நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் கட்டுரை

naveena tamil nadu sirpi kalaignar katturai

இன்று தமிழ்நாடு சிறப்பான மாநிலமாக மிளிர்வதற்கு கலைஞர் அவர்களின் பங்களிப்பும் அவரதும் தூர நோக்கான திட்டங்களும் பெரிதும் உதவியுள்ளன. இவரை நவீன தமிழ்நாட்டின் சிற்பி என கூறும் அளவிற்கு அவரது பங்களிப்புகள் இருந்துள்ளன.

நவீன தமிழ்நாட்டின் சிற்பி கலைஞர் கட்டுரை

குறிப்பு சட்டகம்

  • முன்னுரை
  • கலைஞரின் திட்டங்கள்
  • கலைஞர் ஆட்சியின் சிறப்புக்கள்
  • பெண்ணியம் போற்றிய கலைஞர் கருணாநிதி
  • முடிவுரை

முன்னுரை

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒருவராக கருணாநிதி அவர்கள் விளங்குகின்றார். தமிழ்நாட்டின் பாதுகாவலனாக, ஒரு போராட்டத்தின் வழிகாட்டியாக உரிமைப் போரில் பங்கு பற்றி அனைவருக்கும் தன்னம்பிக்கை தரும் உந்து சக்தியாக இருப்பவரும் இவரே ஆவார்.

இன்றைய தமிழ்நாடு சிறப்பாக மிளிர்வதற்கு நவீன தமிழ்நாட்டின் சிற்பியாக இவர் ஆற்றிய பணிகளும் அர்ப்பணிப்புகளும் என்றும் போற்றத்தக்கவை ஆகும்.

கலைஞரின் நலத் திட்டங்கள்

இவரது ஆட்சியில் கணக்கில் அடங்கா பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயற்படுத்தப்பட்டு வந்தன.

பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டமை, தமிழ் நாட்டுக் குடிசை வாரியம் மற்றும் வடிகால் வாரியம் உருவாக்கம், தமிழகக் காவல் துறையினருக்கு ஆணையம் அமைக்கப்பட்டமை, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, அரசு பள்ளிகளில் 30 சதவீத ஒதுக்கீடு,

தமிழ்நாட்டுப் போக்குவரத்து கழகம் உருவாக்கம், சாதி, மதம் கடந்த ஒன்றிய பெரியார் முனைவு சமத்துவபுரம், சமச்சீர் கல்வித் திட்டம், தமிழ் செம்மொழி அந்தத்து, உழவர் சந்தை, அண்ணா நூற்றாண்டு நூலகம் என பல நல்ல திட்டங்களை இவர் செயல்படுத்தி வந்தார்.

கலைஞர் ஆட்சியின் சிறப்புக்கள்

இவருடைய ஆட்சி காலத்தில் தான் தொழில்துறை மேம்பாட்டிக்காக சிக்கோ சிப்காட் வளாகங்கள் உருவாக்கப்பட்டன. அதுமட்டுமல்லாது வள்ளுவர் கோட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் இவரது ஆட்சி காலத்திலேயே ஆகும்.

கொல்கத்தாவில் சில இடங்களில் இன்றும் மனிதர்களை மனிதர்கள் இழுத்துச் செல்லும் கை ரிச்சாக்கள் உள்ளன. ஆனால் இவர் ஆட்சியில் 1973 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே தமிழகத்தில் ஒழிக்கப்பட்ட விட்டது. கை ரிச்சாக்களுக்குப் பதிலாக சைக்கிள் ரிக்சாக்களை இலவசமாக வழங்கி தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியூட்டினார்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை உருவாக்கிய ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டார் 1970 ஆம் ஆண்டு. நொச்சிக்குப்பத்தில் ஆயிரம் வீடுகளுடன் குடிசை மாற்று வாரியத்துடன் முதல் குடியிருப்பு திறக்கப்பட்டது.

அன்று முதல் இன்று வரை குடிசையில் வசிக்கும் பல லட்சம் ஏழை எளிய மக்களுக்கு காங்கிரீட் வீடுகளை குடிசை மாற்று வாரியம் கட்டிக் கொடுத்துள்ளது.

பிச்சைக்காரர்கள் மற்றும் தொழுநோயாளர்களின் மறுவாழ்வுக்காக இரவலர்கள் இல்லங்கள் அமைத்துக் கொடுப்பதற்கு வழிவகை செய்தார்.

இந்தியாவிலேயே முதன் முதலாக கோவையில் வேளாண் பல்கலைக்கழகம், பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கென தனி அமைச்சரவை, நில உச்சவரம்புச் சட்டம், உயர் படிப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி போன்ற பல திட்டங்களைச் செயல்படுத்தி தனது ஆட்சிக் காலத்தை மேன்மையாக்கிய தலைவராவார்.

பெண்ணியம் போற்றிய கலைஞர் கருணாநிதி

திராவிட இயக்கத் தலைவர்கள் பல்வேறு காலகட்டப் பகுதியில் நடத்திய போராட்டங்களில் பெண்ணுரிமைக்கான போராட்டங்கள் மிக முக்கியமானவையாகும்.

எனினும் பெண்ணுரிமைகளை நிலைநாட்டுவதிலும், பாதுகாப்பதிலும் கலைஞரின் பங்களிப்பு அளப்பெரியதாகும். ஆண் போல பெண்ணுக்கும் சம உரிமை உண்டு என்பதனை உணர்த்தினார்.

பெண்களின் மறுமணத்திற்குப் பெரிதும் ஆதரவளித்தார். 8 ஆம் வகுப்புவரை படித்த பெண்களுக்குத் திருமண நிதி உதவித் திட்டங்களை வழங்கினார். சொத்துரிமையில் ஆணுக்கு நிகராகப் பெண்ணுக்கு உரிமையுண்டு என்பதனை நிலைநாட்டினார்.

முடிவரை

தான் கொண்ட கொள்கையை செயல்படுத்த பல திட்டங்களை முன்னெடுத்து, இன்னும் 50 ஆண்டுகளுக்கு திட்டங்கள் மக்களுக்கு நன்மை பயக்க வேண்டும் என தொலைநோக்காக பணியாற்றியவராவார். இத்தகைய பெருமைக்குரிய இவரே நவீன தமிழ் நாட்டின் சிற்பி என்றால் அதுமிகையல்ல.

Read More: தகவல் அறியும் உரிமை சட்டம் கட்டுரை

இட ஒதுக்கீட்டில் சமூக நீதி கலைஞரின் சாதனை கட்டுரை