இலந்தை பழத்தின் நன்மைகள் – Elantha Palam

Elantha Palam Benefits In Tamil

இந்த பதிவில் சீனாவை பிறப்பிடமாக கொண்ட “இலந்தை பழத்தின் நன்மைகள்” பற்றி காணலாம்.

சுமார் 30 அடி உயரம் வரை வளரக்கூடிய மரமாகும். வளைந்த கூர்மையான முட்களுடன் பளபளப்பான பச்சை இலைகளும் உடைய சிறு மரம்.

தமிழகத்தின் வறட்சி பகுதிகளில் தானாகவே வளர்கிறது. உரம் தேவையில்லை. சிறிது மழை போதும். குளிர் காலத்தில் பூத்துப் பழமாகும். புளிப்புச் சுவையுடைய பழங்களை உடையது. விதை மிகவும் கெட்டியாக இருக்கும்.

அமரிக்கா, நியுயார்க்கில் அதிகம் காணப்படுகிறது. அங்கு மட்டுமன்றி இந்தியா எங்கும் அதிகம் பரவிக் காணப்படுகிறது. இதில் இருவகையுண்டு. ஒன்று காட்டு இலந்தை. மற்றொன்று நாட்டு இலந்தை.

இலந்தைக்கு குல்லதி, குல்வலி, கோல், கோற்கொடி, வதரி என்று பல பெயர்கள் உண்டு.

இலந்தை பழத்தின் நன்மைகள் (Elantha Palam Benefits In Tamil)

1. எலும்புகள் வலுப்பெற உதவுகின்றது. உடலில் கால்சியம் குறைவதால் எலும்புகள் பலமிழந்து காணப்படும். இலந்தைப் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுப்பெறும், பற்களும் உறுதிபெறும்.

2. இலந்தைப் பழத்தினால் பித்தத்தினால் ஏற்படும் மயக்கமானது தெளிவாகிறது. உடலில் முக்குற்றங்களில் ஒன்றான பித்தம் அதிகரித்தால் தலைவலி, மயக்கம், தலைச்சுற்றல் என பல நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு. இவற்றைப் போக்கி, பித்தத்தைச் சமநிலைப்படுத்தும் குணம் இலந்தைக்கு உண்டு. இலந்தைப் பழம் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் பித்தம் சமநிலையில் இருக்கும்.

3. உடல் வலியைப் போக்க உதவுகின்றது. சிலருக்கு அடிக்கடி உடல்வலி ஏற்படும். பெரும்பாலும் 40 வயதைத் தாண்டியவர்களுக்கே இந்த நிலை ஏற்படும். இந்த உடல்வலியைப் போக்கி உடலைத் தெம்பாக்க இலந்தைப் பழம் நல்ல மருந்தாகும்.

4. செரிமான சக்தியைத் தூண்டச் செய்கிறது. சிறிது சாப்பிட்டாலும் செரிமானம் ஆகாமல் கஷ்டப்படுபவர்களும் இலந்தைப் பழத்தின் விதையை நீக்கிவிட்டு பழச் சதையுடன் மிளகாய், உப்பு சேர்த்து உலர்த்தி எடுத்துக்கொண்டு காலையும், மாலையும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் செரிமான சக்தியைத் தூண்டி, நன்கு பசியை உண்டாக்கும்.

5. உடல் உஷ்ணத்தைத் தடுக்கின்றது. இலந்தை பழம் இயற்கையிலேயே குளிர்ச்சி தன்மை வாய்ந்தது என்பதால் இலந்தைப் பழங்களைச் சாப்பிடுவதால் உடற்சூடு தணிந்து, நீர் சத்து இழப்பை சரி செய்கிறது.

6. ஞாபக சக்தியை ஊக்குவிக்கும். இலந்தை பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலம் நன்மை பயக்கும்.

7. பெண்கள் இலந்தை பழங்களை சாப்பிடுவதால் இரத்த போக்கு அதிகம் ஏற்படாமல் தடுக்கும். பெண்கள் பலருக்கு மாதவிடாய்க் காலங்களில் இரத்த போக்கு அதிகம் ஏற்பட்டு பெண்களை உடலளவிலும் மனதளவிலும் களைப்படையச் செய்வதைத் தடுக்கின்றது.

8. தூக்கமின்மைப் பிரச்சனையைச் சீர்செய்கின்றது. நரம்புகள் சம்பந்தமான குறைபாடுகள் இருப்பவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படும். இலந்தை பழம் நரம்புகளுக்கு வலிமையை தரும் ஆற்றல் பெற்றிருப்பதால் தூக்கமின்மை குறைபாட்டை நீக்கும்.

You May Also Like:
கூகை கிழங்கு பயன்கள்
சதகுப்பை மருத்துவ குணங்கள்