கருஞ்சீரகம் பயன்கள் என்ன

Karunjeeragam Uses In Tamil

இந்த பதிவில் “கருஞ்சீரகம் பயன்கள் என்ன” பார்க்கலாம்.

  • கருஞ்சீரகம் பயன்கள் என்ன
  • கருஞ்சீரகம் உண்ணும் முறை
  • Karunjeeragam Uses In Tamil

கருஞ்சீரகம் பயன்கள்

கருஞ்சீரகத்தை நம் உணவில் சேர்த்து வந்தால் அடிக்கடி நோய்வாய்ப்படும் நிலை வராது இதற்கு முக்கிய காரணம் இதிலுள்ள தைமோகுவினோன் என்ற வேதிப்பொருள் இந்த வேதிப்பொருள் கருஞ்சீரகதில் மட்டுமே நிறைந்திருக்கிறது.

உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், கொழுப்பு அமிலங்கள், விட்டமின்கள் கால்சியம், இரும்புசத்து மற்றும் பொட்டாசியம் போன்ற ஏராளமான சத்துக்களையும் இது கொண்டுள்ளது.

உடலுக்கு சுறு சுறுப்பை தரக்கூடியவை கருஞ்சீரகம் உடலுக்கு தேவையான கல்சியம் மற்றும் இரும்பு சத்துக்களை இந்த கருஞ்சீரகம் கொண்டிருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாகும்.

பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை கருஞ்சீரகம் சீராக்க வல்லது.

மலசிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் உணவில் கருஞ்சீரகம் பயன்படுத்தி வந்தால் விரைவில் குணமடையலாம். வயிற்றில் உண்டாகும் சமிபாட்டு கோளாறுகளையும் சரி செய்யும் தன்மை கொண்டது.

கருஞ்சீரகம் வயிற்றுள் உள்ள வாயுத்தொல்லையை நீக்கும் தன்மை கொண்டது. மற்றும் இரைப்பை, ஈரலில் ஏற்படும் கிருமி தொற்றுக்களையும் போக்கும் தன்மை கொண்டது.

அடிக்கடி கருஞ்சீரகம் உணவில் சேர்க்கப்பட்டு வரும் போது இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது மற்றும் நுரையீரலில் உள்ள கழிவுகளை நீக்கவும் உதவுகிறது.

புற்றுநோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கருஞ்சீரகத்துக்கு உண்டு.

கருஞ்சீரகம் பொடி பயன்கள்

வயிற்றில் அல்சர் உள்ளவர்கள் கருஞ்சீரக பொடியை தண்ணீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் புண்கள் ஆறி விடும்.

குடல் புழுக்கள் உள்ளவர்கள் கருஞ்சீரக பொடியை வெண்ணீரில் கலந்து தினமும் குடித்து வந்தால் குடல் புழுக்கள் நீங்கி விடும்.

கருஞ்சீரக பொடி கஸ்தூரி மஞ்சள் பொடி மற்றும் வேப்பம் இல்லை பொடி மூன்றையும் கலந்து பயன்படுவதன் மூலம் தோலில் ஏற்படும் நோய்களை (தேமல்,சொறி,சிரங்கு) குணமாக்கலாம்.

கருஞ்சீரகம் உண்ணும் முறை

சிறுநீரகத்தில் கற்கள் உள்ளவர்கள் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரகதை வெண்ணீர் மற்றும் தேன் கலந்து காலை, மாலை குடித்து வரகற்கள் கரைந்து சிறுநீருடன் வெளியேறும்.

நாள்பட்ட இருமல் அல்லது சளி தொந்தரவு இருந்தால் ஒரு தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் அரை தேக்கரண்டி பூண்டும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை கரைக்கும் சக்தி கொண்டது.

50 கிராம் கருஞ்சீரகம், 250 கிராம் வெந்தயம், 100 கிராம் ஓமம் இந்த மூன்று பொடிகளையும் ஒன்றாக கலந்து எடுத்த பின் தினமும் ஒரு தேக்கரண்டி வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவில் உணவு உட்கொண்ட சிறிது நேரத்துக்கு பின்குடித்து வர வேண்டும்.

இதை குடித்த பின் எந்த உணவும் உண்ணக்கூடாது. தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்கழிவுகளும் அகன்று விடும். மற்றும் இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை பெற முடியும்.

கருஞ்சீரகம் எண்ணெய் பயன்கள்

கூந்தல் வளர்ச்சிக்கு கருஞ்சீரக எண்ணெய் உதவியாக இருக்கும்.

தலைவலியால் சிரமப்படுபவர்கள் கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தி வந்தால் இதிலிருந்து விடுபடலாம்.

முடி வளர்ச்சி, பொடுகு, கிருமி தொற்று, பலவீனமான முடி மற்றும் நரை முடி போன்ற பல பிரச்சனைகளை சரி செய்யும் ஆற்றல் கருஞ்சீரகம் எண்ணெக்கு உண்டு.

வழுக்கை தலையிலும் முடியை வளர வைக்கும் ஆற்றல் கருஞ்சீரக எண்ணெக்கு உண்டு.

கருஞ்சீரகம் சர்க்கரை நோய்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கருஞ்சீரகம் சிறந்த மருந்தாகும் உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரோலின் அளவை அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரோலை குறைத்து சக்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க கருஞ்சீரகம் உதவுகின்றது.

கருஞ்சீரகம் ஆண்மை பயன்கள்

கருஞ்சீரக எண்ணெயை ஆணுறுப்பில் தடவி வந்தால் இரத்த ஓட்டம் அதிகரித்து நீண்ட நேர விறைப்பு தன்மைக்கு உதவியாக இருக்கும்.

கருஞ்சீரகம் தீமைகள்

கருஞ்சீரகம் யார் யார் சாப்பிட கூடாது

திருமணமான பெண்கள் அதாவது குழந்தைக்காக திட்டமிட்டுள்ளவர்கள் கருஞ்சீரகம் சாப்பிடக்கூடாது ஏனென்றால் இது கரு உண்டாவதை தடுக்கும் என்பதால் இதை தவிர்ப்பது நல்லது.

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் கருஞ்சீரகம் சாப்பிடக்கூடாது. அதிக இரத்த அழுத்தம் இருந்தால் அதை கட்டுக்குள் கொண்டு வரும் தன்மை கருஞ்சீரகத்திற்கு இருந்தாலும் குறைந்த இரத்த அழுத்தம் இருந்தால் அது இன்னும் குறைந்து ஆபத்தாக மாறிவிடலாம்.

சக்கரையின் அளவு குறைவாக இருப்பவர்களும் தவிர்ப்பது நல்லது ஏனென்றால் இது சக்கரையின் அளவை மேலும் குறைத்து ஆபத்தாக மாறி விடலாம்.

பொதுவாக கேட்கப்படும் கேள்விகள்

கருஞ்சீரகம் கர்ப்பிணி பெண்கள் சாப்பிடலாமா

கருத் தரித்திருக்கும் கர்பிணி பெண்கள் கருஞ்சீரகம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் ஏனென்றால் இது கருவை கலைக்கும் தன்மை கொண்டது.

கருஞ்சீரகம் தினமும் சாப்பிடலாமா

கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற விரும்புவோர், இரத்தத்தில் குறைந்த சர்க்கரை அளவு உள்ளவர்கள், குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களை தவிர்த்து மற்றவர்கள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் கருஞ்சீரகம் தினமும் சாப்பிடலாம்.

மேலும் படியுங்கள்..

கொலஸ்ட்ராலை குறைக்கும் உணவுகள்

இயற்கையாக முடி கருமையாக