மகர ராசி குணங்கள்

makara rasi gunangal in tamil

மகர ராசியில் பிறந்தவர்கள் தமக்கென சில தனித்துவமான குணாதிசயங்களை கொண்டிருப்பார்கள். அவை தொடர்பாக இக்கட்டுரையில் விரிவாக நாம் காணலாம்.

மகர ராசி குணங்கள்

மகர ராசியில் பிறந்தவர்கள் எப்பொழுதும் விளையாட்டாக இருப்பதில்லை எல்லா விடயங்களிலும் மிகவும் கவனத்துடனும் அக்கறையுடனும் செயலாற்றுவார்கள்.

தமது காரியங்கள் தொழில் மற்றும் சொந்த விடயங்களில் மிகவும் சிரத்தையோடு சிந்தித்து கொண்டிருப்பார்கள். இவர்களை சிரித்த முகத்தோடு பார்ப்பது அரிது எனவும் கூறலாம்.

அவ்வாறே இந்த ராசியில் பிறந்தவர்கள் சுயமரியாதை உடையவர்களாக இருப்பார்கள். யாருக்கும் வளைந்து கொடுத்து போகாதவர்களாக இருப்பார்கள்.

தங்களது காரியங்கள் வெற்றி பெறவேண்டும் என்பதற்காக தமது உழைப்பை இவர்கள் அதிகம் நம்பி உழைப்பார்கள். தாங்களே கடினமாக உழைத்து ஒரு காரியத்தை சாதிக்க வேண்டும் என்று நினைப்பார்களே தவிர அடுத்தவர்களுக்கு இடையூறாக இருக்க மாட்டார்கள்.

இவர்களது பெறுமதியான சொத்தாக நேர்மை இருக்கின்றது. எந்த தொழிலாக இருந்தாலும் அதில் நேர்மை உடையவர்களாக இவர்கள் இருப்பார்கள். அரச பதவிகளானாலும் தனியார் பதவிகளானாலும் அவற்றில் நேர்மையான அதிகாரிகளாக இவர்கள் விளங்குவார்கள்.

உறவு முறைகளை எடுத்து கொண்டால் தந்தை வழி மற்றும் தாய்வழி உறவுகளிடம் பெரிதாக இவர்கள் நெருக்கம் காட்டமாட்டார்கள். இவர்கள் தங்களது கடமைகளில் அதிகம் மூழ்கி இருப்பதனால் உறவுகளிடத்தில் அந்நியமானவர்களாகவே இருப்பார்கள்.

இவர்கள் புத்திசாலிகள் என்பதை விட உழைப்பாளிகள் என்றே அதிகம் இந்த சமூகத்தில் அறியப்படுகின்றனர். தாம் உழைப்பினால் உயர்ந்தவர்கள் என்ற பெயரையே இவர்களும் அதிகம் விரும்புகின்றனர்.

அதிகம் ஆடம்பரங்கள், கொண்டாட்டங்கள், பகட்டான விடயங்களை அதிகம் விரும்பாத எளிமையான குணம் உடையவர்களாக இவர்கள் விளங்குவார்கள்.

உணவு விடயத்தை பொறுத்தவரையிலும் துரித உணவுகளை அதிகம் விரும்பாது உணவு கட்டுப்பாட்டுடன் இருக்க கூடியவர்களாக இருப்பார்கள்.

இவர்களிடத்திலே தெய்வபக்தியானது இருந்தாலும் கூட அதனை விட தொழில்பக்தி அதிகம் உடையவர்களாக இருப்பார்கள்.

குறுகிய மனம் இல்லாமல் பரந்துபட்ட மனம் உடையவர்களாக இருப்பார்கள் நற்காரியங்கள் செய்வதற்கு உதவிகள் கேட்கும் போது தயங்காமல் பெருந்தன்மையோடு உதவி செய்கின்ற நற்குணம் இவர்களிடம் காணப்படுகின்றது.

இவர்கள் கல்வியறிவினை காட்டிலும் தமது வாழ்வில் பெற்ற அனுபவங்கள் வாயிலாக முன்னேறுவார்கள். ஆரம்பத்தில் தைரியம் என்பது குறைவாக இருந்தாலும் நாளடைவில் இவ்வகையான பல தைரியம் நிறைந்தவர்களாக இவர்கள் வருவார்கள்.

You May Also Like :
கன்னி ராசி குணங்கள்
துலாம் ராசி குணங்கள்