மனம் அமைதி பெற மகத்தான வழிகள்

manam amaithi pera enna seiya vendum

இயந்திரமயமான அமைதியில்லாத உலகில் மனிதர்களாகிய நாமும் அமைதி இல்லாமல் ஓடிக்கொண்டு இருக்கின்றோம். இதனால் நம் உடல் மட்டுமன்றி மனதும் ஓய்வின்றி சோர்வுடன் மன அழுத்தம், மன உளைச்சல், பதற்றம் போன்றனவற்றுக்கு உள்ளாகி உள்ளன.

எனவே இவ்வாறான அழுத்தங்களில் இருந்து விடுபட்டு மனம் அமைதி பெறுவதற்குரிய மகத்தான வழிகள் சிலவற்றைப் பார்ப்போம்.

மனம் அமைதி பெற மகத்தான வழிகள்

#1. மனம் அமைதி இல்லாது கோபம், வெறுப்பு போன்ற உணர்வுகளுக்கு உள்ளாகும் போது கத்தி கோபமாக யாரிடமும் பேசாது கண்களை மூடி அமைதியைப் பேண வேண்டும். அமைதியாக இருந்து சுற்றியுள்ள இயற்கையில் ஒலியை செவிமடுக்க வேண்டும்.

#2. மனதில் சோர்வு உருவாகும் நேரங்களில் எல்லாம் நமக்குள் நாமே கண்களை மூடி “நான் வலிமையானவன் என்னால் இதை செய்ய முடியும்” என்று கூறுதல் நம்முடைய தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு நமக்குள் எதிர்மறையான சிந்தனைகள் உருவாகுவதை தடுக்கும்.

#3. மனம் அமைதி இல்லாமல் குழப்பத்தில் இருக்கும் வேளைகளில் இயற்கையின் அழகை ரசிக்கலாம். முடியுமானால் அருகில் இருக்கும் கோயில், பார்க், மலைகள் போன்ற அமைதிப் பிரதேசங்களுக்கு சென்று தூய்மையான காற்று, இயற்கையான சூரிய ஒளி போன்றவற்றை எல்லாம் சுவாசிப்பதோடு ரசிக்கும் போது நம்மை அறியாமலே நமது மனம் அமைதி பெற்று விடும்.

#4. தோல்வி ஏற்படும் வேளைகளில் எல்லாம் எந்தவொரு தோல்வியின் அனுபவத்தினையும் கற்காமல் வெற்றியினை சுவைக்க முடியாது என்ற உண்மையை நம்மை தேற்றுதல் வேண்டும்.

#5. மனம் குழப்பமடையும் பொழுதுகளில் நம்மை தனிமைப்படுத்தி நம்முடைய ஆழ் மனதுடன் நாங்கள் பேச வேண்டும். கேள்வி கேட்பதன் மூலம் நம்முடைய தேவைகளை நம்மால் நிறைவேற்ற முடியும்.

#6. 5 – 10 நிமிடம் வரை மூச்சினை இழுத்து பின் மெதுமெதுவாக விட வேண்டும். மூச்சுப் பயிற்சியினை தினமும் செய்து வர மனக் குழப்பங்கள் தீர்ந்து மனம் அமைதி பெறத் தொடங்குகிறது.

#7. உள்ளங்கையில் மற்றக் கையின் கட்டை விரலால் தொடர்ந்து அழுத்தி முழுவதுமாக மசாஜ் தொடர்ச்சியாக 10 நிமிடங்கள் வரை செய்து கொண்டிருத்தல் மன அழுத்தத்தைப் போக்கி மன அமைதிக்கு வழி வகுக்கிறது.

#8. நாம் புன்னகைக்கும் ஒவ்வொரு நொடிப் பொழுதிகளிலும் நரம்புகளில் தொடங்கும் மெல்லதிர்வுகள் முகத்திலுள்ள தசைகளை அசைத்து பாதுகாப்பான உணர்வை மூளைக்கு கொண்டு செல்லும் செயற்பாடு நடைபெறும். எனவே இயலுமானவரை எப்போதும் புன்னகையுங்கள். இது உங்கள் மன அமைதிக்கு பெரிதும் வழி வகுக்கும்.

#9. பலரும் விரும்பிக் குடிக்கும் பானங்களில் ஒன்று காபி. மன அழுத்தம், மனக் குழப்பம் ஏற்படும் வேளைகளில் இயலுமானவரை காபி குடிப்பதைத் தவிர்க்குமாறு ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#10. நறுமணம் தரும் மலர்கள் , எண்ணெய் வகைகளை சுகமாக நுகர்ந்து மனதை லேசாக்குவதோடு புத்துணர்ச்சிக்காக பழச்சாறு, தண்ணீர் போன்ற பானங்களை பருகுவது சிறந்தது.

மன அழுத்தம், மனக்குழப்பம் போன்றவற்றோடு மன அமைதியைத் தொலைத்து விட்டு தேடுபவர்கள் மேலே குறிப்பிட்ட வழிகளைப் பின்பற்றி பயன் பெறுவீர்களாக.

Read more: மாதவிடாய் தள்ளி போக காரணங்கள்

கொட்டாவி ஏன் வருகிறது