ஆடாதோடை பயன்கள்

adathodai leaf benefits in tamil

ஆடாதோடை ஒரு புதர்ச் செடியாகும். இதுவே வேலிப் பயிராகவும் வளர்கின்றது. வெள்ளை நிறப் பூக்களைக் கொண்டது. இது கைப்பு சுவை கொண்டது. மழை காலங்களில் அதிகம் வளரக்கூடியது. 4 தொடக்கம் 10 அடி வரை வளரும். தென்னிந்தியாவில் அதிகம் காணப்படுகின்றது. தண்ணீர் அதிகம் தேவையில்லை.

இதன் இலை கசப்பு தன்மை கொண்டதால் இதனை ஆடு உண்ணாது. இதனால் இது ஆடுதொடா இலை என்பதனால் ஆடுதொடா இலை என்பது மருவி ஆடாதோடை என ஆயிற்று.

ஆடாதோடை பயன்கள்

#1. ஆடாதோடை நன்கு குரல் வளத்தைக் கொடுக்கக்கூடியது. குரல் கம்மல் ஏற்பட்டால் ஆடாதொடை கசாயம் குடித்தால் சரியாகும்.

#2. இருமல் சளி போன்றவற்றிற்கு சித்த மருந்தாக பயன்படும்.

ஆடாதோடை இலைகளில் உள்ள அல்கலாய்டு என்ற வேதிப்பொருள் இருப்பதால் நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகின்றது.

#3. புற்றுநோய் வராமல் தடுக்கும்.

புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுத்து புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க உதவுகின்றது. இரத்த அழுத்தத்தை குறைக்கும்.

#4. நரம்பு சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகின்றது.

#5. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சீதக்கழிச்சல் ஏற்படும் போது ஆடாதோடை பருகலாம்.

#6. ஆஸ்துமாவை குணமாக்கும்.

ஆடாதொடை இலையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரில் தேன் கலந்து பருகி வர ஆஸ்துமா சளி இருமல் காய்ச்சல் போன்றவை குணமாகும்.

#7. மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும்.

ஆடாதோடை இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் விரைவில் மஞ்சள் காமாலையில் இருந்து குணமாகலாம்.

#8. உயர் இரத்த அழுத்தத்தை சரிசெய்யும்.

ஆடாதோடை இலையை நிழலில் உலர்த்திப் பொடியாக்கிப் பின் மெல்லிய துணியில் சலித்து எடுத்துக்கொண்டு பாத்திரத்தில் போட்டு மூன்று தொடக்கம் ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம். உணவுக்குப் பின்னர் இந்தப் பொடியை தினமும் மூன்று வேளை ஒரு டீஸ்பூன் அளவு மிதமான வெந்நீரில் கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

#9. மூக்கில் நீர் வடிதல், தலை பாரம் போன்ற கபம் சார்ந்த பிரச்சினை உடனடியாக சரிசெய்ய ஆடாதோடை இலையை குடிநீராகப் பயன்படுத்தலாம்.

You May Also Like:
பூண்டு மருத்துவ பயன்கள்
அன்னாசி பழம் நன்மைகள்