மாதுளை இலையின் பயன்கள்

Mathulai Ilai Payangal

மாதுளை மிகவும் பயன்மிக்க தாவரமாகும். மாதுளை குறுஞ்செடி அல்லது மரமாகக் காணப்படும்.

மாதுளையில் இலை, பூ, பிஞ்சு, பழம், வேர், பட்டை ஆகிய அனைத்து பாகங்களும் மருத்துவத்தில் பயன்படுபவை. அதிலும் மாதுளை இலை மகத்தான சக்தியை வழங்கக்கூடியது.

மாதுளை இலையின் பயன்கள்

#1. வாய் புண்ணை குணமாக்கும்.

மாதுளை இலைகளில் இருக்கும் நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் அதில் உள்ள மருத்துவ குணம் வாய் பகுதியில் படர்ந்திருக்கும் பாக்டீரியாக்களை அப்புறப்படுத்த உதவுகின்றன.

#2. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

மாதுளையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது என்பதால் நோய் எதிர்ப்பு தொடர்பான கோளாறுகளைச் சீர்செய்கிறது.

#3. இருமல் சளி தொண்டையிலுள்ள நோய்த் தொற்று முதலானவற்றைக் குணமாக்கும்.

இதற்கு மாதுளை இலைகளை கொண்டு காபி தயாரித்து பருகலாம். ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க விடவும். இலைகள் நன்கு வெந்ததும் அதனை வடிகட்டி தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் இருமல் சளிப் பிரச்சினை தீரும்.

#4. மாதுளை இலைகள், தூக்கமின்மைக்கும் நிவாரணம் தரக்கூடியவை.

தூக்கமின்மைப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் ஒரு கைப்பிடி அளவு மாதுளை இலைகளை விழுதாக அரைத்து 200ml தண்ணீரில் கலந்து கொதிக்க விட்டு அந்நீர் 50ml குறையும் வரை கொதிக்கவைத்து, பின் இதனை வடிகட்டி இரவில் தூங்குவதற்கு முன்பு பருகி வந்தால் ஆழ்ந்த தூக்கத்துக்கு வழி வகுக்கும்.

#5. பருக்களை நீக்க உதவும்.

பருக்கள் மீது மாதுளை இலையை சாறாக்கிப்பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

#6. தொப்பையைக் குறைக்க உதவுகிறது.

கட்டுடல் அழகை பேண மாதுளை இலை சாற்றைப் பருகி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

#7. செரிமானப் பிரச்சினையைச் சீர்செய்கிறது.

இதற்கு மாதுளை இலைகளை மருந்தாக உட்கொள்ளலாம். அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் செரிமானத்தை தூண்ட உதவுகிறது. இதன் மூலம் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும்.

அத்துடன் அஜீரணம், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளும் நீங்கும். இந்த பிரச்சினைகளுக்கு மாதுளை இலைகளை தேநீராக தயாரித்து பருகலாம்.

#8. தோல் அழற்சியைக் குணமாக்கும்.

இதனைக் குணப்படுத்த மாதுளை இலைகளை விழுதாக அரைத்து பாதிப்புக்குள்ளான இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

#9. காது வலியைப் போக்கும்.

மாதுளை இலைகளை கடுகுடன் சேர்த்து அரைத்து அதன் சாற்றை காதில் விட காது வலி நீங்கும்.

#10. கண் நோயைக் குணமாகும்.

மாதுளை இலைகளை மையாக அரைத்து கண்களை மூடி இமை மீது தடவினால் கண் நோய் குணமாகும்.

You May Also Like:
தர்பூசணி பழம் பயன்கள்
அன்னாசி பழம் நன்மைகள்