கடமை கண்ணியம் கட்டுப்பாடு கட்டுரை

kadamai kanniyam kattupaadu

கடமை கண்ணியம் கட்டுப்பாடு கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கடமை
  • கண்ணியம்
  • கட்டுப்பாடு
  • பேரறிஞர் அண்ணா
  • முடிவுரை

முன்னுரை

மனித வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நற்பண்புகள் ஏராளம் உள்ளன. இவற்றில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவை மூன்றும் முக்கியமானவை ஆகும்.

குறிப்பாக ஒரு தலைவன் என்பவன் கடமை கண்ணியம், கட்டுப்பாடு ஆகிய மூன்று பண்புகளையும் கடைப்பிடிப்பவனாகவும், ஒழுக்கமுடையவனாகவும் இருத்தல் அவசியமாகும்.

கடமை

கடமை என்பது நிச்சயம் செய்து முடிக்க வேண்டிய ஒன்றாகும். குறிப்பிட்ட சில நிலமைகள் ஏற்படும் போது செய்வதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அல்லது எதிர்பார்க்கப்படுகின்றது விடயமே கடமை ஆகும்.

கண்ணியம்

கண்ணியம் என்பது நியாய தர்மங்களைக் கொண்டது. கடமைகளை நிறைவேற்றும் பட்சத்தில் யாரையும் வார்த்தைகளாலோ, செயல்களாலோ துன்பப்படுத்தாமல் நியாய தர்மங்களுக்கு உட்பட்டு கடமைகளை நிறைவேற்றுவதே கண்ணியமாகும். கண்ணியம் மரியாதை அல்லது, மதிப்பு எனவும் பொருள் கொள்ளப்படுகின்றது.

கட்டுப்பாடு

அமைதி, பொறுப்பு, ஒழுங்குமுறை போன்றவற்றைக் குறிப்பதே கட்டுப்பாடாகும். கட்டுப்பாடு என்பது அளவறிதல் எனலாம். அதாவது எதையும் அளவிற்கு முயற்சி செய்தால் எதிர் வினைகளை ஏற்படுத்தும் என்பதனை உணர்ந்து செயல்படுதலாகும். சுருங்கக் கூறின் ஒழுங்குமுறை, விதிமுறைகளைப் பின்பற்றுவதே கட்டுப்பாடு எனலாம்.

கட்டுப்பாடு, கடமை ஆகியவை தனிப்பட்ட ஓர் அமைப்புக்குள் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய பண்பாகவும், கண்ணியம் பொதுவாக மற்றவர்களுடன் நாம் காட்டும் மதிப்பு மிக்க பண்பாகவும் உள்ளது.

பேரறிஞர் அண்ணா

பட்டுக்குப் பெயர்போன காஞ்சிபுரத்தில் நெசவாளர் குடும்பத்தில் செப்டம்பர் 15 ஆம் திகதி 1909 ஆம் ஆண்டு பிறந்தார். அண்ணாதுரை என்பதே இவரது இயற்பெயர் ஆகும். அவரின் பெயருக்கேற்றால் போல் தனது வாழ்நாள் முழுவதும் அவர் தமிழ் மக்களை தம் உடன் பிறப்புக்களாகவே கருதி மூத்த அண்ணணாகவே செயல்பட்டார்.

“கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இவை மூன்றும் மனிதனின் உயிர் நாடி” என்றார் அறிஞர் அண்ணா. இது அவருடைய புகழ்பெற்ற முழக்கங்களில் ஒன்றாகவும், அவரது கட்சியின் பண்பாடாகவும் இருந்தது. இதனை அவர் தன் வாழ்நாளின் கடைசி வரை கடைபிடித்து வந்தார்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அரசியல் நாகரீகம் போன்றவற்றில் தனக்கென தனிக் கொள்கையை கடைபிடித்து திராவிடம் இருக்கும் வரை அண்ணாவை பின்பற்றுகின்ற பெரும் கூட்டம் இருக்கின்றன என்ற அளவுக்கு அண்ணாவின் புகழை போற்றும் கொள்கைகளை உருவாக்கித் தந்தவர் பேரறிஞர் அண்ணா ஆவார்.

தனது குடும்ப வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் கடமை தவறாத மனிதனாக கண்ணியத்துடனும், கட்டுப்பாடுடனும் வாழ்ந்து காட்டிய பெருந்தலைவன் ஆவார்.

பெற்ற தாயையும் பிறந்த பொன் நாட்டையும் காத்தல் ஒன்றே கடமை என்பதனை பசுமரத்தில் பாய்ந்த ஆணியாய் தனக்குள் வைத்துச் செயல்பட்டார். திராவிட நாடு, திராவிடம், தமிழ்நாடு என்ற கோட்பாட்டை பேச்சாக்கி, மூச்சாக்கி, சட்டமாக்கி வாழ்ந்த தமிழகத்தின் முதல்வரே அறிஞர் அண்ணாதுரை ஆவார்.

முடிவுரை

மனிதன் எவ்வளவு செல்வச் செழிப்புடன் இருந்தாலும் அவன் தனது வாழ்க்கையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இல்லாதவனாய் இருப்பானாயின் அவன் வாழ்வில் அர்த்தம் கிடையாது.

ஆனால் இவை மூன்றையும் பின்பற்றி வாழ்ந்தானாயின் அவன் மரணம் கடந்தும் வரலாறு போற்ற வாழ்வான். இதற்கு அறிஞர் அண்ணாவே சிறந்த எடுத்துக்காட்டாகும்.

You May Also Like :

ஒழுக்கம் உயர்வு தரும் கட்டுரை

தனிமனித ஒழுக்கம் கட்டுரை