அஸ்வகந்தா வின் பயன்கள்

Ashwagandha Benefits In Tamil

இந்த பதிவில் அஸ்வகந்தா வின் பயன்கள் (அமுக்கரா பொடி பயன்கள்) பற்றி பார்க்கலாம்.

அஸ்வகந்தா பொடியாகவும் மாத்திரையாகவும் கடைகளில் கிடைக்கின்றது.

மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வகை செடியின் பெயர் தான் அஸ்வகந்தா. இதன் இலையும் வேரும் இயற்கை மருத்துவத்தில் அதிகமாகவே பயன்படுகிறது.

அஸ்வம் என்றால் வடமொழியில் குதிரை என்று அர்த்தம் கந்தம் என்றால் பலம் என்று அர்த்தம். குதிரை போன்ற பலத்தை கொடுப்பதால் இதற்கு இந்த மாதிரியான பெயர் வந்ததாகவும் அது மட்டுமில்லாமல் இதன் இலையை நுகர்ந்து பார்த்தால் குதிரையின் வாசம் வருவதாலும் அஸ்வகந்தா என்று பெயர் வந்ததாக கூறப்படுகின்றது.

இதை தமிழில் அமுக்கிரா என்று அழைப்பார்கள்.

இந்த மூலிகையை சிறிது தினமும் சாப்பிட்டு வந்தால் நம் உடல் நலத்திற்கும் மன நலத்திற்கும் சிறந்த ஆரோக்கியத்தை கொடுக்கும்.

அஸ்வகந்தா வின் பயன்கள்

அஸ்வகந்தா லேகியம் பயன்கள்

  • உடல் பலவீனத்தை போக்கும்.
  • இரத்தத்தை சுத்திகரிக்கின்றது.
  • இளமையை பாதுகாக்கும்.
  • வாதநோய் தீரும்.
  • நரம்பு தளர்ச்சி நீங்கும்.
  • கைகால் நடுக்கம் நீங்கும்.
  • மனச்சோர்வு நீங்கும்.
  • தூக்கமின்மை சீராகும்.
  • இதய துடிப்பை சீராக பேணுகிறது.
  • உடலுக்கும் மூளைக்கும் அதிக புத்துணர்ச்சி கொடுக்கிறது.
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • மாதவிடாய் கோளாறுகளை சீராக்கும்.
  • ஆண்மை குறைபாடுகளை சரி செய்யும்.
  • புண்களை விரைவாக ஆற செய்யும்.
  • சளி தொல்லையை நீக்கும்.

அஸ்வகந்தா பொடி பயன்கள்

மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு

நமக்கு ஏற்படும் பதற்றத்தாலும் மன அழுத்தத்தாலும் மனச்சோர்வு ஏற்படுவது பொதுவான ஒன்று தான்.

இந்த அஸ்வகந்தாவில் மன அழுத்தத்தை குறைக்கக்கூடிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது மன அழுத்தத்தை நீக்கி நிம்மதியான உறக்கத்தை கொடுக்கும்.

தூக்கமின்மை

சரியான தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த அஸ்வகந்தா மூலிகை சிறந்த மருந்தாகும்.

இதற்கு அஸ்வகந்தாவை பாலில் கலந்து குடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.

மூலிகை வயகரா

இதற்கு மூலிகை வயகரா என்ற வேறு பெயரும் உண்டு. காரணம் அஸ்வகந்தா மிகச் சிறந்த பாலுணர்வு ஊட்டியாகவும் செயல்படுகின்றது.

அதுமட்டுமின்றி ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைக் குறைவு பிரச்சனைக்கு அஸ்வகந்தா சிறந்த தீர்வாகும். ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையையும் அதன் தரத்தையும் அதிகரிக்கும்.

நீண்ட நேர தாம்பத்திய உறவுக்கு அஸ்வகந்தா உதவுகிறது.

தோல்சுருக்கம்

நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் சிறிதளவு அஸ்வகந்தா கலந்து குடித்து வந்தால் முகத்தில் உண்டாகும் தோல் சுருக்கங்கள் மாறி நீண்ட காலத்திற்கு இளமையை பேண முடியும்.

மூட்டுவலி

மூட்டுவலி உள்ளவர்கள் பாலில் சிறிதளவு அஸ்வகந்தா கலந்து குடித்து வந்தால் மூட்டுவலி தீரும்.

நரம்புகள் வலுவடையும்

தினமும் காலை மற்றும் மாலை 1/4 தேக்கரண்டி அஸ்வகந்தாவுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன் நாடி நரம்புகளும் வலுவடையும்.

இரத்த கொதிப்பை குறைப்பதில் இந்த மூலிகை சிறப்பாக செயல்படும்.

ஞாபக சக்தி அதிகரிக்கும்

தினமும் சிறிதளவு அஸ்வகந்தா சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் மூளைக்கும் புத்துணர்ச்சி உண்டாவதுடன் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.

நோய் எதிர்ப்பு சக்திஅதிகரிக்கும்.

சிறிதளவு அஸ்வகந்தா தினமும் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மாதவிடாய்

பெண்களுக்கு ஏற்படும் வெண்கழிவு பிரச்சனை மற்றும் மாதவிடாய் கோளாறுகளுக்கு அஸ்வகந்தா சிறந்த மருந்தாகும்.

சர்க்கரை நோய் மற்றும் கொலஸ்ட்ரால்

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

அதுமட்டுமில்லாமல் கொலஸ்ட்ராலின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும் சக்தி இந்த அஸ்வகந்தா மூலிகைக்கு உண்டு.

அஸ்வகந்தா தீமைகள் மற்றும் பக்க விளைவுகள்

அனைத்து மூலிகையில் நன்மைகளும் இருக்கும் தீமைகளும் இருக்கும் மூலிகைகளை சரியான முறையில் சரியான அளவில் சாப்பிடும் பொழுது தான் அதன் நன்மைகளை பெற முடியும்.

பலரும் அஸ்வகந்தா பொடியை அதிகமாக சாப்பிட்டால் அதிக நன்மைகளை பெறலாம் என்ற தவறான எண்ணத்தில் இருக்கிறார்கள்.

இந்த அஸ்வகந்தா பொடிக்கு உடலில் இரத்தம் உறைவதை தடுக்கும் சக்தி உண்டு. அளவுக்கு அதிகமாக அஸ்வகந்தாவை எடுத்துக்கொண்டால் உடலில் இரத்த கசிவை உண்டாக்கும்.

நீங்கள் அறுவை சிகிக்சை செய்ய உள்ளவராக இருந்தாலோ அல்லது அண்மையில் அறுவை சிகிக்சை செய்து கொண்டவராயின் அஸ்வகந்தாசாப்பிடுவதை தவிருங்கள்.

பல ஆண்கள் அஸ்வகந்தா எடுத்துக்கொள்வது நீண்ட நேர தாம்பத்திய உறவுக்காக தான் ஆனால் அதிகமான அளவு அஸ்வகந்தா எடுத்துக்கொண்டால் பயனளிக்காது.

அஸ்வகந்தா உடல் சூட்டை அதிகரிக்கும் தன்மை கொண்டது. உடல் சூடு உள்ளவர்கள் அஸ்வகந்தா பொடி எடுத்துக்கொண்ட பின் அதிக நீர், மோர் குடித்து உடல் சூட்டை கவனிக்க வேண்டும்.

அதிகமான அஸ்வகந்தா பொடியை உண்டால் கல்லீரலின் செயல்பாட்டை பாதிக்கும்.

கர்ப்பமாக உள்ள பெண்கள் அஸ்வகந்தா பொடியை சாப்பிட கூடாது. ஏனெனில் இது கரு கலப்பை உண்டாக்க வாய்ப்பு அதிகம்.

சிறு குழந்தைகள் அஸ்வகந்தா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு சில பக்க விளைவுகளை உண்டாக்கும்.

அதிகமான அளவு அஸ்வகந்தா சாப்பிட்டால் சிலருக்கு அலர்ச்சி, அரிப்பு, வீக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்கள் அதிகமான அளவு அஸ்வகந்தா சாப்பிட்டால் இன்னும் இரத்த அழுத்தம் குறைந்து மயக்க நிலைக்கு செல்லும் வாய்ப்பு உண்டு.

சர்க்கரை நோய்க்கு மருந்து உண்பவர்கள் அஸ்வகந்தா சாப்பிட்டால் இரத்தத்தில் இன்னும் சர்க்கரையின் அளவு குறைந்து வேறு பிரச்சனைகள் உண்டாகும்.

தூக்க மாத்திரை சாப்பிடும் பொழுது அஸ்வகந்தா பொடியும் சாப்பிடக் கூடாது.

இந்த அஸ்வகந்தா பொடியாக இருந்தாலும் சரி மாத்திரையாக இருந்தாலும் சரி அளவோடு சாப்பிட்டால் சிறந்த பலனை பெறலாம்.

அஸ்வகந்தா பொடி செய்முறை

அஸ்வகந்தாவின் கிழங்கு போன்ற வேரினில் தான் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கின்றன. எனவே அஸ்வகந்தா பொடி செய்வதற்கு அஸ்வகந்தா வேர் தான் பயன்படுத்த வேண்டும்.

(தண்ணீரில் ஊற வைக்க கூடாது அப்படி வைத்தால் அதன் ஊட்ட சத்துக்கள் கிடைக்காது) அஸ்வகந்தாவை மூன்று முறை தண்ணீரில் கழுவிய பின்னர் வெயிலில் காய வைக்க வேண்டும்.

காய வைத்த பின்னர் தூய பசும் பாலில் காய வைத்த அஸ்வகந்தாவை சிறு சிறு துண்டுகளாக போட வேண்டும்.

பின்னர் அந்த பாலை நன்றாக சூடாக்கி பின்னர் ஆற வைத்து வெயிலில் காய வைத்து பின்னர் பொடி ஆக்கி எடுத்துக்கொண்டால் தான் அஸ்வகந்தா வின் பயன்கள் முழுமையாக கிடைக்கும்.

அஸ்வகந்தா சாப்பிடும் முறை

பொதுவா அஸ்வகந்தாவை சாப்பிடும் போது சரியான முறையில் எடுத்துக்கொண்டால் மட்டுமே அதன் பலனை பெற முடியும்.

பொதுவாக அஸ்வகந்தாவை வெண்ணீர், பால், நெய், தேன் போன்ற ஏதாவது ஒன்றில் கலந்து சாப்பிடுவதால் முழு பலன் கிடைக்க கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.

அஸ்வகந்தா செடி எப்படி இருக்கும்

இதன் வகைகள் இரண்டுஉள்ளன.

  1. நாட்டு அமுக்கிரா
  2. சீமை அமுக்கிரா

நாட்டு அமுக்கிரா என்பது கொஞ்சம் தடிமனாக காணப்படும்.

சீமை அமுக்கிரா குச்சி வடிவில் காணப்படும்.

அஸ்வகந்தா வேறு பெயர்கள்

அஸ்வகந்தி, அஸ்வகந்தகம், அமுக்குரவி, அமுக்கிரா, இந்திய குணசிங்கி, மூலிகை வயகரா

அஸ்வகந்தா எங்கு கிடைக்கும்

பெரும்பாலான அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் அஸ்வகந்தா வேராகவும் பொடியாகவும் கிடைக்கும்.

அஸ்வகந்தா பொடியில் கலப்படம் இருக்கும் என்று நீங்கள் கருதினால் அஸ்வகந்தா வேரினை வாங்கி நீங்களே பொடியாக்கி கொள்ளுங்கள்.

You May Also Like:

கருஞ்சீரகம் பயன்கள் என்ன

கடுக்காய் பொடியின் பயன்கள்