ஒரு மாணவன் எவ்வாறு தூய்மையை கற்று கொள்கிறானோ அது போலவே எதிர்காலத்தில் இந்த சமூகத்திற்கும் பங்காற்றவிருக்கிறான்.

எனவே பள்ளிகள் தூய்மையாக இருக்க வேண்டும் இதனூடாக தான் எதிர்காலத்தில் இந்தியா தூய்மையாக மாறும்.

You May Also Like :

பிளாஸ்டிக் மறுசுழற்சி கட்டுரை

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழிமுறைகள் கட்டுரை