பாவங்கள் போக்கும் நதி

கங்கை நதி

ஒரு மனிதனுடைய பாவத்தினை போக்கும் நதி கங்கை நதி என்று குறிப்பிடப்படுகின்றது. கங்கை நதியானது மிகவும் தூய்மையான நதியாக காணப்படுகின்றது. கங்கை நதியில் குளிப்பவர்கனது பாவங்கள் அழிந்து போவதோடு இது ஒரு புனிதமான நதியாக காணப்படுகின்றது.

கங்கை நதி

இந்து மதத்தில் புனிதமான நதியாக கங்கை நதி காணப்படுகின்றது. கங்கை நதியில் குளித்தால் செய்த பாவங்கள் அனைத்தும் விலகிவிடும். மேலும் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வரும் இந்துக்கள் இறந்து போன உறவினர்களின் சாம்பலை கங்கையில் கரைக்கின்றனர். இதனூடாக இறந்தவர் சொர்க்கத்தை அடைவார் என்பது நம்பிக்கையாக கருதப்படுகின்றது.

பாவத்தை போக்கும் கங்கை நதி

கங்கை நதியினில் குளிப்பவர்களது பாவங்கள் அழிந்து போகும். அதாவது கங்கை நதிக்கரையில் சிவபெருமானும் பார்வதியும் மாறு ரூபத்தில் சென்றார்கள். வயதானவரான சிவபெருமானும் பாமரப் பெண்ணாக பார்வதியும் மாற்று உருவில் நதியில் குளித்தார்கள்.

இந்த சந்தர்ப்பத்தில் வெள்ளம் ஏற்பட்டது. நீச்சல் தெரிந்த அப்பெண் கரையினை அடைந்தாள். தன்னுடைய கணவன் நீரில் மாட்டிக் கொண்டதை அறிந்த அவள் அவரை காப்பாற்ற பிறரிடம் வேண்டினால். சிலர் காப்பாற்ற சென்றனர்.

அவர்களை தடுத்து அப்பெண் பாவம் செய்யாதவர் மட்டுமே தன்னுடைய கணவனை காப்பாற்ற வேண்டும் என கூறினாள். அனைவரும் சிலையாக நின்றனர். ஓர் இளைஞர் மட்டும் கங்கை நீரில் மூழ்கி தன்னுடைய பாவங்களை தீர்த்து அவளுடைய கணவரை காப்பாற்றினான்.

அதாவது கங்கையில் மூழ்கி அனைவரது பாவங்களையும் தீர்க்கலாம் என்பதானது முழுமையாக இதனை நம்புகின்றவர்களுக்கு மாத்திரமே ஆகும்.

கங்கை நதியின் சிறப்பம்சங்கள்

கங்கை நதியானது இந்தியாவின் தேசிய நதியாகும். இது இந்துக்களின் மிகவும் புனிதமானதொரு ஜீவ நதியாகும். இது கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்குகின்ற ஒரு நதியாகும்.

கங்கையில் வாழ்நாளில் ஒரு முறையாவது நீராடினால் அவர்கள் பல பிறவிகளில் புரிந்த பாவங்களில் இருந்து விடுபடுகின்றனர். மேலும் கங்கை நீரில் நீராட பல இலட்சக்கணக்கான மக்கள் நீராட வருகின்றனர்.

இந்த கங்கை நதியின் சிறப்பியல்புகளுள் ஒன்றாக தினந்தோறும் மாலை வேளையில் கங்கை நதிக் கரையில் கங்கைக்கு பூஜை செய்வது வழக்கமாகும். இந்த பூஜையினை கங்கா ஆரத்தி என்று அழைக்கப்படுகின்றது.

கங்கை நதியில் நீராட முடியாதவர்கள் தங்கள் வீட்டில் குளிக்கும் போது கங்கை நதி மந்திரத்தை சொல்வதினூடாக நதியில் குளித்த புண்ணியம் கிடைக்கும் என்று நம்புகின்றனர்.

கங்கை நதியின் நீரானது உயிரினங்களின் எலும்பினை கரைத்து விடக் கூடிய சக்தி காணப்படுகின்றது. இதன் காரணமாக இறந்தவர்களின் சாம்பல்களை இந்த நதிக்கரையில் கரைக்கின்றனர்.

கங்கை நதியானது வழக்கத்திற்கு மாறாக ஒக்ஸிஜனை தன்னகத்தே வைத்துக் கொள்ளக் கூடியதாக காணப்படுகின்றன. இதனால் கங்கை நதியானது தன்னை தானே சுத்தம் செய்து கொண்டும் பக்டீரியாக்களை அழிக்கவும் செய்யும் தன்மையினை பெற்றுள்ளது.

கங்கை நீரில் குளிக்கும் போது ஒருவருடைய எண்ண ஓட்டமானது சீர் பெற்று சிறந்த முறையில் சிந்தித்து செயற்பட கங்கை நதியானது துணை புரிகின்றது.

மேற்குறிப்பிட்ட வகையிலேயே கங்கை நதியானது சிறப்பு பெற்று விளங்குவதோடு கங்கை நதியானது பாவங்களை போக்கக் கூடிய ஒரு சிறப்பு மிக்க நதியாகவே காணப்படுகின்றது.

மேலும் ஏனைய நதிகளை விட பல்வேறு அற்புதங்களை தன்னகத்தே கொண்டமைந்து காணப்படும் ஒரு நதியாக திகழ்கின்றது.

நதிகளிடையே மிகவும் வித்தியாசமாக பல்வேறு சிறப்புக்களை உடைய ஒரு நதியாக கங்கை நதி திகழ்கின்றது. இந்து மக்கள் தங்களது பாவங்கள் அனைத்தையும் அழிக்க கங்கை நதியானது துணை புரிகின்றது.

Read More: சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு

வேதங்கள் எத்தனை அவை யாவை