கிருபை என்றால் என்ன

kirubai endral enna

கிறிஸ்தவர்கள் அனேகமாகப் பேசுகின்ற வதார்த்தையாக கிருபை உள்ளது. இது ஆங்கிலத்தில் Grace என்று அழைக்கப்படுகின்றது. நாம் நீதியாக வாழ்வதில் குறைந்து போனாலும் அவருடைய கிருபையினால், அவர் நம்மை மன்னித்து ஆசீர்வதிக்க தயாராக இருக்கிறார்.

கிருபை, தயவு இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் கிரேக்க வேதாகமத்தில் ஒரே வார்த்தையாகவே காணப்படுகின்றது.

கிருபையை பெற தகுதி தேவை இல்லை. கிருபையைக் காத்துக்கொள்ள தகுதிகள் தேவை. கிருபையை காத்துகொள்ளாத துன்மார்கர் பூரணகிருபை வரமான நித்திய ஜீவனை பெறாமல் போவர். பெற்ற கிருபையை போற்றி காத்துகொள்ளுபவர் அதனை பெற்றுகொள்வர்.

கிருபை என்றால் என்ன

தேவனுடைய தன்மைகளில் ஒன்று அவர் கிருபை உள்ளவர் என்பதாகும். கிருபை என்ற வார்த்தையின் உள்ளடக்கம், அதன் மூலம் நாம் பெற்றுக் கொள்ளும் விடுதலையைக் குறிப்பதாக இருக்கின்றது.

கிருபை என்றால் “தகுதியற்றவர்களுக்கு தேவனால் அருளப்படும் ஈவு” என்று பொருளாகும். அதாவது தகுதியில்லாத ஒருவனுக்கு தகுதியான ஒன்றை கொடுப்பது தான் கிருபை என்று சொல்லுகிறார்கள்.

அதாவது நாம் தேவனிடத்திலிருந்து பெற்றுக் கொள்ளுவதற்கு நமக்கு எந்த தகுதியும் இல்லை. அதனால் அவர் கொடுக்கக்கூடிய கிருபையைப் பற்றி கொள்ளுகிறவனாகக் காணப்படுகிறான்.

மேலும் கிருபை என்பதைப் இன்னும் பல வித அர்த்தங்களில் குறிப்பிடுகின்றனர். கிருபை என்றால் ஆற்றல், திறமை, வல்லமை என்றும் சொல்வதைக் காண்கின்றோம்.

எடுத்துக்காட்டு ஒரு மனிதன் நன்கு இசை வாசிப்பவனாக இருக்கலாம், விளையாட்டில் சாதனை படைத்தவனாக இருக்கலாம் இவர்களைப் பார்த்து கிருபை பெற்றவர்கள் அல்லது கிருபை கொடுக்கப்பட்டவர்கள் என்கின்றோம்.

கிருபையின் உருவம்

யோவான் 1:17-ல் வேதாகமம், கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிப்பட்டது என காண்கிறோம். யோவான் 1:14-ல் இயேசுவானவர் “கிருபையினாலும் சத்தியத்தினாலும்” நிறைந்தவராக நமக்குள்ளே வாசம் பண்ணினார்.

வேறுவிதத்தில் சொன்னால், இயேசுவானவர் கிருபையை வெளிப்படுத்தியவர் மட்டுமல்ல. அவரே கிருபையின் உருவமாக இருந்தார்.

யோவான் 1:14-ல் இயேசுவானவர் “கிருபையினாலும் சத்தியத்தினாலும்” நிறைந்தவராக நமக்குள்ளே வாசம்பண்ணினார் என்றும் வாசிக்கிறோம். வேறுவிதத்தில் சொன்னால், இயேசுவானவர் கிருபையை வெளிப்படுத்தினவர் மட்டுமல்ல. அவரே கிருபையின் உருவமாக இருந்தார்.

நியாயப்பிரமாணமும் கிருபையும்

நியாயப்பிரமாணம் என்பது தேவனுக்கு எது பிடிக்கும் என்பதும், எது பிடிக்காது என்பதும் சொல்கின்ற வேத சட்டப் புத்தகமாகும்.

நியாயப்பிரமாணம் மோசேயினால் கொடுக்கப்பட்டது. கிருபையும், சத்தியமும் இயேசு கிறிஸ்துவினால் உண்டாயிற்று (யோவான் 1:17) ரோமர் 8:3 அதெப்படியெனில் மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பரிமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

இப்போது அவருடைய கிருபையை அனுப்பி தமக்கு சித்தமானவரனை தெரிந்துகொண்டு அவனுக்கு கிருபையை அளிக்கின்றார். அதன் மூலம் அந்த மனிதனுக்குள் விசுவாசம் உண்டாகியது.

கர்த்தர் தமக்குப் பயந்து தனது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்குத் தம்முடையக் கிருபையை அளவில்லாமல் ஊற்றுகின்றார். தேவன் தம்மேல் நம்பிக்கையாயிருப்பவர்களுக்கு கிருபைகளை அளித்து ஆசீர்வதிப்பார்.

நாம் தேவனுடைய கிருபையை (தயவை) பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து கற்றுக் கொள்ளுவோம். தேவனுடைய கிருபையையும், சத்தியத்தையும் பற்றிக்கொண்டு விசுவாசத்தோடு வாழ்க்கையில் போராடக் கற்றுக்கொள்வோமாக.

Read more: புனித வெள்ளி என்றால் என்ன

புத்த பூர்ணிமா என்றால் என்ன