ஆசிரியர் வேறு பெயர்கள்

asiriyar veru peyargal in tamil

“மாதா பிதா குரு தெய்வம்” என்ற ஔவையாரின் வாக்கிற்கு இணங்க தாய் தந்தையின் பின் தெய்வமாக போற்றபபடுபவர் ஆசிரியர்கள் ஆவார். சைவ சமயத்தின் கருத்துப்படி அஞ்ஞானம் போக்கி மெஞ்ஞானம் அளிக்க வருபவரே குரு ஆவார்.

அவ்வகையில் ஆசிரியர் என்பது ஐயங்களை தீர்ப்பவர் என்று பொருள்படும். இவர் பாடசாலையிலோ பல்கலைக்கழகத்திலோ கல்வி கற்பிப்பவர் ஆவார். இதனாலேயே அவர் கல்வியளிப்பவர் தனிபயிற்சியாளர் என அழைக்கப்படுகின்றார்.

ஆசிரியர் என்பவர் கல்வியை மாணாவர்களுக்கு கொடுப்பவர் ஆவார். சமூகத்தில் ஆசிரியர் என்பவர் முக்கிய பங்கினை வகிக்கின்றார். இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் என்பதற்கு இணங்க சமூகத்தில் உள்ளவர்களை உயர் நிலைக்கு கொண்டு செல்லுபவர் ஆசிரியர் ஆவார்.

அன்றில் இருந்து இன்றுவரை ஆசிரியர்கள் சமூகத்தில் அழியாச்சிறப்பினை கொண்டு காணப்படுகின்றனர். அவ்வாறான ஆசிரியர்களுக்கு எடுத்துக் காட்டாக துரோனர், விஸ்வாமித்திரர் போன்றோரைக் கொள்ளலாம். இவ்வாறு சிறப்புடைய ஆசிரியருக்கு வேறு பல பெயர்கள் உண்டு.

ஆசிரியர் வேறு பெயர்கள்

  • ஆசான்
  • குரு
  • உபாத்தியன்
  • வாத்தியார்
  • ஞான உபதேசோன்
  • கல்வியாளர்
  • குரவர்

இவ்வாறான பல பெயர்கள் காணப்படுகின்றன.

You May Also Like :
ஆசிரியர் பணி கட்டுரை
மாணவர் ஒழுக்கம் கட்டுரை