இயற்பியல் என்றால் என்ன

iyarpiyal enral enna

இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இதற்குப் பின்னால் இயற்பியின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாக உள்ளது. அறிவியலின் ஒரு பகுதி இயற்பியல் ஆகும்.

இவ்வுலகில் இயற்பியல் இல்லாமல் எதுவும் இல்லை என்றால் அது மிகையல்ல. இயற்பியலை புரிந்து கொள்வது என்பது இப்பிரபஞ்சம் எவ்வாறு இயங்குகின்றது என்பதை புரிந்து கொள்வதற்கு சமம்.

ஆனாலும் இயற்பியலை புரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல. அது மிகவும் கடினமான ஒன்றாகும். காரணம் இதற்கு அதிகளவிலான சூத்திரங்கள் மற்றும் தேற்றங்கள் இருப்பதே ஆகும்.

இயற்பியலின் அடிப்படையைக் கற்றுக் கொண்டால் இயற்பியல் இலகுவானதும், சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். நமது அன்றாட வாழ்வில் இயற்பியலின் பங்களிப்பு அதிகமாகவே உள்ளது.

ஆனாலும் அது பலருக்கு தெரிவதில்லை. காலை எழுந்தது முதல் தூங்கும் வரை இயற்பியல் உண்டு.

உதாரணம் பொருளைப் பார்க்கும்போது ஒளியானது அந்தப் பொருளின் மீது பட்டு எதிரொலித்து கண்களை வந்தடைகின்றது. இதுவே ஒளி எதிரொளிப்பு என அழைக்கப்படுகின்றது.

இயற்பியல் என்றால் என்ன

இயற்பியல் என்பது மிகச்சிறிய அணுத்துகள்கள் முதல் முழு பிரபஞ்சம் வரை உள்ள பகுதியை இருப்பில் உள்ள அனைத்தையும் உள்ளடக்கியது.

மேலும் இயற்பியல் என்பது நாமிருக்கும் உலகில் இயற்கையாக அமைந்துள்ள பொருட்கள், ஆற்றல்கள் இவற்றின் இயல்புகள் குறித்த விளக்கமான விவரங்கள் ஆகும்.

இயற்பியல் கல்வியின் முக்கியத்துவம்

மிகப் பழமையான கல்வித் துறைகளில் ஒன்று இயற்பியல் ஆகும். 17 ஆம் நூற்றாண்டு அறிவியல் புரட்சிக்குப் பின்னர் இயற்கை அறிவியல் தனித்தன்மையுடன் தங்களுக்கே உரித்தான ஆய்வுநெறிகளுடன் வளர்ந்துள்ளது.

இயற்பியல் கல்வி மனிதகுலத்தின் எதிர்கால முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இன்றைய காலப்பகுதியில் அனைத்து நாடுகளிலும் இயற்பியல் கல்வி மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது.

மேலும் இயற்பியல் ஒரு அற்புதமான அறிவுசார் கற்கையாகும். இது இளைஞர்களை ஊக்குவிக்கிறது மற்றும் இயற்கையைப் பற்றிய நமது அறிவின் எல்லைகளை விரிவுபடுத்துகிறது.

இயற்பியல் எதிர்கால தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு தேவையான அடிப்படை அறிவை உருவாக்குகிறது. இது உலகின் பொருளாதார இயந்திரங்களைத் தொடர்ந்து இயக்க வைக்கின்றது.

இயற்பியல் தொழில்நுட்ப உள்கட்டமைப்புக்கு பங்களிக்கிறது. அறிவியல் முன்னேற்றங்கள் மற்றும் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளத் தேவையான பயிற்சி பெற்ற பணியாளர்களை ஊக்குவிக்கின்றது.

பிற துறைகளான பூமி, விவசாயம், வேதியியல், உயிரியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல், மேலும் வானியல் மற்றும் அண்டவியல் போன்றவற்றின் புரிதலை விரிவுபடுத்துகிறது மற்றும் மேம்படுத்துகிறது.

நவீன இயற்பியல்

நவீன இயற்பியல் என்பது அறிவியல் மற்றும் பொறியியல் கருவிகளின் உதவியுடன் பருப்பொருள்களுடனான தொடர்புகளின் அடிப்படைச் செயல்முறைகளைப் புரிந்து கொள்வதற்கான ஒரு முயற்சி ஆகும்.

நவீன இயற்பியலானது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இதற்குப் பின்னரான காலப்பகுதியையும் குறிப்பிடுகின்றது.

இன்றைய விஞ்ஞானத் தத்துவமானது குவாண்டம் சார்பியலின் தத்துவ அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டது என்றால் அதுமிகையல்ல.

மரபு இயற்பியலின் அடிப்படையில் பேரண்டமானது ஓர் இயந்திரமாக உருவகம் செய்யப்பட்டது. இத்தகைய இயந்திரக் கண்ணோட்டமானது பேரண்டத்தினைப் பகுதிகளாகப் பிரிக்கின்றது.

நவீன இயற்பியலானது மரபு இயற்பியலின் பல கண்ணோட்டங்களை மாற்றியமைத்துப் புது வடிவங்களை வெளிப்படுத்தியுள்ளன.

இதன்படி பிரபஞ்சம் என்பது உள்ளார்ந்து இணைக்கப்பட்டதோர் இயக்கபூர்வமான முழுமை என்கின்ற உருவகமாகக் காணப்படுகின்றது.

Read more: தனிமம் என்றால் என்ன

கருந்துளை என்றால் என்ன