பாலினம் என்றால் என்ன

ஒரு சமூகமானது ஆண், பெண் மற்றும் பல்வேறு பாலினத்தவர்களை கொண்டமைந்து காணப்படுகின்றது.

பாலினம் என்றால் என்ன

பாலினம் என்பது ஆணையும் பெண்ணையும் சார்ந்ததும் அவற்றை வேறுபடுத்துவதுமான பான்மைகளின் நெடுக்கமே பாலினம் எனப்படும். அதாவது ஆண், பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களை சமுதாயம் மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் வேறுபடுத்துவதனை பாலினமாக கொள்ளலாம்.

பாலின சமத்துவம்

பாலின சமத்துவம் என்பது சமூகத்தில் ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் சமமான உரிமைகள் வழங்கப்படுகின்றமையினேயே பாலின சமத்துவம் எனப்படும். ஆணுக்கு வழங்கப்படுகின்ற உரிமைகளைப் போன்றே சமமான உரிமைகளை பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதே பாலின சமத்துவத்தின் நோக்கமாகும்.

பாலின சமத்துவத்தினை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும் என்பதோடு பாலின சமத்துவமானது ஆண், பெண் இருவரையும் சமமாகவே கருதுகின்றது.

பாலின சமத்துவமின்மை

ஆண் அல்லது பெண் பாலின பாத்திரங்களுக்கு பொறுப்புக்கள் ரீதியில் ஏற்றத் தாழ்வுகள் மற்றும் வேறுபாடுகள் காணப்படும் இதுவே பாலின சமத்துவமின்மை எனப்படும்.

இது சமூக, பொருளாதார, கலாச்சார ரீதியாக காணப்படுகின்றது. பாலின ஏற்றத் தாழ்வு பாலின சமத்துவமின்மை என்பது பாலினம் காரணமாக தனி நபர்களிடையே உள்ள ஏற்றத் தாழ்வுகளை குறிப்பிடுகின்றது.

பாலினமானது சமூக தொடர்புகள் மூலமாகவும் உயிரியல் ரீதியான குரோமோ சோம்கள், மூளை அமைப்பு மற்றும் ஹார்மோன் வேறுபாடுகள் மூலமாகவும் பாலினமானது கட்டமைக்கப்படுகின்றது.

பெண்களுக்கென்று தனியாக பல்வேறு சட்டதிட்டங்கள் காணப்படினும் அவற்றினூடாக பெண்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது தொடர்ந்து கொண்டேதான் காணப்படுகின்றது. இன்றும் பெண்களுக்கெதிராக பல்வேறு வன்முறைகள் நடந்தேறிக் கொண்டு காணப்படுகின்றன.

பெண்களானவர்களை இன்று சமூகத்தில் ஆண்களை மதிப்பது போன்று மதிக்காது பல்வேறு வன்முறைகளுக்குள் உட்படுத்தி செயற்பட்டு வருகின்றனர்.

பாலின சமத்துவமின்மைக்கான காரணங்கள்

குழந்தை திருமணம்

இன்று சிறுவயதிலேயே பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றார்கள். இதன் காரணமாக உடல் ஆரோக்கியம் மற்றும் உளரீதியான பல்வேறு விடயங்களை இளவயது திருமணமானது பாதிப்படையச் செய்கின்றது.

மேலும் புரிந்துணர்வு இல்லாத பருவத்தில் இடம் பெறும் சிறுவயது திருமணத்தினால் பல்வேறு பிரச்சினைகள் குடும்பத்தில் ஏற்படுகின்றது. இதனூடாக ஒரு பெண்ணின் திருமண வாழ்க்கையானது கேள்விக் குறியாக காணப்படுகின்றது.

கல்வி அறிவின்மை

பாலின சமத்துவமின்மைக்கான பிரிதொரு காரணமாக கல்வி அறிவின்மையினை சுட்டிக்காட்டலாம். கல்வி அறிவின்மையின் காரணமாக இன்று பாலின சமத்துவம் பற்றிய புரிதல் அனேகரிடத்தில் காணப்படுவதில்லை. இதன் காரணமாக பல்வேறு குற்ற விடயங்கள் நடந்தேறுகின்றன.

சமூக தீமைகள்

பாலின சமத்துவமின்மைக்கான காரணங்களாக இன்று சமூகத்தில் பல்வேறு தீய விடயங்கள் நடந்தேறுகின்றன. அதாவது கற்பழிப்பு, வரதட்சணை, பெண்களுக்கெதிரான வன்முறை போன்றனவாகும். இதனூடாக பாலின சமத்துவமானது பேணப்படாது காணப்படுகின்றன.

பெண் குழந்தைக்கு எதிரான பாகுபாடு

ஆண் குழந்தைகளை போலல்லாமல் பெண் குழந்தைகளை குடும்பத்தில் சரியாக நடத்துவதில்லை. மேலும் ஒரு பெண்ணின் பிறப்பை விட ஓர் ஆண் குழந்தையின் பிறப்பினையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இன்று பெண் சிசுக் கொலையானது அதிகரித்து காணப்படுகின்றது.

பாலின சமத்துவமின்மையின் வகைகள்

  • இயல்பான சமத்துவமின்மைதொழில் முறை அல்லது வேலை வாய்ப்பு ஏற்றத் தாழ்வு
  • உரிமையாளர் சமத்துவமின்மை
  • வீட்டு சமத்துவமின்மை
  • சிறப்பு வாய்ப்பு சமத்துவமின்மை
  • குடும்பத்தில் ஏற்றத் தாழ்வு

மேற்குறிப்பிட்ட வகையில் பல்வேறு பாலின சமத்துவமின்மையின் வகைகள் காணப்படுவதோடு இவ்வாறு காணப்படுகின்ற பட்சத்தில் பாலின சமத்துவத்தினை பேண முடியாது என்பதோடு ஆண் மற்றும் பெண் இருவரையும் சமமாக பார்ப்பதினூடாக மாத்திரமே சிறந்த பாலின சமத்துவத்தை ஏற்படுத்த முடியும்.

ஒரு நாடானது சிறப்பாக வளர்ச்சியடைய பாலின சமத்துவம் மிகவும் அத்தியாவசியமானதொன்றாகும்.

Read more: பெண்ணியம் என்றால் என்ன

பெண்களின் முன்னேற்றம் கட்டுரை