இதிகாசம் என்றால் என்ன

ithikasam in tamil

அறிமுகம்

இன்றைக்கு பல்லாயிரக்கணக்கான தொன்மை வரலாற்றை கொண்ட இந்து மதத்தின் நூல்களான வேதம், பிராமணம், ஆரணியம், உபநிடதம் ஆகியவற்றை சரிவர உணர்த்துவதற்காக தோற்றம் பெற்றவை இதிகாசங்கள் ஆகும். இவை இந்து நாகரிக வாழ்வின் சிறப்பை கூறுகின்றன.

இதிகாசம் என்றால் என்ன

இதிகாசம் இதி+ஹ+அச் என பிரித்து ‘இது இப்படி நடந்தது’ எனவும் வேறு சிலர் ‘இப்படி நடந்தது என்ன ஆச்சரியம்’ எனவும் பொருள் கொள்வர்.

இதிகாசம் என்பது ‘வரலாறு’ என்றும் பொருள் கொள்ளும் என்பது மற்றொரு சாராரின் வாதம். எது எவ்வாறாயினும், இதிகாசம் என்பது முன்னர் நிகழ்ந்த சில வரலாற்று சம்பவங்களோடு இணைந்த சமயதத்துவ உருவகக் கதைகளே இதிகாசம் ஆகும்.

அதாவது இதிகாசம் எனப்படுவது கடவுள், கடவுள் அவதாரம் அல்லது பெரும் வீரர்கள் நிகழ்த்திய அரும்பெரும் வீரச் செயல்களையும், நீதிநெறிகளையும் விவரிக்கும் புராண வரலாறாகும்

இதிகாசங்கள் ஒரு தோழனை போல மக்களை ஒரு சமய நெறிகள் நடத்துவதனால் “சம்ஹிதம்” எனப்படுகின்றன. இதிகாசம் என்ற தொகுதியில் சிவரகசியம் , மகாபாரதம், ராமாயணம் ஆகிய மூன்றும் அடங்கும். இவற்றில் சிவரகசியம் மேலானதாகையால் “பரமேதிகாசம்” எனப்படும். இது இன்று வழக்கில் இல்லை.

மகாபாரதம்

வேதங்களை இருக்கு, யசூர், சாமம், அதர்வணம் என  நான்காக வகுத்த வியாச பகவானே மகாபாரதத்தை எழுதியுள்ளார். இதனை ஐந்தாம் வேதம் எனவும் போற்றுவர்.

இது 18 புருவங்களை உடையது. ஆதிபர்வம் தொடக்கம் மோட்சபர்வம் வரை ஒரு இலட்சம் ஸ்லோகங்களைக் கொண்டது. இது உபதேச முறையில் அமைந்துள்ளது. இவை கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் எழுந்த விஷ்ணுவை முதன்மைப்படுத்தும் நூலாகும். அத்துடன் விஷ்ணுவின் பரத்துவமும் விளக்கப்படுகிறது. சிவபெருமானும் போற்றப்படுகின்றார்.

உலகியல் சார்பும் தெய்வீக நம்பிக்கையும் கலந்த இலக்கியமாகும். தன்னகரில்லா தலைவனின் தர்மநெறியை தெளிவான சிந்தனையுடன் விளக்கும் நூல் இதுவாகும். இந்நூலின் ஒவ்வொரு அத்தியாயமும் “ஓம் நாராயணம் நமஸ்கிருத்ய” என்று ஆரம்பிக்கின்றது.

மகாபாரதத்தின் இந்து சமய மரபுகளில் சண்மத நெறி கோட்பாடு உன்னதமாக விளங்கினாலும் சைவம், வைணவம் என்பன மேல்நிலை பெற்றுள்ளதென குறிப்பிடலாம்.

மகாபாரத கதையின் அறவாழ்வுக் கொள்கை மேலானது. அகிம்சை மேலான தர்மமாக கூறப்படுகின்றது.

சத்தியம், குரோதமின்மை, தானம், புலனடக்கம், பிறரிடம் குறை காணாமை, மன்னிப்பளித்தல், அகப்புறத் தூய்மை, பிறரில் பகைமை பாராட்டாமை என்பன உயரிய தத்துவங்களாக கூறப்பட்டுள்ளன.

சத்தியமே உயிர் என்று மகாபாரதம் போதிக்கின்றது. சாந்தி பருவத்தில் துவேசமின்மை, சத்தியம், புலனடக்கம், பொறுமை,சகிப்புத்தன்மை, பரம்பொருளை தியானித்தல் என்பன அஹிம்சையில் பாற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குருகுலக் கல்வி மரபுடன் தொடர்பான ஆசாரங்களும் தபோவன வாழ்வும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பகவத் கீதை

மகாபாரதத்தின் ஆறாவது பருவமான பீஷ்மபருவத்தில் பகவத் கீதை அடங்கியுள்ளது. குருஷேத்திரப் போரின் தொடக்கத்தில் தனது நண்பர், சகோதரர்கள், குருமார், உறவினர்களுக்கு எதிரான இப்பாரியப்போர் தேவையா என அர்ஜுனனுக்கு ஏற்பட்ட ஐயத்தையும், மனச்சோர்வையும் நீக்குவதற்காக  கண்ண பகவான் கூறிய அறிவுரைகளை உள்ளடக்கியது.

மகாபாரதத்தில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்கள்

  1. அர்ச்சுனன்
  2. தர்மராஜன்
  3. வீமன்
  4. சகாதேவன்
  5. நகுலன்
  6. பாஞ்சாலி
  7. கிருஷ்ணர்
  8. குந்தி
  9. கர்ணன்
  10. அபிமன்யு
  11. காந்தாரி
  12. சகுனி
  13. சத்தியவதி
  14. விபீஷ்ணன்
  15. கிரந்திகன்
  16. உத்தரன்

இராமாயணம்

இராமாயணம் வடமொழியில் வான்மீகி ரிஷியால் தொகுக்கப்பட்டது. இதனைத் தமிழில் கம்பர் “கம்பராமாயணம்” என்ற பெயரில் எழுதி உள்ளார்.

இராமாயணம் அயோத்திய காண்டம், ஆரண்ய காண்டம், கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம், உத்தரகாண்டம் என ஏழு காண்டங்களை உடையது. அத்துடன் 24,000 ஸ்லோகங்களையும் உடையது. கி.பி 2ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்டது.

இராமாயணம் ராமனை கதாநாயகனாக எடுத்துக்காட்டுகின்றது. இராமனது தெய்வீக ஆற்றல் இராம வழிபாட்டுக்கு அடிப்படையான மரபினை ஏற்படுத்தியது. ரிஷிகளுக்கு எல்லாம் மகாரிஷியாக வான்மீகி சுட்டிக்காட்டப்படுகிறார்.

அயோத்திய மாநகரம், தசரதன் கதை, முன்வினைப் பயன், தண்டகாரணிய தவம், பரதன் உறவு, சகோதர பாசம், இலங்கை தொடர்பு என்பன கதையோட்டமாக அமைகின்றன. இக்கதையோட்டத்தில் ராமன் என்னும் பாத்திரம் உத்தம வடிவாகவும் இலட்சிய வடிவாகவும் விளங்குகின்றது.

ராமாயணக் கதையின் மற்றுமொரு கதாபாத்திரமாக இராவணன் எடுத்துக்காட்டப்பட்டுள்ளார். சிவபக்தனாகவும், இசை மரபினனாகவும் வான்மீகி அறிமுகம் செய்கின்றார்.

இராம இராவண யுத்தத்தில் “இன்று போய் நாளை வா” எனும் வேண்டுதல் ராஜதர்மத்தினதும், யுத்த தர்மத்தினதும் உன்னதப்போக்கை சுட்டிக்காட்டுகின்றது. இராவணன் தீவிர சிவபக்தன் எனவும் அறியப்படுகின்றது.

இராமாயண கதையிலும் தர்மத்தின் சிறப்பு தனித்துவமாக எடுத்துக்காட்டப்படுகின்றது.

தர்மத்தில் இருந்தே எல்லாம் கிடைக்கின்றன என்பதால் அனைத்திலும் மேலானது தர்மமே என்பது இதன் மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது. பற்றி எரியும் தீயை நீர் ஊற்றி அணைப்பதைப் போல உள்ளத்தில் எழும் கோபத்தை அடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் சகிப்புத்தன்மையே உயர் தர்மம் என்று குறிப்பிடுகின்றது.

இராமாயணத்தில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள்

  1. இராமன்
  2. சீதை
  3. தசரதன்
  4. லட்சுமணன்
  5. பரதன்
  6. சத்ருகன்
  7. வாலி
  8. சுக்ரீவன்
  9. ராவணன்
  10. அகத்தியர்
  11. அங்கதன்
  12. கோசலை
  13. சுமத்திரை
  14. கைகேயி
  15. அகல்யை
  16. இந்திரஜித்
You May Also Like :
வேதங்கள் எத்தனை அவை யாவை
இலக்கியம் என்றால் என்ன