வில்வம் மருத்துவ பயன்கள்

vilvam benefits in tamil

வில்வ மரம் புனித மரமாக பார்க்கப்படுகின்றது. வில்வ மரமானது இலையுதிர் கால மரத்தின் வகையைச் சார்ந்தது. இது ஆசிய நாடுகளில் காணப்படும் ஒரு தாவரமாகும். குறிப்பாக இந்தியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளில் அதிகம் வளரும். இம்மரம் 15 அடி முதல் 25 அடி வரை வளரும். இம்மரத்தின் இலைகளில் முள் இருக்கும்.

இதை அரபு மொழியில் பிஹி, சபர்ஜல் என்று அழைப்பார்கள். யுனானி மருத்துவர்கள் இதை பேல்கிரி என்றும், நாட்டு மருத்துவர்கள் வில்வப் பழம் என்றும் அழைப்பார்கள்.

வில்வம் பழத்தின் தோல் பகுதி வழவழப்பாகவும், கெட்டியாகவும் இருக்கும். எனினும் இனிப்புச் சுவையுடையதாகும்.

வில்வமானது கூவிளம், பில்வம், பூவிதாத, சலய, மாங்கல்ய, சரபீதலம், அலுவீகம், அல்லூரம், ஆலூகம், சட்டாம், சிறிய பலகியம், திரிபத்ர, சாண்டல்லியம், கற்கடக நிலை மல்லிகம், குசாபி, வில்வை போன்ற பல பெயர்களால் அழைக்கப்படுவதுண்டு.

வில்வம் மருத்துவ பயன்கள்

#1. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.

#2. வயிற்று வலியைக் குணப்படுத்தும்.

உண்ணும் உணவுப் பழக்கம், வயிற்றில் உள்ள தொற்று கிருமிகள் போன்றவற்றால் வயிறுவலி ஏற்படுகின்றது. இதைப் போக்க வில்வத் தளிரை வதக்கிச் சூடாக்கி குடித்து வந்தால் வயிற்றில் உள்ள நுண்ணுயிர்கள் கொல்லப்பட்டு வயிற்று வலி நீங்கும்.

மேலும் இது வயிறு தொடர்பான பல கோளாறுகளையும் சரி செய்ய உதவும். வில்வ இலை, வில்வம் பழம் இரண்டும் குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்களால் ஏற்படும் பேதிக்கு அருமருந்தாகும்.

#3. முடி உதிர்வைக் கட்டுப்படுத்த வில்வம் மிக சிறந்த மருந்தாகச் செயல்படும்.

இதற்க்கு வில்வ காயை எடுத்து அரைத்து அதனுடன் பால் கலந்து தலைக்குத் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடி உதிர்தல் நீங்கும்.

#4. முகத்திலுள்ள கரும்புள்ளியை நீக்கும்.

வில்வ காயை எடுத்து அதன் சதை பகுதியை மட்டும் எடுத்து கொண்டு அதில் பால் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும். முகம் பொலிவு பெறும்.

#5. மூக்கடைப்பு, சளி, இருமல், சைனஸ் போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்.

#6. கண்பார்வை தெளிவுபெற உதவும்.

வில்வம் இலையை அரைத்து பொடி செய்து காலை வேளையில் பயன்படுத்திவர கண்பார்வை சிறப்பாக அமையும்.

#7. காது நோய்களைக் குணப்படுத்தும்.

வில்வ இலையை நல்லெண்ணெயில் காய்ச்சி, காது நோய்களுக்கு காதில் விடும் பழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது.

#8. மன அழுத்தத்தைப் போக்க தலைசிறந்த மருந்து.

வில்வ இலையைக் கொதிக்கவைத்து கஷாயமாக்கி சாப்பிட்டால், மனஅழுத்தம் படிப்படியாகக் குறையும்.

#9. புற்று நோயை குணப்படுத்த கூடியது.

பழமையான வில்வ மரத்தின் கொழுந்தை பறித்து சாப்பிட்டு வந்தால் புற்று நோய் குணமாகும்.

#10. அல்சரை குணப்படுத்தும்.

50 கிராம் மகா வில்வம் இலை தான்றிக்காய் பொடி, கடுக்காய் பொடி, ஓமம், நெல்லிக்காய் பொடி, மாங்காய் விதை, மஞ்சள், வெந்தயம், சீரகம் அனைத்தையும் அரைத்து 20 கிராம் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும்.

இதனை மூன்று வேளைகளிலும் உணவின் பின் தண்ணீரில் கலந்து குடித்தால் அல்சர் குணமாகும்.

#11. உடலைப் பராமரிக்க உதவுவதுடன் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றது.

#12. மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும்.

வில்வ வேர் மற்றும் கீழ்நெல்லியின் வேர், நெல்லி முள் வேர் சேர்த்து வதக்கி 20g அளவுக்கு எடுத்து அதனை ½ லீட்டர் நீரில் சேர்த்து பாதியளவு ஆகும் வரை சூடாக்கி 1 வாரம் வரை 3 வேளைகளுயும் குடித்து வந்தால் மஞ்சள் காமாலை சரியாகும்.

You May Also Like:
மாதுளை இலையின் பயன்கள்
தர்ப்பை புல் பயன்கள்