அடி வயிறு வலி காரணம்

adi vayiru vali tamil

அடி வயிறு வலி என்பது ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படலாம். எனினும் ஆண்களை விட பெண்களுக்கே அடிவிற்று வலிப்பிரச்சனை அதிகம் காணப்படுகின்றது. அடி வயிற்று வலி எனப்படுவது மார்பு மற்றும் இடுப்பு பகுதிக்கு இடையில் ஏற்படும் வலியாகும்.

பொதுவாக அடி வயிற்று வலியை நாம் லேசாக எடுத்துக் கொள்கின்றோம். ஆனால் அது ஏன் ஏற்படுகின்றது என்பதனை கண்டறிவது அவசியம். அலட்சியமாக விட்டால் பின்னாளில் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.

ஏனெனில் அடி வயிற்று வலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். எனவே அடிவயிற்று வலிக்கான காரணங்களை கண்டறிந்து முறையான சிகிச்சை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.

அடி வயிறு வலி காரணங்கள்

மலச்சிக்கல் அஜீரணம்

செரிமான மண்டலத்தில் ஏதேனும் கோளாறு ஏற்படும் போது அடி வயிற்று வலியை உணரக்கூடும். நேரம் தவறி உண்ணுதல், நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பது நார்ச்சத்துக் குறைபாடு, துரித உணவு உண்ணல் போன்ற பல காரணங்களினால் மலச்சிக்கல் அஜீரண பிரச்சனை ஏற்படுகின்றது.

வாயுத் தொல்லை காரணமாக வயிற்றில் இடப்பக்கமோ, வலப்பக்கமோ தசைப்பிடிப்பு ஏற்பட்டு அடி வயிற்று வலியை உணரலாம்.

மதுப்பழக்கம்

மதுப்பழக்கம் உள்ளவர்களில் பெரும்பாலோனோருக்கு கனைய வீக்கம் ஏற்படும். இதனால் இவர்களுக்கு பேங்கிரியாடிடிஸ் எனும் நோய் ஏற்படும். இந்த நோய் காரணமாக அடி வயிற்றில் வலி ஏற்படலாம்.

அடிபடுதல்

நெஞ்சு கூட்டுக்கு அருகே சிறிதளவிலான அடிபட்டிருந்தாலோ அல்லது, அடி வயிற்றில் அடிபட்டாலோ அடிவயிற்று வலி ஏற்படக்கூடும்.

சுளுக்கு அல்லது தசைப்பிடிப்பு

ஒருவருக்கு சுளுக்கு அல்லது, தசைப்பிடிப்பு ஏற்பட்டால் கூட அடி வயிற்று வலியை உணர்வார்கள். வயிற்றில் உள்ள தசைகளுக்கு எப்போதும் வேலை இருந்து கொண்டே இருப்பதால் அதிக எடை உள்ள பொருட்களைத் தூக்கும் போதோ இழுக்கும் போதோ அல்லது தள்ளும் போதோ வயிற்றுப் பகுதியில் உள்ள தசைகள் பாதிப்படையலாம். இதனால் வயிற்று வலி ஏற்படலாம்.

உணவு ஒவ்வாமை

எல்லோருக்கும் எல்லா உணவுகளும் ஏற்புடையதாக இருப்பதில்லை. சிலருக்கு உணவுகளில் ஒவ்வாமை ஏற்படலாம். ஒவ்வாமை உணவுகளை எடுத்துக் கொள்ளும் போது அடிவயிற்றில் வலி ஏற்படும். சில சமயங்களில் வயிறு உட்பட முழு உடலையும் பாதிப்பை ஏற்படுத்தலாம். எனவே ஒவ்வாமை உணவுகளை தவிர்ப்பது நல்லது.

உணவு ஒவ்வாமையால் சீலியாக் நோய் ஏற்படுகின்றது. முழு தானியங்களில் உள்ள புரதம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எனவே கோதுமை, பார்லி போன்ற உணவுகளில் ஒவ்வாமை இருப்பவர்கள் இவற்றை தவிர்ப்பது சிறந்தது.

வைரஸ் தொற்றுக்கள்

பெண்களுக்கு மிக அதிகமாக காணப்படும் தொற்றுக்களில் ஒன்றாக சிறுநீரகத் தொற்று காணப்படுகின்றது. இது வயிற்றுப் பகுதியில் அதிக அழுத்தத்தை கொடுத்து அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வயிற்று உப்புசம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தலாம்.

எண்டோமெட்ரியோசிஸ் பாதிப்பு

கர்ப்பப்பையின் சுவரில் உள்ள திசுக்களே எண்டோமெட்ரியோசிஸ் ஆகும். இவை பொதுவாக கர்ப்பப்பை சுவருக்கு உட்புறமாக காணப்படும் இந்த பாதிப்பு ஏற்படும் போது திசுக்கள் கர்ப்பப்பையின் வெளிப்புறத்தில் இருப்பதால் தீவிரமான வயிறு மற்றும், இடுப்பு வலி ஏற்படும்.

Read More: மண்ணீரல் பாதிப்பு அறிகுறிகள்

சர்க்கரை அளவு அதிகமானால் அறிகுறிகள்