சிம்ம ராசி குணங்கள்

simha rasi gunangal in tamil

இந்த ராசியில் பிறந்தவர்கள் மகம், பூரம், உத்திரம் போன்ற நட்சத்திரங்களை உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் பல தனித்துவமான இயல்புகளை கொண்டிருப்பார்கள் அவை தொடர்பாக இங்கே நோக்கலாம்.

சிம்ம ராசி குணங்கள்

சூரியனின் ஆதிக்கம் உடையவர்கள் ஆகையால் பிரகாசமாக புகழ்பெற்று விளங்குவார்கள். ராசியின் அதிபதி சூரியன் இதனால் உலகில் புதிய பல விடயங்களை கண்டு பிடிக்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.

பெரிய தலைவர்களாகவும் இந்த ராசிகாரர்கள் விளங்குவார்கள். அதிகாரங்களை அதிக வசப்படுத்த கூடிய ஆளுமை இவர்களுக்கு உண்டு.

சிறந்த ஆளுமை திறன் மற்றும் நிர்வாக திறன் இருப்பதனால் அனைவரையும் கட்டுக்குள் கொண்டுவரும் திறன் உடையவர்கள். இராணுவ வீரர்கள், காவல்துறையினர் அதிகம் இந்த ராசி உடையவர்களாக தான் இருப்பார்கள்.

மிகவும் திறன் உடையவர்களாக இருந்த போதும் குடும்ப வாழ்வில் மற்றவர்களோடு ஒத்துபோக முடியாதவர்கள். தாம் நினைத்த விடயங்கள் நடைபெறாவிட்டால் மிகவும் வருந்துவார்கள்.

மேலும் வாழ்வில் நிறைய தடைகளையும் சவால்களையும் சந்தித்து பக்குவம் அடைந்தவர்களாதலால் காரியங்களில் வெற்றி பெறும் திறன் படைத்தவர்கள்.

தமது கடின முயற்சியால் எதையும் சாதிப்பார்கள் கம்பீரமான தோற்றமும் மிடுக்கான பார்வையும் உடையவர்களான இவர்கள் மற்றவர்களை இலகுவாக கவர கூடியவர்கள்.

வயிறு சார்ந்த நோய்கள் இவர்களை அதிகம் பாதிக்கும். துணிவும் உறுதியான நிலைப்பாடும் உடைய இவர்கள் அதிகம் கோபம் கொள்ளும் இயல்பு உடையவர்களாக இருப்பார்கள்.

அடுத்தவர்களுக்கு மரியாதை கொடுக்கும் நல்லெண்ணம் உடையவர்கள். எந்த ஒரு விடயத்தையும் அலசி ஆராய்ந்து திடமான முடிவுகளை எடுப்பதில் இவர்கள் வல்லவர்கள்.

பிடிவாதமும் கொள்கை பிடிப்பும் உடையவர்களாதலால் இவர்களது முடிவுகளை யாராலும் மாற்ற முடியாது. கொடை குணமும் அஞ்சாத நெஞ்சமும் உடையவர்களாக இருப்பார்கள்.

பொதுவாகவே எதிரிகள் பல தந்திரங்களை மேற்கொண்டாலும் இவர்களை வெல்வது கடினமாகும்.

இனம், மதம் என்ற பேதங்கள் பார்க்காமல் அனைவருக்கும் உதவும் குணம் படைத்தவர்கள்.

இவர்கள் மற்றவர்கள் கண்களுக்கு அதிகார குணம் உடையவர்கள் போல தோற்றம் அளித்தாலும் மனதளவில் பாசமும் அன்பும் நிறைந்தவர்களாக இருப்பர்.

தனக்கு ஏதெனும் அநியாயம் நிகழ்நதால் பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் வெகுண்டு எழும் குணம் இவர்களுக்கு உண்டு. இதனால் இவர்களுக்கு எதிரிகள் அதிகம் இருக்கும்.

அரசு மற்றும் உயர்ந்த இடங்களிலும் அதிகம் செல்வாக்கு நிறைந்த மனிதர்களாக இவர்கள் விளங்குவார்கள். மற்றவர்களது சட்ட திட்ங்களுக்கு அடிபணியாமல் சுதந்திரமாக வாழ விரும்புவார்கள்.

குடும்ப உறுப்பினர்களிடம் இவர்கள் விட்டு கொடுத்து செல்ல மாட்டார்கள் இதனால் குடும்ப உறவுகளில் பிரச்சனைகள் எழவும் வாய்ப்புகள் உண்டு. அடுத்தவர்கள் தமது கருத்துக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்றே எப்போதும் விரும்புவார்கள். இவர்களால் உடன் பிறந்தவர்களுக்கு அதிக ஒத்துழைப்பு கிடைக்கும்.

அடுத்தவர்கள் துன்பங்களில் எதிர்பார்க்காமல் உதவி செய்ய கூடிய பரந்த மனம் உடையவர்களாக இருப்பர். எதையும் நுட்பமாக ஆராய்ந்து தமது வாழ்வில் உயர்நிலையை அடைய கூடியவர்களாவர்.

You May Also Like :
கன்னி ராசி குணங்கள்
துலாம் ராசி குணங்கள்