அமில மழை என்றால் என்ன

amila malai enral enna

நாம் வாழும் சுற்றுச்சூழலில் பல்வேறுபட்ட இயற்கைப் பாதிப்புக்கள் இடம் பெறுவதனைக் காண முடிகின்றது. சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினைகளில் அமில மழை முக்கியமானதாகும்.

அமில மழையானது மழையாகவோ, பனியாகவோ, புகையாகவோ பெய்யலாம். அமில மழை என்ற சொல் 1852 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் அன்கஸ் ஸ்மித் என்ற வேதியியலாளரால் முதலில் உச்சரிக்கப்பட்டது.

வேதியியல் ராயல் சொசைட்டி இவரை அமில மழையின் தந்தையெனக் குறிப்பிடுகின்றது.

அமில மழை என்றால் என்ன

அமில மழை என்பது சதாரண மழை போன்றதல்ல அதிகளவான அமிலத் தன்மையுடைய மழையாகும். சாதாரண மழையின் கார அமில நிலை அளவு 5 மற்றும் 6 என்ற அளவில்தான் இருக்கும் ஆனால் அமில மழைநீரின் கார அமில அளவு அதிகளவாக இருக்கும்.

அமில மழை காரணங்கள்

அமில மழை பெய்வதற்கு இயற்கை மற்றும்இ செயற்கைக் காரணங்கள் செல்வாக்குச் செலுத்துகின்றன. மனிதனது செயற்பாடுகள் மூலம் ஏற்படும் காற்று மாசுபாட்டின் மூலம் அமில மழை பெய்கின்றது.

காற்றை மாசுபடுத்தும் சல்பர் டை ஆக்சைடு (Sulphur dioxide), நைட்ரஜன் ஆக்ஸைடு (Nitrogen oxide) போன்றவை காற்றில் கலப்பதனால் அமில மழை பெய்கின்றது.

வாகனப்புகை, தொழிற்சாலைப் புகை எரிப்பதால் ஏற்படும் புகை மற்றும் நிலக்கரி எரிப்பதால் அதிலிருக்கும் சல்பர் மற்றும் கார்பன் அணு ஆகியவை ஆக்சிஐன் அணுவுடன் கலந்து Sulfur Dioxide ஆக மாறுகின்றது.

இவற்றின் காரணமாக அமில மழை உண்டாகின்றது. எரிமலைச் சீற்றத்தால் இயற்கையாகவே அமில மழை உண்டாகின்றது.

இங்கிலாந்திலும், ஸ்கொட்லாந்திலும் இருக்கும் தொழில் நகரங்களுக்கு அருகில் மழை நீரை ஆய்வு செய்யும் போது ஸ்மித் அமில மழையைக் கண்டறிந்தனர்.

அமில மழை விளைவுகள்

அமில மழையானது மனித உடலில்படும் போது அரிப்பு உள்ளிட்ட தோல் வியாதிகள் ஏற்படும்.

அமில மழை மண்ணில் விழுந்து மண்ணின் தரம் குன்றும். மண்ணிலுள்ள கல்சியம் உட்பட பிற சத்துக்களும் இல்லாமல் போய்விடும். விவசாய நிலங்களின் மண்வளம் பாதிப்படைவதால் விவசாய உற்பத்திக்கும் பங்கம் விளைவிக்கின்றது. இதன் அமிலத் தன்மை மண்ணிலுள்ள சிறு புழுக்கள் போன்றவற்றையும் அழிக்கும்.

மரம், செடி, கொடிகள் மீது பட்டு கிளைகள், இலைகள் போன்றவற்றைப் பாதித்து தாவர வளர்ச்சியினை சேதப்படுத்துவதுடன் தாவரங்களையும் அழிக்கும்.

கட்டிடங்கள் மீது அமில மழை படும் போது அது கட்டிடங்களையும் பாதிப்புக்குள்ளாக்கின்றது. குறிப்பாக கட்டிடங்களின் பளபளப்புத் தன்மை பாதிப்படையும்.

ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளிலுள்ள மீன்கள் மற்றும் பிற உயிரினங்கள் போன்றவையும் இறப்பை சந்திக்கும்.

அமில மழை தீர்வுகள்

புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதனைக் கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் மின்சாரம் பயன்படுத்துவதனைக் குறைக்க வேண்டும். மின்சாரமானது புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தியே உருவாக்கப்படுகின்றன.

சூரிய மற்றும் காற்று மூலமாக இயங்கும் வாகனங்கள் மற்றும் மின்சாரம் ஆகிய ஆதாரங்களில் கவனம் செலுத்துவது சிறந்ததாகும்.

ஒவ்வொரு நபரும் தனிநபர் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் அமில மழை ஏற்படாமல் தடுக்கலாம். சொந்த வாகனத்தைத் தவிர்த்து பொதுப்போக்குவரத்து, நடைபயிற்சி என நமது வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதன் மூலம் அமில மழையை ஓரளவிற்குக் கட்டுப்படுத்தலாம்.

Read more: அமில மழை காரணங்கள் மற்றும் விளைவுகள்

மழைநீர் சேகரிப்பின் பயன்கள்