ஓசோன் படலம் என்றால் என்ன

ozone padalam in tamil

அறிமுகம்

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசடைவு காரணமாக நாம் வாழும் பூமியில் பல்வேறு மாற்றங்கள் தினம் தினம் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அதில் ஒன்று ஓசோன் படலப் பாதிப்பாகும்.

நாம் இயற்கையை சிறிது சிறிதாக அழித்து வருகின்றோம் அந்த இயற்கை ஒரு நாள் பொறுக்க முடியாமல் பேரழிவை உருவாக்கி தன்னைக் காப்பாற்றிக் கொள்கின்றது.

ஓசோன் படலம் என்றால் என்ன

பூமிக்கு மேல் சுமார் 20 தொடக்கம் 30 கிலோ மீட்டர் உயரத்தில் சூரியனின் புறஉதா கதிர்களை கட்டுப்படுத்தும் ஒரு படலமே ஓசோன் படலமாகும்.

இது ஆக்சிசன்(O3) மூலக்கூறுகளால் உருவாக்கப்பட்டிருக்கும். வளிமண்டலத்தில் ஒரு படையாக உருவாகி பூமியினுள் பாதகமான கதிர் வீச்சுக்கள் உள்வராமல் இது தடுக்கின்றது.

பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலம் முக்கிய ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது Exosphere, Thermosphere, Mesosphere, Stratosphere, Troposphere என்பவையே அவை ஐந்துமாகும்.

இந்த ஐந்து அடுக்குகளில் Stratosphere அடுக்குகளின் மேற்பகுதிகளில்தான் ஓசோன் படலம் காணப்படுகின்றது. இவை அனைத்து அடுக்குகளும் வாயுவால் உருவானது. ஓசோன் படலம் மூன்று ஆக்சிஜன்(O3) அணுக்களை கொண்டுள்ளது.

ஓசோன் ஒரு வாயு இது இள நீல நிறம் கொண்டது. கிரேக்க மொழியில் ஓசோன் என்றால் வாசம் என்று அர்த்தம். நல்ல மனத்தையே நாம் வாசம் என்கின்றோம். அப்படி இல்லாததை நாற்றம் என்கின்றோம்.

ஓசோனும் அப்படித்தான் இது லேசான மீன் வாடையைக் கொண்டது சில சமயம் சாக்கடையில் இருந்து வரும் துர்நாற்றத்தை போல் இருக்கும். இடி மின்னலுடன் கூடிய காற்று வீசும்போது இத்தகைய வாடையை நுகர முடியும். அதுதான் ஓசோனின் மணமாகும். அதிகாலையில் கடற்கரையில் நடக்கும் போது இதனை உணரலாம்.

ஓசோன் படலப் பாதிப்பு

பூமியில் 2.5%ற்கும் மேல் ஓசோன் படலம் அழிந்து போய்விட்டது. இதற்கு காரணம் பசுமை குறைந்து போனதேயாகும். இதனால் காற்றில் வெப்பம் பெருகி ஓசோன் படலம் பாதிப்படைகின்றது. நேரடியாக சூரியனின் புறஊதா கதிர்கள் மனித உடலின் மீது பட்டால் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாக பயன்படுத்தும் இரசாயனத்தால் ஓசோன் படலம் பாதிப்படைகின்றது. குளிர்சாதனப் பெட்டி, ஏசி, தொழிற்சாலை போன்றவற்றிலிருந்து வெளியாகும் CFC எனும் குளோரோ புளோரோ காபனினால் பாதிப்படைகின்றது.

CFC காபன் வளிமண்டலத்தில் கலந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தற்போது இந்த உயிர் காக்கும் படலம் தீர்ந்து கொண்டிருப்பதாக 1970களில் பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். 1985 இல் இதன் விளைவு பற்றிய தீர்மானமாகக் கூற சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டது.

ஓசோன் மனிதனுக்குத் தரும் நன்மைகள் மற்றும் தீமைகள்

ஓசோன் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருந்த போதிலும் அவ்வப்போது பூமிக்கு அருகில் வந்து எம்மைச் சூழ்ந்து நிற்கும். நாம் இதனை அடிக்கடி உணர முடியும்.

ஓசோன் பூமியை விட்டு அதிகமான உயரத்தில் இருக்கும் போது சூரியனிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை தடுத்து அது பூமிக்கு ஊடுருவாமல் தடுக்கும் இது பூமியின் உயிரினங்களுக்கு சிறந்த கவசமாக இருக்கின்றது.

மனிதனுக்கு தோல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய புற ஊதாக் கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பும் இயற்கை வடிகட்டிதான் ஓசோன்.

ஓசோன் தாழ்வான உயரத்தில் இருக்கும் போது அதாவது நமக்கு அருகில் இருக்கும் போது காற்றை அசுத்தப்படுத்தும், மனிதர்கள் மற்றும் விலங்குகள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் சுவாசக் கோளாறை ஏற்படுத்தும், சில தாவரங்கள் ஓசோனின் தாக்கத்தால் கருகிப்போகும்.

Read more: ஓசோன் படலம் பற்றிய கட்டுரை

காற்று மாசுபாடு பற்றி தமிழ் கட்டுரை