தேசிய இனம் என்றால் என்ன

dhesiya inam enral enna

ஒரு தேசிய இனம் உருவாகுவதற்கு, எப்போதுமே ஒரு பொதுவான மொழி மட்டுமே அடிப்படையாக அமைந்திருக்கவில்லை. பல நாடுகளில் மதம் கூட தேசிய இனத்தை வரையறுக்கும் காரணியாக உள்ளது.

பல தேசிய இனங்கள் ஒன்றாக வாழும் நாடுகளில் ஒரு தேசிய இனம் தனது மொழி, பண்பாடு, இனநலன் ஆகியவை பாதிக்கப்படுவதாக உணர்ந்தால் தன் இறையாண்மையைக் கையிலெடுத்துக் கொண்டு தன் தாயகத்தை அந்த பல்தேசிய நாட்டிலிருந்து பிரித்துத் தனிதேசத்தைப் படைத்துக் கொள்ளும்.

இது ஐரோப்பாவில் தோன்றி உலகம் முழுவதும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறையாக உள்ளது.

தேசிய இனம் என்றால் என்ன

ஒரு மொழி பேசுகிற இனம் தனக்கென ஒரு நீண்ட வரலாறு கொண்டு ஒரு தொடர்நிலத்தில் அந்த இனம் வாழ்ந்தால் அது தேசிய இனமாகிறது.

ஒரு தேசிய இனம் என்பது ஒருமைப்பாட்டு உணர்வாலும், பொது பண்பாட்டாலும், தேசிய பிரச்சினைகளாலும் இணைக்கப்பட்டுள்ள ஒரு மக்கள் தொகை கொண்ட சமூகப் பிரிவாகும் என வாட்சன் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

லெனினின் கருத்துப்படி சமுதாய வளர்ச்சிப் படிகளில் ஒரு கட்டத்தில் முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத ஒரு கட்டமாக தேசிய இனங்கள் உருப்பெற்றன என்றார்.

தேசிய இனப்பிரச்சினை

ஒரு நாட்டிலுள்ள பல இனங்களுக்கிடையே பிரச்சினைகள் எழும்போது ஒன்றை மற்றொன்று தடுக்க முற்படும் போது அதுவே தேசிய இனப் பிரச்சினை ஆகும்.

இந்த தேசிய இனப் பிரச்சினையில் இருந்து சுயநிர்ணயக் கோட்பாட்டை பிரித்து நோக்க முடியாது. இரண்டாம் உலக மகா யுத்த காலகட்டத்தில் ஏகாதிபத்தியம் நிலைகுலைய தேசியப் போராட்டங்கள் வலுவடைய சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு பொதுப்படையாக செயல்பூர்வமாகியது.

இக்கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இதனை மேலும் செயல் பூர்வமாக்குவதற்கான போராட்டம் உலகில் இன்று வரை நீடித்துக் கொண்டே இருக்கின்றது.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்தும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தில் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு முழு உலகு தழுவிய தேசிய இனங்களையும் கருத்தில் கொண்டதாக இடம்பெற்றுள்ளது.

பொதுவாக தேசிய இனப்பிரச்சினைக்கான காரணங்கள் பற்றி பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவற்றுள் முக்கியமானவையாக,

  • தேசிய இனப் பிரச்சினை அடிப்படையில் ஒரு வர்க்கப் பிரச்சினையாகும்.
  • தேசிய இனப்பிரச்சினையானது உணர்ச்சிவசமானது.
  • நவீனமயமாக்கலால் தேசியப் பிரச்சினை அதிகமாகியுள்ளது.

என பல கருத்துக்கள் உள்ளன.

தேசிய இனப்பிரச்சினை இன்று உலகின் நாலா பக்கத்திலும் ஏதோ ஒரு வடிவில் காணப்படுகின்றது. சமகால வரலாற்றில் இது ஒரு முக்கிய நடைமுறை பிரச்சினையாக உள்ளது.

வரலாற்று தேசிய இனப்பிரச்சினையை எழுமிடத்து அது காலம், சூழ்நிலை என்பவற்றிற்கேற்ப எழுகின்றது. அவையாவன,

  • குறிப்பிட்ட சில உரிமைக் கோரிக்கைகள் (குறிப்பாக சில மொழி மத உரிமைகள்)
  • சமஸ்டி கோரிக்கைகள்
  • தனிநாடு கோரிக்கைகள்

உலகில் பொதுவாக தேசிய இனப் பிரச்சனைகள் எழும்போது உடனடியாகவே பிரிந்துசெல்லும் கோரிக்கையை முன்வைப்பதில்லை.

சமஷ்டிக் கோரிக்கை வெற்றியளிக்காதவிடத்திலேயே தனிநாட்டுக் கோரிக்கை முக்கியதுவம் பெறுகின்றது. பிலிப்பைன்ஸ், இந்தியா, சோவியத் ஒன்றியம் ஆகிய நாடுகளை உதாரணமாகக் கொள்ளலாம்.

Read more: இனம் என்றால் என்ன

மனித உரிமைகள் என்றால் என்ன