Table of Contents
அறிமுகம்
தற்காலத்தில் கணினியின் பயன்பாடு என்பது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது.
தரவுகளை சேகரித்து பயனர் வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப நடைமுறைப்படுத்துவதற்கு கணினிக்கு வன்பொருள்(Hardware) மற்றும் மென்பொருள்(Software) ஆகிய இரண்டும் முக்கியமானது ஆகும்.
மென்பொருள் என்றால் என்ன
மென்பொருள் என்பது கணினிகளை இயக்குவதற்கும் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்கும் பயன்படுத்தப்படும் வழிமுறைகள், தரவு அல்லது நிரல்களின் தொகுப்பாகும்.
கணினி ஒரு வேலையை எப்படி செய்ய வேண்டும் என்பதனை சொல்லுகின்ற படிப்படியான கட்டளைகளை(instructions) கொண்டிருக்கின்ற நிரல்களை விவரிக்கின்ற ஒரு பொதுச்சொல் மென்பொருள் (Software) ஆகும்.
மென்பொருள் நிரலால் எழுதப்பட்டது. கணினியின் சாதனங்கள் மற்றும் கூறுகளை மென்பொருள் இல்லாமல் செயல்படுத்த முடியாது மற்றும் தேவையான வழிகளில் வன்பொருள் செயல்முறை தரவுகளை (Hardware process data) உருவாக்குவதற்கு இது அவசியமாகும்.
அதாவது கண்ணுக்கு புலனாகாத வகையில், கணினியால் மட்டுமே புரிந்துக்கொள்ள கூடிய மொழியில் எழுதப்பட்ட நிரல்களின் தொகுப்பு மென்பொருள் என்று வரையறுக்கலாம்.
மென்பொருட்களின் வகைகள்
கணினி மென்பொருட்கள் பிரதானமாக இரண்டு வகைப்படும்.
- அமைப்பு மென்பொருள் (System Software)
- பயன்பாட்டு மென்பொருள் (Application Software)
அமைப்பு மென்பொருள் (System Software)
அமைப்பு மென்பொருள் என்பது கணினியின் வன்பொருட்களை பாவனைக்குட்படுத்தக் கூடியது போல் உருவாக்குவதற்கான நிரல்கள் ஆகும். கணினியின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன.
இவை பயன்பாட்டு நிரல்கள் மூலம் வன்பொருட்களின் திறமையான பயன்பாட்டை உறுதி செய்கின்றன. இவை மூன்று வகைப்படும். அவை பின்வருமாறு,
- இயக்க அமைப்பு (Operating System)
- பயன்பாட்டு நிரல் (Utility Programs)
- மொழிபெயர்ப்பிகள் (Language Translator)
இயக்க அமைப்பு (Operating System)
இயக்க அமைப்பு என்பது கணினி வன்பொருள் வளங்களை மேலாளுகின்ற மற்றும் பயன்பாட்டு மென்பொருட்களுக்கான சேவைகளை வழங்குகின்ற ஒரு தொகுதி நிரல்களாகும்.
கணினி அமைப்பின் மிக முக்கியமான ஒருவகை அமைப்பு மென்பொருளே இயக்க அமைப்பு ஆகும். இது இல்லாமல் சுய தொடக்கப் (Self booting) பயன்பாட்டு நிரலாக இல்லாதவிடத்து கணினிகள் எந்த ஒரு பயன்பாட்டு நிரலையும் (Application program) பயன்படுத்த முடியாது.
உதாரணம்:- DOS, UNIX, Mac OS, LINUX, Solaris, Windows 95, Windows 2000, WindowsXP, Windows11
பயன்பாட்டு நிரல் (Utility Programs)
பயன்பாட்டு நிரல் ஒரு அமைப்பு மென்பொருளின் வகையாகும். அத்துடன் கணினி ஒன்றினை பகுப்பாய்வு செய்து அதில் உள்ள பிரச்சினைகளை கண்டுபிடித்து கணினியினை மேம்படுத்த அல்லது பராமரிக்க உதவுகின்றது.
பயன்பாட்டு நிரல் உள்ள ஒரு பகுதியானது பயன்பாடு(Utility) அல்லது கருவி(Tool) என அழைக்கப்படுகின்றது.
உதாரணம் :- Disk defregmenters, Disk cleaners, Disk partitions, Backup, Disk compressions, File managers, System Monitors, Data utilities, Screensavers, Data compression, Snti- virus.
மொழிபெயர்ப்பிகள் (Language Translator)
கணினி நிகழ்ச்சி நிரல்கள் (Programs) மனிதனால் எழுதப்படுகின்றது. கணனியே விளங்கிக் கொள்ளும் மொழி இயந்திர மொழி (Machine Language) என அழைக்கப்படுகின்றது. இயந்திர மொழியை பயின்று அதை நிகழ்ச்சி நிரல்களை எழுதுவது மிகவும் கடினமானது. கணினிக்கு கணினி இயந்திர மொழி மாறுபடும்.
- இயந்திர மொழி
இயந்திர மொழி என்பது 0,1 என்ற இலக்கணங்களை கொண்டு இரும வடிவில் எழுதப்படும் மிகவும் கீழ்நிலை மொழியாகும். இவை வெவ்வேறு வகை கணினிகளில் வேறுவேறானதாக இருக்கும்.
- கீழ்நிலை மொழி
இது Assembly மொழி எனவும் அழைக்கப்படும். இயந்திர மொழியில் பயன்படுத்தப்பட்ட இலக்கங்களுக்கு பதிலாக (0,1) இலகுவில் ஞாபகப்படுத்தக்கூடிய சொற்கள் மற்றும் சுருக்கங்களைக் கொண்டு இம்மொழி உருவாக்கப்பட்டுள்ளது. இதுவும் கணினிகளின் வகைக்கு வகை வேறுபடும்.
- உயர்நிலை மொழி
இலக்கங்கள் அல்லது சுருக்கங்களுக்குப் பதிலாக பரீட்சியமான குறியீடுகள் மற்றும் சொற்களை கொண்டு எழுதப்படும் மொழி (ஆங்கிலம் போன்றது). இவை கணினிக்கு கணினி வேறுபடாது.
உயர்நிலை மொழிகளை பொதுவான தேவைகளுக்கு பயன்படும் மொழி, விஞ்ஞான சம்பந்தமான தேவைகளுக்கான மொழி, வியாபார சம்பந்தமான வேலைகளுக்கான மொழி, தர்க்க ரீதியான மொழிகள் மற்றும் கட்டளை மொழிகள் என வகைப்படுத்தலாம்.
உதாரணம் :- Fortran, Ada, Lisp, BASIC, C++, Visual BASIC, Java, Python
பயன்பாட்டு மென்பொருள் (Application Software)
பயன்பாட்டு மென்பொருளானது இறுதிப் பயனாளருக்கான தகவல் தொழில்நுட்ப செயல்முறைக்கான கணினி நிகழ்ச்சி நிரல் திட்டங்களை உள்ளடக்கியது. அவை பயனாளியின் குறித்த பயன்பாட்டை பூர்த்தி செய்ய முடிவதால் அல்லது உபயோகிக்கப்படுவதால் பிரயோக பொதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இறுதிப் பயனாளரின் ஆயிரக்கணக்கான வெவ்வேறுபட்ட பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதால் பல்லாயிரக்கணக்கான பிரயோகப் பொதிகள் பாவனையில் உள்ளன.
- பொதுநோக்கு பயன்பாட்டு மென்பொருள் ( gereral purpose application software)
இறுதிப் பயனாளரின் பொதுவான தகவல் தொழில்நுட்ப செயல்முறைக்கு பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணம் :- word processing programs, electronic spreadsheet program, database management system, communication programs, graphics programs.
- குறித்த தேவைக்குரிய பயன்பாட்டு மென்பொருள் (application software- specific purpose)
இறுதிப் பயனாளருக்குரிய பல்வேறுபட்ட குறித்த தேவைக்குரிய பயன்பாட்டு மென்பொருள்கள் காணப்படுகின்றன.
உதாரணம் :- business application programs, scientific application programs.
You May Also Like : |
---|
கணினியின் பயன்கள் |
செயற்கைக்கோள் பயன்கள் |