ஊக்கமுடைமை என்றால் என்ன

ஒரு மனிதனானவன் ஊக்கத்துடன் செயற்படும் போதே ஒரு செயலை மிகவும் சிறப்பாக செய்ய முடியும். மேலும் ஊக்கத்துடனும் ஆர்வத்தடனும் மேற்கொள்பவரது செயல்களானது வெற்றியினையே தரும்.

ஊக்கமுடைமை என்றால் என்ன

ஊக்கமுடமை என்பது ஒரு செயலை ஆற்றுவதில் மனவெழுச்சியின்றி செற்படுவதே ஊக்கமுடமை எனப்படும். ஊக்கமுடமை பற்றி திருக்குறளில் பொருட்பால் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஊக்கமுடமையானது நிலையான ஒரு உடமையாகவே காணப்படகின்றது.

திருக்குறளில் ஊக்கமுடமை அதிகாரங்கள்

இது பொருட்பாலில் இடம்பெற்றுள்ளது. ஊக்கமுடமை பற்றி மிகவும் சிறப்பாக ஒவ்வொரு அதிகாரங்களும் காணப்படுகின்றன.

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார்
உடையது உடையரோ மற்று

பொருள்: ஒருவர் ஒன்றை உடையவர் எனின் அவர் ஊக்கத்தினை உடையவரே அவ்வூக்கம் இல்லாதவர் மற்றய எவற்றை உடையவராயினும் உடையவர் ஆவாரே என்று ஊக்கத்தினுடைய சிறப்பு பற்றி எடுத்தியம்புகிறது.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்

பொருள்: ஊக்கமுடமையே நிலையான உடமை என்று குறிப்பிடுவதோடு பொருளுடமை நிலையின்றி நீங்கி போகும் என இவ் அதிகாரத்தில் காணப்படுகின்றது.

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார்

பொருள்: ஊக்கத்தை உறுதியான கைப்பொருளாக உடையவர் எம் செல்வத்தை இழந்து விட்டோம் என்று வருந்தமாட்டார்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை

பொருள்: தளராத ஊக்கமுடையவனிடத்தில் செல்வமானது தானே வழிகேட்டு வரும் என இவ் அதிகாரமானது தெளிவுபடுத்துகின்றது.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு

பொருள்: நீர் பெருக்கின் அளவிற்கு தகுந்தவாறு தண்டின் நீளமானத அமையும். அது போல மாந்தரின் ஊக்கத்தின் அளவுக்கு தகுந்தவாறே உயர்வு அமையும்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து

பொருள்: நினைப்பவற்றை எல்லாம் உயர்ந்தவையாய் நினைத்தல் வேண்டும் உடனே நிறைவேறாவிடினும் விடாமல் மேற்கொள்ள வேண்டிய பெருமையுடையவை அவை.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு

பொருள்: அம்பு தன் உடலில் ஆழப் புகுந்தாலும் அதை தாங்கி தன் கடமையில் சோராமல் ஊன்றி நிற்கும் யானை அதுபோலவே ஊக்கமுடையார் தனக்கு அழிவு வருமிடத்தும் சிறிதும் கடமையில் சோர்வடையார்.

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு

பொருள்: பரந்த உலகில் யாம் கொடைத்தன்மை உடையோம் எனும் பெருமையை ஊக்கமில்லாதோர் என்றும் அடையமாட்டார்.

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்

பொருள்: உடல் பெரிதாகவும் கூர்மையான கொம்பு உடையதாகவும் யானை இருப்பினும் புலி ஊக்கமாகத் தாக்கும் போது அஞ்சி வெருண்டு விடும்.

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅஃ தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு

பொருள்: ஒருவனுக்கு உள்ளத்தில் உள்ளதாகிய பெருவளம் ஊக்கமேயாம், அதனை இல்லாதவர் வரம் போல்வர், மக்கள் எனும் பெயரும் வடிவமுமே வேறுபாடு ஆகும்.

ஊக்கமுடையவரின் சிறப்புக்கள்

ஒரு செயலை திறன்பட சிறப்பாக மேற்கொள்வதற்கு ஊக்கமுடமையானது துணை புரிகின்றது. ஊக்கமுடைய ஒருவரினால் ஒரு செயலில் வெற்றி பெறவும் மீண்டும் அந்த செயலினை மேற்கொள்ளவும் முடியும்.

ஊக்கமுடையவர்கள் தோல்வியினை கண்டு அஞ்சாமல் மீண்டும் முயற்சி செய்ய உந்து சக்தியாக ஊக்கமுடமையானது காணப்படுகின்றது. மேலும் தளராத நெஞ்சம் கொண்டவர்களாகவே காணப்படுவர்.

ஊக்கமுடையவர்கள் ஒரு காரியத்தில் இறங்கிவிட்டால் அது வெற்றி பெறும் வரை போராடுவர். எனவேதான் ஊக்கம் என்பது ஒரு தனிமனிதனுடைய வாழ்வில் சிறந்ததாக காணப்படுவதோடு வாழ்வில் வெற்றி பெறுவதற்கும் ஊக்கமுடமையானது துணை புரிகின்றது.

Read More: பனை மரத்தின் சிறப்புகள்

அழகியல் கல்வியின் முக்கியத்துவம்