ஆபரணம் வேறு சொல்

ஆபரணம் வேறு சொல்

ஆபரணம் என்பது ஆண்களும் பெண்களும் தன்னை அழகுப்படுத்திக் கொள்வதற்காக பல்வேறு பாகங்களில் அணியக்கூடிய பொருட்களே ஆபரணங்கள் எனப்படும். ஆரம்ப காலம் தொட்டே ஆபரணம் அணியும் பழக்கம் மக்களிடம் காணப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் மக்கள் முத்து மற்றும் மரங்களில் கிடைக்கும் விதைகள் போன்றவற்றை ஆபரணமாக அணிந்தனர். ஆனால் தற்காலத்தில் மக்கள் பல்வேறு உலோகங்களினாலான ஆபரணங்களை அணிவது இயல்பாகக் காணப்படுகின்றது.

அந்த வகையில் ஆபரணம் செய்ய பவளம், வைரம் போன்ற பொருட்களும் பொன், வெள்ளி, பிளாட்டினம் முதலிய விலையுயர்ந்த உலோகங்களும் அணிகலன்கள் செய்வதற்குப் பயன்படுகின்றன.

அணிகலன்கள் அழகுக்காகவே பெரும்பாலும் அணியப்படுகின்றன. எனினும், சமூக மதிப்பு, பல்வேறு வகையான நம்பிக்கைகள் என்பனவும் அணிகலன்கள் அணியப்படுவதற்கான காரணங்களாக அமைகின்றன.

வயதின் அடிப்படையிலும் ஆபரணம் அணியும் பழக்கமும் காணப்படுகின்றது. மற்றும் ஆண்களுக்கு உரியவை, பெண்களுக்கு உரியவை என்ற அடிப்படையில் அணிகலன்கள் வேறுபாடாக அமைகின்றன.

ஆபரணம் வேறு சொல்

  • அணி
  • அணிகலன்
  • நகை

Read more: கற்பூரவள்ளி இலையின் பயன்கள்

பல்லி விழும் பலன்