கொட்டாவி ஏன் வருகிறது

kottavi varuvathu en

இன்றைய காலத்தில் நம்மில் பலரும் சோம்பேறித்தனம் எனும் முதலாளிக்கு அடிமையாகி விட்டோம்.

அனைவரும் நவீனமயமாகி விட்ட காரணத்தினால் மனிதர்கள் செய்ய வேண்டிய வேலைகள் அனைத்தையும் இயந்திரங்கள் மேற்கொள்வதால் மனிதர்கள் பெரிதும் சோர்வு உணர்வுக்கு ஆளாகி விட்டனர். குறிப்பாக கொட்டாவி விடுதல் என்பது சோம்பேறி உணர்வின் ஒரு வித வெளிப்பாடு ஆகும்.

கொட்டாவி ஏன் வருகிறது

ஒரு மனிதனுக்கு பெரும்பாலான சமயங்களில் கடுமையான தூக்கம் வருவதற்கு முன்பாகவோ அல்லது பின்பாகவோ அல்லது கடுமையான வேலைக்குப் பின்னரோ அல்லது பிறரிடம் இருந்து தொற்றியோ ஏற்படுகின்றது.

மனிதர்களில் இது தொற்று வினை போல அடிக்கடி ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு தொற்றுகின்றது.

குறிப்பாக நாம் இன்னொருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்தாலோ அல்லது கொட்டாவி பற்றி படிக்கும் போதோ அல்லது நாம் கொட்டாவியை பற்றி சிந்தித்து பார்க்கும் போது கூட நமக்கு கொட்டாவி உருவாகிறது.

நீங்கள் கொட்டாவி வருவதாக சிந்திக்கும் போது சிறிது நொடிகளில் கொட்டாவி வந்துவிடும்.

இவ்வாறான ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு தொற்றிக் கொள்ளும் கொட்டாவி வகை மனிதர்கள் தவிர நாய்கள், சிம்பன்சி, பறவைகள், பூனைகள் ஊர்வன போன்ற முதுகெலும்பி உயிரினங்களிலும் அவற்றுக்கிடையிலான தொடர்பாடல்களின் போதும் பரிமாறப்படுகின்றன.

இதுவரை கொட்டாவி எழுவதற்கு உளவியல் ரீதியாக 20 காரணங்களை அறிஞர்கள் முன்வைத்த போதிலும் ஆய்வு ரீதியாக எவையும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

கொட்டாவியின் போதான உடலியல் மாற்றங்கள்

உயிரினங்களுக்கு கொட்டாவி ஏற்படும் போது அவ் உயிரிகளின் நடுச் செவியில் உள்ள செவிப்பறை இழுப்புத் தசை சுருங்குகிறது. இது தலைக்குள் கொட்டல் எனப்படுகின்ற ஒரு வகை ஓசையை எழுப்புகிறது.

பின்வருவன கொட்டாவி ஏற்படும் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் ஆகும்.

  1. மூளை மிகவும் குளிர்ச்சியான உணர்வைப் பெறுகின்றது.
  2. கொட்டாவியின் போது அளவுக்கு அதிகமான காற்று மிகவும் ஆழமாக உள்நோக்கி இழுக்கப்படுவதனால் நுரையீரல் நுண்ணறைகள் சுருங்காது தவிர்க்கப்படுவதோடு அங்குள்ள வளிக்கலங்கள் விரிவடைந்து பரப்பியங்கி நீர்மம் ஒன்றை தோற்றுவிக்கின்றது.
  3. இயல்பு நிலைக்கு திரும்புவதை தன்னை அறியாமல் வெளிப்படுத்துதல்.
  4. ஒரு விடயத்தில் தமக்கு ஈடுபாடு இல்லை என்பதை தெரிந்தோ அல்லது தெரியாமலோ வெளிப்படுத்துதல்.
  5. வேறொருவர் கொட்டாவி எடுக்கும் போது அந்த ஒலியைக் கேட்பவரின் செவியில் நடுவில் திடீர் அழுத்த மாற்றம் ஒன்று உருவாகும்.
  6. தொடர்ச்சியான வேலை, தொடர்ச்சியான இயல்பான தூக்கமின்மை போன்றவற்றால் சூடான மூளையை குளிர்விப்பதற்காக அடிக்கடி கொட்டாவி எடுத்து தனது தேவையை வெளிக்காட்டும்.
  7.  அதுமட்டுமல்லாமல் நுரையீரலில் சேமிக்கப்பட்டிருக்கும் அளவுக்கு அதிகமான கரியமில வாயு நாம் பிறப்பிக்கும் கொட்டாவிகள் மூலமாக வெளியேற்றப்பட்டு,  புதிதான ஒட்சிசன் வாயுவை நுரையீரல் உள்ளெடுக்கின்றது.

ஆய்வுகள் தவிர தமிழ் இலக்கியங்கள்,  மற்றும் சமய பண்பாட்டு பழக்கவழக்கங்களிலும் நம் முன்னோர்கள் கொட்டாவியைப் பற்றி எடுத்துரைத்துள்ளனர்.

தமிழில் கொட்டாவி விடுதலை அங்கா, ஆவலித்தல்,  ஆவிதல் போன்ற பெயர்களால் வழங்கியுள்ளனர்.

வரலாற்று காவியங்களான திருவாசகம், சீவக சிந்தாமணி, ஆசாரக்கோவை, முதலியவற்றிலும் கொட்டாவி பற்றிய கருத்துக்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Read more: கண் கருவளையம் மறைய டிப்ஸ்

பெருங்காயம் நன்மைகள்