முதுமை என்பது இரண்டாவது குழந்தை பருவமாகும். இது மனிதனின் இறுதி பருவமாகும். இப்பருவத்தில் தனது அனைத்து பருவங்களையும் கடந்து முதிர்ச்சி என்ற நிலையை கடந்து தனது இறுதி வாழ்கையை கழிக்கின்றான். ஏறத்தாழ 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதுமை நிலையை அடைந்தவர்கள்.
முதுமை காலத்தில் உடல் செயற்பாடுகள் குறைவடைந்து தோல் சுருக்கம், தசை எடை குறைவு, கண் பார்வை மங்குதல், நரம்பு மண்டலத் தளர்ச்சி, உளவியல் பாதிப்புக்கள் என பல்வேறு உடல் சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.
இப்பருவத்தில் இவர்களை பாதுகாக்க மன உறுதி, ஆன்மீக ஈடுபாடு, தியானம், சிறந்த உடல் நலம், உண்மையான உறவுகள் இவற்றோடு பொருளாதார வசதியும் இருத்தால் இவர்களின் முதுமை பருவம் பாதுகாப்பானதாக அமையும்.
முதுமை நிலை அடைந்த முதியவர்களை கொண்டாடும் வகையில் ஒக்டோபர் மாதம் 01 திகதி முதியோர் தினம் கொண்டாடப்படுகின்றது.
முதுமை வேறு சொல்
- முதிர்ச்சி
- வயதான நிலை
- வயோதிபம்
Read more: மாதுளை இலையின் பயன்கள்