குளிகை என்றால் என்ன

kuligai enral enna

ராகு காலத்தில் எப்படி ஒரு நல்ல காரியத்தை செய்ய மாட்டார்களோ, அதே போல் குளிகை நேரத்தில் செய்யப்படும் எந்த காரியமும் திரும்பத் திரும்ப நடக்கும் என்பதே நம்பிக்கை.

இதனால் நல்ல காரியங்களுக்கு குளிகை நேரம் உகந்ததாகவும், ஈமைச் சடங்கு போன்ற கெட்ட காரியங்களுக்கு இது பொருத்தம் இல்லாததாகவும் கருதப்படுகின்றது.

இதனால் அடகு வைப்பது, கடன் வாங்குவது, வீட்டை காலி செய்வது, இறந்தவர் உடலைக் கொண்டு செல்வது போன்ற விடயங்களை குளிகை நேரத்தில் செய்யக்கூடாது.

அதேபோல குளிகை என்ற நல்ல வேளையில் சொத்துக்களை வாங்குவது, சுப நிகழ்ச்சிகள் செய்வது, கடனை திருப்பிக் கொடுப்பது, பிறந்தநாள் கொண்டாடுவது போன்றவற்றைச் செய்தால் எந்த தடையும் இல்லாது நடப்பது மட்டுமன்றி அது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும்.

குளிகை என்றால் என்ன

சனிபகவானின் மைந்தனாகிய குளிகன் இந்நேரத்திற்கு ஆதிக்கம் செலுத்துபவனாக இருக்கிறான் இதனால்தான் குளிகை என்று அழைக்கப்படுகின்றது.

குளிகை உருவான விதம்

ராவணனின் மனைவி மண்டோதரி கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். எப்போது வேண்டுமென்றாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் ராவணன் தனது குலக் குருவான சுக்கிராச்சாரியாரைச் சந்தித்து, யாராலும் வெல்ல முடியாத, வீரமும், மிகுந்த அழகும் நிறைந்த, அறிவும் கொண்டவனே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

அதற்கு பதில் அளித்த சுக்கிராச்சாரியார் துருவங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும் நேரத்தில் உனக்கு பிள்ளை பிறந்தால் அப்பிள்ளை நீ விரும்பிய எல்லா சிறப்புகளையும் கொண்டதாக இருக்கும் என்று யோசனை கூறினார்.

உடனடியாக நவக்கிரகங்கள் அத்தனையையும் சிறைப்பிடித்து ஒரே அறைக்குள் ராவணன் அடைத்தான். ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் யாவும் தவித்து போயின. இந்த யோசனையை சொன்ன சுக்கிராச்சாரியாரைக் கடிந்தும் கொண்டனர்.

தாங்கள் அனைவரும் ஒரே இடத்தில் இருப்பதால் நடக்கவிருக்கும் தீமைகளை எண்ணி அவர்கள் கவலை கொண்டனர். அதே நேரத்தில் குழந்தை பிறக்க முடியாமல் மண்டோத்ரி பெருமளவில் தவித்தார். நவக்கிரகங்கள் இது குறித்து சுக்கிராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்டனர்.

“இந்த சிக்கலிலிருந்து விடுபட வேண்டுமானால் உங்கள் 9 பேரை தவிர நல்ல செயல் புரியவென்று இன்னொருவரைப் படைத்து ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அவனுடைய ஆளுகைக்கு உட்பட்ட நேரமாக மாற்றிக்கொண்டால் உங்களுக்கு நன்மை உண்டாகும். அவனைப் படைக்கும் அதே வேளையில் மண்டோதரிக்கும் சுகப்பிரவசம் உண்டாகும். நீங்களும் இராவணனின் சிறையிலிருந்து விடுதலை பெறலாம்” என்று சுற்றுலாச்சாரியார் ஆலோசனை கூறினார்.

அவரின் வாக்குப்படி சனீஸ்வர பகவான் தன்னுடைய சக்தியால் தன் மனைவிக்கு ஒரு மகன் பிறக்கும்படி செய்தார் (‵குளிகன் என்ற மாந்தன், சனீஸ்வரன்-ஜேஷ்டாதேவி தம்பதியின் புதல்வன்’ என்கிறது புராணம்) அந்த மகனுக்கு குளியல் என்று பெயர் சூட்டினார்.

குளியல் பிறந்த அதே நேரம் மண்டோதரிக்கும் ஓர் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவன் மேகநாதன் என்று பெயரிடப்பட்டான். பின்னாளில் கடுந்தவம் செய்து பிரம்மாவிடம் இருந்து பல அபூர்வமான அஸ்திரங்களை பெற்று இந்திரனையே வென்று இந்திரஜித் என அழைக்கப்பட்டான்.

இவன் பிறந்த நேரம் தான் குழிய நேரம் என்று அழைக்கப்படுகின்றது. தான் பிறக்கும் போதே நல்லதை நடத்தி வைத்தான். குளிகை நேரம் என்றே தினமும் பகலிலும் இரவிலும் ஒரு நாழிகை நேரம் குளிகனுக்காக வழங்கப்பட்டது.

Read more: சதாபிஷேகம் என்றால் என்ன

ஏகாதசி என்றால் என்ன