தமிழ் மொழியின் பண்புகள் யாவை

tamil moliyin panbugal

மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாகும். உலகில் சுமார் 6 ஆயிரம் மொழிகள் பழக்கத்தில் உள்ளன. அத்தனை மொழிகளிலும் 6 மொழிகள்தான் உலகத்திற்கு நாகரீகம் சொல்லிக்கொடுத்த பாரம்பரியமுடைய மொழிகள். அவற்றில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.

நம் தமிழ் மொழிக்குப் பதினாறு பண்புகள் உள்ளன. இந்த பண்புகள் பற்றி இப்பதிவில் காண்போம்.

தமிழ் மொழியின் பண்புகள் யாவை

#1. தொன்மை.

கல்தோன்றி மண்தோன்றா குறிஞ்சி நிலத்தில், முன் தோன்றிய மூத்த மொழி. தமிழ் மொழி உலக முதன் மொழியாகும். தமிழ் மொழி உலகத்தின் முதல் தாய்மொழியாகும்.

#2. முன்மை.

முன்மை என்றால் முதன்மையாக நிற்கும் தன்மை ஆகும்.

#3. எண்மை (எளிமை).

எளிமையான மென்மையான முப்பதே ஒலிகளை மட்டுமே கொண்டு இயங்கும் மொழி நம் தமிழ்மொழியானது எழுதவும், படிக்கவும், பேசவும் மிகவும் எளிதானது. இதனாலேயே தமிழ் இனிய தமிழ் என்பதோடு, எளிய தமிழ் எனவும் கூறப்பெறுகிறது.

#4. ஒண்மை (ஒளிமை).

ஒளிமை என்பது அறிவொளியாய் இருந்து மக்களை வழிநடத்தும் இலக்கியங்களையும், இலக்கணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள மாண்பினைக் குறிக்கும். வாழ்வில் ஒளி சேர்க்கும் இலக்கியங்கள் இருப்பதனால் தான், தமிழுக்கு ஒண்மை என்ற பண்பு உள்ளது என்று கூறுகிறோம்.

#5. இளமை.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய தமிழுக்கு இளமை உண்டு. இன்றும் இளமை குன்றாது தமிழ்மொழியானது காணப்படுகின்றது.

பல மொழிகளை பெற்றெடுத்த தாயாய் விளங்கும் தமிழ் மொழியானது ஆரிய சமஸ்கிருதம் போல் பேச்சு வழக்கின்றி அழிந்து சிதைந்து போகாது, இளமையோடு வாழ்கின்றது.

#6. வளமை.

தமிழ் மொழி இலக்கிய, இலக்கண வளமை கொண்டது. யாப்பு வளம், இசை வளம், பொருள் வளம் என அனைத்து வளங்களையும் கொண்டது.

#7. தாய்மை.

சமஸ்கிருதத்தில் ஐந்தில் இரு பங்கு தமிழ்ச்சொல்லே என்பது இன்று ஆராய்ச்சியால் நிறுவப்பட்டுள்ளது. இது போன்றவை தமிழின் தாய்மைக்குத் தக்க சான்றுகள் ஆகும்.

#8. தூய்மை.

தமிழர்களுக்கு உள்ள பெருமை எல்லாம் தொன்று தொட்டுத் தூயதாக வழங்கி வரும் தமிழ்மொழியினையே சார்ந்திருக்கின்றது என்கிறார் மறைமலையடிகள். வடமொழி மட்டுமல்லாது பல மொழிகள் தமிழைத் தாக்கியபோதும், மீண்டும் மீண்டும், மீண்டு எழும் தமிழின் தூய்மை அதன் இயல்பான பண்பாகும்.

#9. செம்மை.

தமிழ் மொழி, செந்தமிழ் கொடுந்தமிழ் என்ற இரு நிலைகளாக உள்ளது. சொற்களின் திருந்திய வடிவையும் ஒழுங்கையும், தமிழில் நாம் தெளிவாக காண முடியும்.

#10. மும்மை.

இயல், இசை, நாடகம் என்றே தொன்று தொட்டு முதலே இயங்கி வருகின்றது.

#11. இனிமை.

“தமிழ்” என்பதற்கு “இனிமை” என்றும் ஒரு பொருளுண்டு. தீந்தமிழ், தேந்தமிழ் போன்ற அடைமொழிச் சொற்களும் தமிழின் இனிமையை மெய்ப்பிக்கும்.

#12. தனிமை.

தனிமைச் சுவையுடைய சொல்லை – எங்கள் தமிழினும் வேறெங்கும் யாம் கண்டதில்லை! என பாவேந்தர் தமிழின் தனிமை பண்பை பற்றி கூறியுள்ளார்.

தமிழ் என்னும் சொல் வல்லோசை, மெல்லோசை, இடையோசை சிறந்து இணைந்திருத்தலால் மூவினமும் சேர்ந்த தமிழ் என்னும் சொல் தனிச் சொல்லே ஆகும்.

#13. பெருமை.

மானிட வாழ்க்கையை அகம், புறம், என இருவகைப்படுத்தி இலக்கணங்களை கொண்ட பெருமை தமிழ்மொழி ஒன்றுக்குத்தான் உண்டு.

#14. திருமை.

திருமைக்கு அழகு என்று பொருள்.

#15. இயன்மை.

இயன்மை என்பது இயல்பான தன்மை எனப்பெருள் கொள்ளலாம். தமிழர்களால் தம் வாழ்வோடு இணைந்து தம் வாழ்வுக்காக படிப்படியாக உருவாகிய மொழியாகும்.

#16. வியன்மை.

வியன்மை என்பது உலகெங்கும் பரவியுள்ள தன்மையைக் குறிக்கும்.

You May Also Like :
நூலகத்தின் பயன்கள் கட்டுரை
இளைஞர்கள் பற்றிய கட்டுரை