நார்ச்சத்து மிக்க உணவுகள்

நார்ச்சத்து மிகுந்த உணவுகள்

நாம் உட்கொள்ளும் உணவுகள் ஊட்டச்சத்து உள்ளவையாக அமைந்தால்தான் உடல் ஆரோக்கியம் பேணப்படும். அதிலும் நார்ச்சத்துக்கள் நமது உடலுக்கு இன்றியமையாததாக உள்ளது.

எனவே நார்ச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுவது முக்கியமானதாகும். அதிகளவு நார்ச்சத்து உள்ள உணவுகள் பற்றிய பதில் காண்போம்.

நார்ச்சத்து மிக்க உணவுகள்

#1. பெருஞ்சீரகம்

வடிவத்தில் சிறியதாக இருந்தாலும் பெருஞ்சீரக விதைகள் அதிக நார்ச்சத்து கொண்டவை. 6 கிராம் உலர்ந்த பெருஞ்சீரகம் விதைகள் மூலம் சுமார் 2 கிராம் நார்சத்து கிடைக்கிறது.

#2. அவகாடோ

அவகாடோவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த சக்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகின்றது. நார்ச்சத்து நிறைந்திருப்பதால் உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

#3. ஆப்பிள்

ஆப்பிள் பழம் அதிக ஊட்டச்சத்து கொண்டது. விட்டமின்கள், நார்ச்சத்து, புரதங்கள், தாதுக்கள் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. ஒரு கப் ஆப்பிளில் 2.6 கிராம் நார்ச்சத்து உள்ளது.

இது செரிமானத்தை அதிகரிப்பதற்கு உதவுகின்றது. உண்ணும் உணவுகளே செரிமானம் அடைவதற்கும் உடல் எடை அதிகரிப்பதை தடுக்கவும் உதவுகின்றது.

ஆப்பிள் பழச்சாற்றை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம், செரிமானக் கோளாறு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், நினைவாற்றல் இழப்பு, புற்றுநோய்கள் போன்றவை வராமல் தடுக்கலாம்.

#4. பாசிப்பயறு

பாசிப்பயிற்றில் அதிகமாக நார்ச்சத்துக்கள், புரதம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்து காணப்படுகின்றன. 100 கிராம் பாசிப்பயறில் 16 கிராம் நார்ச்சத்து உள்ளது. தினசரி தேவையான நார்ச்சத்து பாசிப்பயிற்றிலேயே அடங்கியுள்ளது.

கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

#5. கொய்யாப் பழம்

கொய்யாப் பழம் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள பழமாகும். அதிலுள்ள சத்துக்கள் காரணமாக கொய்யா பழத்தை தினமும் சாப்பிட மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்து அளவில் 12 சதவீதம் உள்ளது.

#6. புடலங்காய்

நமது முன்னோர்களின் காலத்தில் இருந்து ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த காய்கறி வகைகளில் ஒன்றாக புடலங்காய் உள்ளது. புடலங்காயில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் இருப்பதால் அஜீரண கோளாறுகளை நீக்கி, நாம் சாப்பிடும் உணவுகளை எளிதில் ஜீரணமாக்குவதுடன், நல்ல பசியையும் தூண்டச் செய்கிறது.

#7. முருங்கக்காய்

முருங்கைக்காயில் நார்ச்சத்து அளவு அதிகம் உள்ளது. நார்ச்சத்து உடலுக்கு அவசியமானதாக இருந்தாலும் அது அதிகளவில் உடலில் சேர்வது ஆபத்தானதுதான். எனவே வாரத்தில் ஒரு தடவை முருங்கைக்காயை உண்பது நன்மை தரும்.

#8. பாதாம்

25 கிராம் பாதாமில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. இந்த நார்ச்சத்து 20% கரையும் நார்ச்சத்து ஆகும். 80% கரையா நார்ச்சத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு நன்மை தரக்கூடியது. அஜீரணக் கோளாறைப் போக்கி உணவை நன்கு செரிமானம் அடையச் செய்கிறது.

#9. அத்திப்பழம்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. எனினும் உலர்ந்த அத்திப்பழத்தில் அதிகளவு சக்கரை இருப்பதனால் இதனை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்வது நல்லது.

அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

#10. கேரட்

கேரட் நார்ச்சத்து நிறைந்த காய்கறியாகும். 10 கிராம் கேரட்டில் 3.6 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே வாரத்தில் 2 தடவையேனும் கேரட்டை உணவாகவோ யூசாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

You May Also Like :
சித்த மருத்துவத்தின் பயன்கள்
துத்தி இலையின் பயன்கள்