கன்னி ராசி குணங்கள்

kanni rasi gunam

ராசி சக்கரத்தில் ஆறாவது இடத்தில் அமைந்திருக்கின்ற கன்னி ராசியில் பிறந்தவர்கள் புதன் கிரகத்தின் உச்சம் ஆட்சி என்பவற்றை கொண்டவர்களாக இருப்பார்கள். இக்கட்டுரையில் அவர்களது பொதுவான குணங்கள் பற்றி நோக்குவோம்.

கன்னி ராசி குணங்கள்

இந்த இராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே புத்திசாதுரியம் உடையவர்களாக இருப்பார்கள். வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் துன்பங்களுக்கு புத்திசாலித்தனமாக தீர்வு காண்பார்கள்.

எப்பொழுதும் சாமர்த்தியமாகவும் சமயோசிதமாகவும் பேசக்கூடியவர்களாக இருப்பார்கள். மிகத்திறமையாகவும் தந்திரமாகவும் செயற்படுவதில் வல்லவர்கள்.

குடும்பங்களிலும் தொழில் நிலையங்களிலும் மற்றவர்களை சாமர்த்தியமாக பேசி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள். இதனால் இவர்கள் பல விடயங்களை இலகுவாக சாதித்து விடுவார்கள்.

மேலும் இவர்கள் மற்றையவர்களுடன் நன்றாக அனுசரித்து பழகக்கூடிவர்கள் அத்தோடு பேச்சுத்திறனால் காரியங்களை இலகுவாக சாதித்து விடக் கூடியவர்களாக விளங்குவர்.

இவர்களுடைய வாழ்க்கையினை எடுத்து கொண்டால் புத்திர பாக்கியம் இவர்களுக்கு அளவாகவே காணப்படும். குடும்பங்களில் பல்வேறான சிக்கல்கள் தோன்றினாலும் கூட அவற்றை தைரியமாக சமாளித்து தங்களது வாழ்வில் வெற்றி பெறக்கூடிய இயல்புடையவர்களாவர்.

சிக்கலாக அமைந்த வாழ்வை கூட சிறப்பாக மாற்றும் திறமை படைத்தவர்கள். காதல் என்றவகையில் அறிவார்ந்தவர்களையே இவர்கள் அதிகம் விரும்புவார்கள்.

இதே போல எந்த ஒரு விடயத்தையும் இலகுவாக புரிந்து கொள்ள கூடியவர்களாக இவர்கள் காணப்படுவர். இவர்களுக்கு புரியாத விடயங்கள் என்று எதுவும் இருக்காது. இதனால் தான் இவர்கள் அறிவை மேலும் மேலும் வளர்த்து கொள்வார்கள்.

அவ்வாறே கல்வி துறையில் இவர்கள் மிக உயர்ந்த நிலைகளை அடைந்து கொள்ள கூடிய திறமை உடையவர்களாக இருப்பார்கள். படிக்காவிட்டாலும் படித்த மேதைகள் போன்ற நுண்ணறிவு உடையவர்களாக இருப்பார்கள். இதனால் இவர்கள் அதிகம் வாசிப்பு பழக்கம் உடையவர்களாக விளங்குவார்கள்.

கணித அறிவில் வல்லவர்களான இவர்கள் புத்தகங்களை கூட எழுதி வெளியிடும் திறன் படைத்தவர்களாவர். ஒரு சிலர் சித்திரம் முதலான கலை துறைகளில் அதிகம் ஆர்வம் உடையவர்களாக விளங்குவார்கள்.

பொதுவாக இவர்கள் எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் பேசுவார்கள் இவர்களது திறமை கண்டு பிறர் பொறாமை கொள்ளும் அளவிற்கு இவர்கள் தமது வாழ்வில் சிறந்து விளங்குவார்கள்

பண விடயங்கள் தொடர்பாக எடுத்து கொண்டால் அதிகம் செலவிடுவதனை இவர்கள் விரும்புவார்கள். உழைப்பு எனும் வகையில் நன்றாக சம்பாதிக்கும் ஆற்றல் உடையவர்களாக இவர்கள் விளங்கினாலும் சில அதிக செலவினங்களால் சரிவுகளையும் எதிர்கொள்வார்கள்.

உதவி என்று பிறர் கேட்கையில் தாராளமாக உதவி செய்ய கூடியவர்களாவர். இவ்வாறான பல நல்லவகையான குணங்களை உடையவர்களாக கனிவுடனும் பெரிய கனவுடனும் வாழ கூடியவர்களாக இருப்பார்கள்.

You May Also Like :
ராம நவமி என்றால் என்ன
மூன்றாம் பிறை என்றால் என்ன