ஈகை என்றால் என்ன

eekai in tamil

அறிமுகம்

நம் முன்னோர்கள் அறத்திற்கு முக்கியத்துவம் வழங்கியும், வாழ்வில் அறத்தைக் கடைப்பிடித்தும் வாழ்ந்தவர்களாவர்.

இதனை சங்ககால இலக்கியங்கள் மூலம் அறித்து கொள்ள முடிகின்றது. அந்த வகையில் ஈகை பற்றி நாலடியார், திருக்குறள் போன்றவற்றில் கூறப்பட்டுள்ளது.

ஈகை என்றால் என்ன

ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் இனாமாகப் பொருள் பெறுவதும், தருவதும், பசி தீர்ப்பதும் ஈகை ஆகும்.

சூரியன் கொடுக்கும் வெளிச்சம், காற்று தரும் உயிர் மூச்சு, மழை தரும் உணவு, மரம் தரும் கனியும் நிழலும் எல்லோருக்கும் சமமாக கிடைப்பது போன்று பிறருக்குக் கொடுத்து மகிழ்வதே சிறந்த ஈகையாகும்.

அதாவது ஈகை என்பது பதில் உதவி எதிர்பாராது வறியவர்களுக்கு செய்யும் உதவியே ஈகை ஆகும்.

திருக்குறள் கூறும் ஈகை

“வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து”

ஒன்றும் இல்லாதவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை ஆகும். மற்றவர்களுக்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்து கொடுப்பதாகும்.

“நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று”

மற்வர்களிடமிருந்து தேவையில்லாமல் பொருள் வாங்குவது வீட்டுக்கு நல்லது என்று சொன்னாலும் அது தீமைதான். அதே போல் இல்லாதவர்களுக்கு பொருள் கொடுப்பது தீமை என்று இந்த மேல் உலகம் கூறினாலும் உண்மையான தானமான அந்தச் செயல் சிறந்ததாகும்.

“இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள”

யான் வறியவன் என்னும் துன்பச் சொல்லை ஒருவன் உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல குடி பிறப்பு உடையவனிடம் உண்டு.

“ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்”

தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக் கொள்ளலாகும். அதுவும் அப்பசியை உணவு கொடுத்து மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.

ஈகைத் திருநாள்

ஈகை பெருநாளைப் பொறுத்தவரை நாடுகளுக்கு நாடு மாறுபடுகின்றது. ஒரு நாள் முன்பு பின்பு கொண்டாடுவதனைக் காணமுடிகின்றது. காரணம், இஸ்லாமிய நாட்காட்டிகள் நிலவைப் பொறுத்து அமைந்துள்ளது.

சூரியனைப் பொறுத்து அமையவில்லை என்பதால் மக்கள் எந்தெந்தப் பிரதேசத்தில் வசிக்கின்றார்களோ அவர்கள் நிலவைப் பார்த்து பிறை தெரிந்த பின்பு ஈகை பெருநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

ஏழைகளின் பசியை உணர்ந்து அறிந்து கொள்ளவும், தன்னைத்தானே தூய்மை செய்து கொள்ளவும், உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் இஸ்லாமிய மக்கள் ஒவ்வொரு வருடத்திலும் சுமார் ஒரு மாத காலம் உண்ணா நோன்பு இருப்பார்கள்.

உண்ணா நோன்பு என்பது தினம்தோறும் சூரிய உதயத்திலிருந்து சூரியன் மறையும் வரை உண்ணாமல் இருப்பர். சூரியன் மறைந்த பின்பே உண்பார்கள் மற்றும் பருகுவார்கள். இவ்வாறு ஒரு மாத காலம் வரை கடைப்பிடிப்பர்.

அந்த ஒரு மாதம் முடிந்த பின்பு ஈகைப் பெருநாளைக் கொண்டாடி மகிழ்வார்கள். ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் தங்களால் இயன்றளவில் ஏழைகளுக்குத் தர்மம் செய்துவிட்டு பின்புதான் இறைவனை வணங்க பள்ளிவாசலுக்குச் செல்வர்.

ஈகை குறித்து நாலடியார் கூறும் செய்திகள்

நமக்குப் பொருள் இல்லாத காலத்திலும் பொருள் இருந்த காலத்தினைப் போலவே மகிழ்ந்து பிறருக்குக் கொடுக்கும் நற்குணமுள்ள மக்களுக்கு மேலுலகக் கதவுகள் என்றுமே மூடப்படாது.

நம் முன், இறக்கும் நாளும் முதுமைப் பருவமும் உடல் வலிமையைக் கொடுக்கும் பிணிகளும் உள்ளன.

ஆதலால் கையில் பொருட்கள் உள்ள காலத்திலேயே மேலும் மேலும் பொருட்கள் தேடி ஓடாமல் இருக்கும் பொருளை தேவைப்படுவோருக்குப் பகிர்ந்தளித்து வாழ வேண்டும்.

You May Also Like :
அன்பு பற்றிய கட்டுரை
நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி