இரட்சிப்பு என்றால் என்ன

ratchippu in tamil

அறிமுகம்

“இரட்சிப்பு” என்ற வார்த்தை பரிசுத்த வேதாகமத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் முக்கியமான வார்த்தைகளில் ஒன்றாகும். இரட்சிப்பு ஒவ்வொருவருடைய வாழ்விலும் அவசியம்.

பாவங்களிலிருந்து விடுதலை அவசியம். வியாதிகளிலிருந்து பயங்கரங்களிலிருந்து, பாதுகாப்பற்ற தன்மைகளிலிருந்து விடுதலை அவசியம். மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் ஆதிமுதல் சொல்லப்பட்டு வரும் ஒன்று. பழையன களைந்து புதியன தரித்துக் கொள்ளுதல் முக்கியம்.

புதிய வாழ்வு, புதிய திருப்பம் தேவை இது நமது வாழ்விலே ஒரு நாள் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற வேண்டிய ஒன்று.

இரட்சிப்பின் வெளிப்பாடாக பரிசுத்த ஆவியானவர் மூலாக இருதயத்தில் மெய்யான சமாதானமும், மகிழ்ச்சியும் உண்டாகும். பாவத்தையும் உலகத்தின் பொல்லாத வழிகளையும் இரட்சிக்கப்பட்டவன் வெறுக்கத் துவங்குகிறான்.

இரட்சிப்பு என்றால் என்ன

ஆபத்து அல்லது துன்பத்திலிருந்து மீட்கப்படுகிறதே இரட்சிப்பு ஆகும். இரட்சித்தல் என்பது விடுவி அல்லது பாதுகாத்துக்கொள் என்பதாகும். அதாவது பாவ, சாப, கட்டுகளிலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் விடுவிக்கப்பட்டு நித்திய ஜீவனுக்குள் பிரவேசிக்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ளும் தகுதியே இரட்சிப்பாகும்.

எதிரிகளிடமிருந்து, போராட்டங்களிலிருந்து, நோய்களிலிருந்து, நரகத்திலிருந்து பாதுகாப்பையும், விடுவிப்பதையும் குறிப்பதாக வேதத்தில் பல இடங்களில் இச்சொல் கையாளப்பட்டுள்ளது.

மேலும் புதிய ஏற்பாட்டில் இரட்சிப்பு என்பது ஒருவர் பாவமன்னிப்பு அடைந்து, கிறிஸ்துவுக்காகக் கிறிஸ்துவைப் பற்றிக் கொண்டு பரிசுத்த ஆவியானவரால் நடத்தப்படுவதற்கு அர்ப்பணிப்பதைக் குறிக்கின்றது.

இரட்சிப்பு எவ்வாறெல்லாம் அழைக்கப்படுகின்றது

  • மனம் திரும்புதல் (மத் 4:17; அப் 17:30)
  • மனம்திரும்புதலும் பாவமண்ணிப்பும் (லூக் 24:47)
  • பாவ மண்ணிப்பாகிய மீட்பு (எபே 1:7; கொலோ 1:14)
  • பாவம், அக்கிரமத்திலிருந்து இயேசுவுடன் உயிர்பிக்கபடுதல் (எபே 2:1,5)
  • மறுபடியும் பிறத்தல் (யோவா 3:3,7)
  • தேவனால் பிறத்தல் (யோவா 1:13)
  • இயேசுவை ஏற்றுக் கொள்ளுதல் தேவனுடைய பிள்ளையாதல் (யோவா 1:12)
  • புது சிருஷ்சியாதல் (2கொரி 5:17)
  • தேவனுடன் ஒப்புரவாகுதல் (எபே 2:16)
  • பிதாவிடம் சேரும் சிலாக்கியம் பெறுதல் (எபே 2:18)
  • கிறிஸ்துவை சேறுதல், இஸ்ரவேலுடைய கானியாட்சிக்கு உள்ளாதல், வாக்குதத்ததின் உடன்படிக்கைக்கு உடன் பங்காளியாதல், நம்பிக்கை உள்ளவராகுதல், தேவனுள்ளவராகுதல் (எபே 2:12-13)
  • நீதிமானாக்கப்படுதல் (லூக் 18:14)
  • சீஷனாதல் (மத் 28:19)
  • விசுவாசியாதல் (எபே 1:13)
  • நித்திய ஜீவனை உடையவனாகுதல் (யோவா 3:16; 1யோவா 5:11-12)

என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.

இரட்சிக்கபடுவதற்கு என்ன செய்ய வேண்டும்

இயேசுவைப் பற்றிய திருத்தமான அறிவு இரட்சிப்புக்கு இன்றியமையாதது. விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான். கிருஷ்தவ குடும்பத்தில் பிறந்திருப்பினும் தனிப்பட்ட முறையில் தேவனோடு கொண்டிருக்கும் உறவின் அடிப்படையிலேயே ஒருவர் இரட்சிப்பை பெற முடியும்.

இயேசுவிலிருக்கும் நம் விசுவாசம் தொடர வேண்டும். ஆனால், அது முழுமையாக இருக்க வேண்டும். கட்டாயமாகத் தொடரப்பட வேண்டும் என்ற விவாதத்திற்கு ஆதாரம் பைபிளில் கிடையவே கிடையாது.

இரட்சிப்பு என்பது கடவுளிடமிருந்து வரும் இலவச பரிசு சம்பாதித்து பெற முடியாது. இருப்பினும், அது நம் பங்கில் முயற்சி தேவைப்படுத்துகிறது.

நாம் விசுவாசத்துடன் அவரிடம் வந்தால் தேவன் நம்மை இரட்சிப்பார் என்று உறுதியளித்திருக்கிறார். “எல்லா மனுஷரும் இரட்சிக்கப்பட” வேண்டும் என்பதே கடவுளுடைய விருப்பம் என்று பைபிள் சொல்லுகிறது.

(1 தீமோத்தேயு 2:3, 4) இரட்சிப்பில் கிறிஸ்துவின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்ட மனச்சாட்சியைப் பெற்றுக்கொண்ட நாம் பிராணிகளுக்கு மட்டுமன்றி மனிதர்களில் முன்னிலையிலும் குற்றமற்றவர்களாக கற்றுக்கொள்ள முயற்சி செய்வதே சிறந்ததாகும்.

You May Also Like :
நார்ச்சத்து மிக்க உணவுகள்
உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்