முகம் வெள்ளையாக இயற்கை வழிகள்

mugam vellaiyaga tips in tamil

மனிதனாகப் பிறந்த எல்லோருமே வெள்ளை நிறத் தோற்றத்துடன் இருப்பதில்லை. சிலர் கருப்பு நிறத்துடன், வேறு சிலர் பொது நிறத்துடனும் பிறக்கின்றார்கள், பிறக்கும் போது இருக்கும் நிறமானது நாளடைவில் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றம் அடைந்து கொண்டே வரும்.

பிறப்பில் வெண்மையாக இருப்பவர்கள் கூட வெயிலின் சூட்டினால் கருமையாவதுண்டு. நாளடைவில் அதுவே அவர்களது உண்மை நிறமாகவும் மாறிவிடுகின்றது.

குறிப்பாக சூரியனின் ஒளிக்கதிர்கள் உடலில் படுவதினால் மெலனினின் அளவினைக் குறைத்து விடுகின்றது. மெலனின் என்பது சருமத்தில் இருக்கும் நிறத்தினை தக்க வைத்துக்கொள்ள உதவுகின்றது. சூரிய வெயிலில் அதிகம் படும் இடங்களான முகம், கை, கால், கழுத்து பகுதிகள் கருத்துப் போயும் பிற இடங்கள் சாதாரண நிறுத்துடனும் இருக்கும்.

முகம் வெள்ளையாக மாற வேண்டும் என்பதற்காக மக்கள் பலரும் செயற்கை அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். இது நாளடைவில் தோல் வியாதிகள் பலவற்றை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய பல வழிகள் உள்ளன. அவற்றைப் பற்றி விரிவாக நோக்கலாம்.

முகத்தை வெள்ளையாக்கும் இயற்கை வழிகள்

கற்றாழை

கற்றாழையானது முக அழகிற்கு பயன்படுத்தக்கூடிய மிகவும் அருமையான இயற்கை வழிமுறையாகவும், சருமத்தின் அனைத்து பிரச்சினைகளுக்குமான அருமருந்தாகவும் காணப்படுகின்றது.

கற்றாழை இலையின் ஜெல்லை எடுத்து அதில் சிறிதளவு பாதாம் எண்ணெய் சேர்த்து முகம் மற்றும், கழுத்து பகுதியில் மசாஜ் செய்து இருபது தொடக்கம் 30 நிமிடங்கள் ஊறவைத்து பின் முகத்தை கழுவிக் கொண்டால் முகம் பளபளப்பாகுவதுடன் வெள்ளையாகும்.

எலுமிச்சை

எலுமிச்சையானது சிறந்த அழகு சாதனப் பொருளாக உள்ளது. இது சருமத்தில் உள்ள அழுக்கைப் போக்கி முகத்தை வெண்மையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி அதன் சாற்றைப் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

அதனுடன் சிறிது காப்பி தூள் மற்றும், சர்க்கரை ஆகிய இரண்டையும் கலந்து பிழிந்த எலுமிச்சை கோதினைக் கொண்டு அந்த கலவையில் தொட்டு முகத்தில் சர்க்கிள் வடிவில் ஐந்து நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடங்களின் பின் உலர்ந்த நீரினால் கழுவி வந்தால் முகம் வெள்ளையாகும். இதனைத் தொடர்ந்து ஏழு நாட்கள் செய்து வர வேண்டும்.

கோதுமை மா

ஒரு டீஸ்பூன் கோதுமை மாவு மற்றும், ஒரு டீஸ்பூன் அரிசிமா இரண்டையும் ஒன்றாக கலந்து பின் ஒரு தக்காளியை பாதியாக நறுக்கி அதனுடன் கலந்து அந்தக் கலவையை கொண்டு 15 நிமிடம் முகத்தில் நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரினால் சருமத்தை கழுவ வேண்டும். இவ்வாறு ஏழு நாட்கள் தொடர்ந்து செய்து வர முகம் வெள்ளையாகவும், பொலிவுடன் தோற்றமளிக்கும்.

உருளைக்கிழங்கு

சிறிய அளவிலான உருளைக்கிழங்கினை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனுடன் ஒரு தக்காளியையும் சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சிறிதளவு நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த கலவையுடன் சிறிதளவு எலும்பிச்சை சாறு, சிறிதளவு அரிசிமா இரண்டையும் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் மசாஜ் செய்து 15 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி வந்தால் சருமம் வெள்ளையாகும்.

Read More: கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்

முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்