ரிஷப ராசி குணங்கள்

rishaba rasi gunangal in tamil

ரிஷப ராசிக்குரிய அதிபதியாக சுக்கிரன் விளங்குகின்றார். இந்த ராசியில் கார்த்திகை, ரோகினி, மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரங்கள் காணப்படுகின்றன. இந்த ராசியில் பிறந்தவர்களுடைய இயல்புகளை இந்த கட்டுரை வாயிலாக நோக்கலாம்.

ரிஷப ராசி குணங்கள்

இந்த ராசியின் உடைய உருவம் காளை ஆகும். இவர்கள் பிறரின் நலனுக்காக எந்த எதிர்பார்ப்புக்களும் இன்றி உதவும் குணம் படைத்தவர்களாக விளங்குவார்கள்.

இவர்கள் உலகில் அனைத்து விடயங்களையும் ஆண்டு அனுவபவிக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களாக இருப்பார்கள். கலை சம்பந்தப்பட்ட ஞானம் கைவரப்பெற்றவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் எப்பொழுதும் உழைப்பே முழு மூச்சு என்று எண்ணும் இயல்புடையவர்களாக இருப்பார்கள்.

மேலும் இவர்களிடம் அதிக புத்தி சாதுரியம் இருப்பதனால் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

இந்த இராசியில் சந்திரன் உச்சம் பெறுவதனால் மிகவும் அழகான தோற்றம் உடையவர்களாக விளங்குவார்கள். பல்வேறு வகையான ஆடை அணிகலன்களை அணிவதிலும் வாசனை திரவியங்களை எடுத்து கொள்வதிலும் ஆர்வம் உடையவர்களாக விளங்குவார்கள்.

ஆக்கபூர்வமாக சிந்திப்பதில் வல்லவர்களான இவர்கள் தேவையில்லாமல் எதையும் சிந்திக்கின்ற இயல்பும் இவர்களிடம் காணப்படும்.

குளிர்ச்சி சம்பந்தப்பட்ட நோய்கள் இவர்களை அதிகம் பாதிக்கும் சுவையான உணவுகளை வயிறு நிறைய உண்பதை இவர்கள் விரும்புவார்கள். அதிலும் திரவ உணவு வகைகளை அதிகம் விரும்பி உண்ணுவார்கள்.

இவர்கள் பொதுவாக பாசத்துக்கும் நட்புக்கும் அடிமையாகி வாழ்வில் பல சஞ்சலங்களை எதிர்கொள்வார்கள்.

பொதுவாகவே அன்புக்கு கட்டுப்பட கூடியவர்களான இவர்கள் போட்டி, சண்டை என்று வந்து விட்டால் மிக மோசமானவர்களாக மாறிவிடுவார்கள்.

இக்கட்டான சூழலில் மனதளவிலும் உடலளவிலும் சோர்ந்து போனாலும் இவர்களது கலையான முகம் மாறாமல் காணப்படும்.

இவர்கள் கடினமான வேலைகளை விட சாதுரியமாக செய்கின்ற வேலைகளையே அதிகம் விரும்புவார்கள். எண்ணமும் ஆற்றுகின்ற செயல்கள் ஒன்றாகவே காணப்படும்.

பேசியே தமது காரியங்களை சாதித்து கொள்ளும் இயல்பு இவர்களிடம் உண்டு. அதிகளவான கற்பனை திறன் உடைய இவர்கள் சிறந்த படைப்பாளிகளாக விளங்குவார்கள்.

இவர்கள் பல தடைகளை கடந்து கடுமையாக உழைத்தால் தான் வாழ்வில் முன்னேற முடியும்.

வாழ்வின் பிற்காலத்தில் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். பொதுவாகவே பொறுமையாகவும் அமைதியாகவும் தமது வேலைகளை செய்ய கூடிவர்களாவர்.

இவர்கள் பொதுவாகவே நிலையான சிந்தனை உடையவர்கள் ஆகையால் கொடுத்த வாக்கை எவ்வாறாயினும் காப்பாற்ற கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களது பேச்சு நேர்மையாக இருப்பதனால் பலரது எதிர்ப்புக்களை சந்திக்க வேண்டிய நிலையானது ஏற்படும்.

பொதுவாகவே அன்பாகவும் நெருக்கமாகவும் மற்றவர்களுடன் பழகும் இயல்புடையவர்கள்.

இரகசியங்களை பாதுகாக்க மாட்டார்கள் மனதில் உள்ளதை அப்படியே பேச கூடிய இயல்புடையவர்களாக விளங்குவார்கள்.

வாழ்வில் பெரிய இலக்குகளை உடைய இவர்கள் அவற்றினை அடைந்து கொள்ள கடினமாக உழைப்பார்கள். மகர ராசிகாரர்கள் இவர்களோடு சிறந்த கூட்டாளர்களாக இருப்பார்கள்.

You May Also Like :
துலாம் ராசி குணங்கள்
சிம்ம ராசி குணங்கள்