தமிழகத்தில் கிராமப் பகுதியில் அதிகம் விளையாடப்படும் விளையாட்டுக்களில் மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டே கபடி விளையாட்டாகும். தமிழகத்தில் உள்ள கிராமங்களில் விளையாடப்படும் வீர விளையாட்டாக இவ்விளையாட்டு காணப்படுகின்றது.
கபடி என்பது தமிழ் பெயராக இருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. கபடி என்றால் காலை பிடி என்று பொருள்படும். காலைப்பிடி என்னும் விளையாட்டே பிற்காலத்தில் மருவி கபடி என்று அழைக்கப்படுகின்றது.
ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்டே இந்த விளையாட்டு விளையாடப்பட்டது. பொதுவாக தமிழ்நாட்டின் முல்லை பகுதியில் வாழ்கின்ற மக்கள் இந்த விளையாட்டை விளையாடினர். எதிரணிக்கு செல்லும் வீரர் காளையைப் போல் கருதப்படுவர். எதிரணி வீரரை அடக்குவது காளையை அடக்குவதற்கு சமமாகும்.
இவ்விளையாட்டானது ஆரம்ப காலங்களில் ஏறு தழுபுபவர்கள் (ஜல்லிக்கட்டு விளையாடுபவர்கள்) தங்களின் உடற்பயிற்சிக்காக இவ்விளையாட்டை விளையாடினர்.
இவ்விளையாட்டானது இரு அணிகளுக்கு இடையே இடம்பெறும் ஆட்களைப் பிடிக்கும் ஒரு போட்டி முறையாகும். இது தமிழ்நாட்டு மக்களால் பொழுது போக்குக்காகவும் மற்றும் தேசிய அளவில் போட்டிகளாகவும் விளையாடப்படுகின்றது. இவ்விளையாட்டானது மொத்தமாக 40 நிமிடம் விளையாடப்படும்.
Table of Contents
கபடி விளையாட்டின் ஆடுகளம்
கபடி விளையாட்டின் ஆடுகளமானது நீள் சதுர வடிவில் காணப்படும். இச்சதுரத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பக்கம் ஒரு அணியும் இன்னொரு பக்கம் மற்றைய அணியும் நின்று விளையாடுவர். கபடி விளையாட்டின் ஆடுகளமானது மண்ணினாலோ மரத்துகள்களினால் ஆன ஆடுகளமாகவோ அல்லது செயற்கை ஆடுகளமாகவோ (Mat) காணப்படலாம்.
கபடி விளையாட்டு வீரர்கள்
கபடி விளையாட்டை விளையாடும் போது ஏழு வீரர்களும், உபரி வீரர்கள் ஐந்து பேர் காணப்படுவர். விளையாட்டு வீரர்கள் காயப்பட்டால் உபரி வீரர்கள் ஆட்டத்தில் இறங்குவர். கபடி விளையாட்டு வீரர்களில் டிஃபைண்டர், ரைடர் என இரண்டு வீரர்களும் இரு அணியிளும் முக்கியம் பெற்றவராக காணப்படுகின்றனர். இவர் இருவரினாலேயே விளையாடும் அணி அதிக புள்ளிகளை பெற முடியும்.
கபடி விளையாட்டு விளையாடும் முறை
ஒரு அணியில் இருந்து ஒரு வீரர் இன்னொரு அணிக்கு புறப்பட்டு நடுகோட்டை தொட்டுவிட்டு “கபடி கபடி” என ஒரே மூச்சில் கூறிக்கொண்டே எதிர் அணியினர் இருக்கும் பக்கத்துக்குச் சென்று கையினாலோ, காலாலோ தொட்டு விட்டு எதிர் அணியிடம் பிடிபடாமல் நடக்கோட்டை தாண்டி தம் அணியிடம் திரும்பி வர வேண்டும்.
இதுவே கபடி விளையாட்டாகும். தொடுபட்டவர் ஆட்டம் இழப்பர். எதிர் அணியிடம் சென்றவர் எதிர் அணியால் பிடிக்கப்பட்டால் ஆட்டம் இழப்பர். மூச்சு விடாமல் “கபடி கபடி” என்று கூறுவது பாடல் என்று பெயர். எதிரணிக்கு செல்லும் வீரர் பாடும் பொழுது மூச்சு விட்டாலும் ஆட்டம் இழப்பார் இவ்வாறு விளையாடும் விளையாட்டே கபடி விளையாட்டாகும்.
கபடி விளையாட்டின் சிறப்புக்கள்
கபடி விளையாட்டு போட்டியானது இந்தியாவில் மட்டுமல்ல உலகில் உள்ள ஏனைய நாடுகளும் கபடி விளையாட்டை விளையாடுகின்றனர். உலக கபடி போட்டியானது 2004, 2007, 2010 ஆம் ஆண்டுகளில் சிறப்பாக இடம்பெற்றது. இப்போட்டிகளில் இந்தியா மாபெரும் வெற்றியைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More: கொட்டாவி ஏன் வருகிறது